கோடைகாலத்தில் முட்டை சாப்பிடலாமா..நிபுணர்கள் கூறுவது என்ன?

காலை நேர உணவில் முட்டையை சேர்த்துக்கொள்வதன் மூலம் நம்மை நீண்ட நேரம் பசியில்லாமல் இருக்க செய்ய உதவுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Jun 15, 2022, 03:35 PM IST
  • குறிப்பிட்ட உணவுப்பொருட்கள் இயற்கையாகவே குளிர்ச்சியை கொண்டிருக்கும்.
  • முட்டை உடலுக்கு சூட்டை ஏற்படுத்தும் என்பதால் அதனை அதிகமாக உட்கொள்ளக்கூடாது.
  • கோடைகாலத்தில் முட்டைகளை அதிகமாக சாப்பிடுவதால் குடல் மற்றும் செரிமான மண்டலத்தில் பாதிப்பு ஏற்படும்.
கோடைகாலத்தில் முட்டை சாப்பிடலாமா..நிபுணர்கள் கூறுவது என்ன? title=

காலை நேரத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான உணவாக முட்டை கருதப்படுகிறது.  இது உடலுக்கு வேண்டிய புரதம், வைட்டமின்கள், கனிமங்கள் போன்ற பல சத்துக்களை கொடுக்கிறது, இவை நமது உடலின் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.  நாம் சாப்பிடும் முட்டையில் உயர் புரதம், வைட்டமின் பி2, வைட்டமின் பி12, வைட்டமின் டி, செலனியம், அயோடின், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, போலேட், பயோட்டின், பாஸ்பரஸ் போன்ற பலவகையான ஊட்டசத்துக்கள் நிரம்பியுள்ளன.  இயற்கையாகவே முட்டை சூடானது என்பதால் கோடைகாலத்தில் முட்டை சாப்பிடக்கூடாது, அது உடலில் தீய விளைவுகளை ஏற்படுத்தும் என்கிற ஒரு கருத்து நிலவி வருகிறது.  மேலும் முட்டை சாப்பிடுவது முகப்பரு மற்றும் வயிறு சம்மந்தப்பட்ட நோய்களை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | Cholesterol: கொலஸ்ட்ராலை குறைக்க இந்த உடற்பயிற்சி போதும்

குறிப்பிட்ட உணவுப்பொருட்கள் இயற்கையாகவே குளிர்ச்சியை கொண்டிருக்கும், குறிப்பிட்ட உணவுப்பொருட்கள் இயற்கையாகவே சூடான தன்மையை கொண்டிருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.  ஆனால் அந்தந்த காலத்திற்கு ஏற்ப தான் நாம் அந்தந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது கட்டாயமில்லை.  அதேபோல முட்டை சாப்பிடுவது நமக்கு உடலுக்கு நன்மையளிக்கிறது, அதனை எந்த காலத்திலும் சாப்பிடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.  அதே சமயம் முட்டை உடலுக்கு சூட்டை ஏற்படுத்தும் என்பதால் அதனை அதிகமாக உட்கொள்ளக்கூடாது.

கோடைகாலத்தில் முட்டைகளை அதிகமாக சாப்பிடுவதால் குடல் மற்றும் செரிமான மண்டலத்தில் பாதிப்பு ஏற்படும்.  ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முட்டைகளை சாப்பிடலாம், மேலும் இதனுடன் தண்ணீர், பழங்கள் போன்றவற்றையும் எடுத்துக்கொள்வது உடலுக்கு குளிர்ச்சியை தரும்.  கோடையில் உடலில் நீரிழப்பு ஏற்படுவதை முட்டை தடுப்பதுடன், உடலில் திரவ சமநிலையை பராமரிக்கிறது.  தினமும் முட்டை சாப்பிடுவதால் உடல் சோர்வு மற்றும் பலவீனம் அடைவது தடுக்கப்படுகிறது.  காலை நேரத்தில் முட்டை சாப்பிடுவது நம்மை நீண்ட நேரம் பசியில்லாமல் செய்ய உதவுகிறது, மேலும் இதிலுள்ள சத்துக்கள் இதய சம்பந்தமான குறைபாடுகளை நீக்க உதவுகிறது.

மேலும் படிக்க | Weight Loss: கிடுகிடுவென அதிகரிக்கும் எடையை மடமடவென குறைக்க கிவி பழம் உதவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News