உடல் எடையை உடனே குறைக்க உதவும் ஆயுர்வேத மேஜிக்: உங்க கிச்சனிலேயே இருக்கு

Weight Loss Tips: சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். உடல் எடையை குறைக்க, உணவு மற்றும் உடற்பயிற்சியுடன், இந்த ஆயுர்வேத வைத்தியங்களையும் முயற்சிக்கலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 23, 2024, 12:22 PM IST
  • பார்லியில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
  • உடல் எடையை குறைக்க இதை உட்கொள்ளலாம்.
  • பார்லியை உட்கொள்வதால் உடல் பருமன் குறைவது மட்டுமின்றி, சர்க்கரை நோய் மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்தலாம்.
உடல் எடையை உடனே குறைக்க உதவும் ஆயுர்வேத மேஜிக்: உங்க கிச்சனிலேயே இருக்கு title=

Weight Loss Tips: உடல் பருமன் இந்த காலத்தில் பலரை பாடாய் படுத்தும் ஒரு பிரச்சனையாக உள்ளது. கடந்த சில தசாப்தங்களில் இது மிக வேகமாக அதிகரித்து விட்டது. மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. தொப்பை கொழுப்பும் (Belly Fat) உடல் எடையும் அதுகரித்து விட்டால், அவற்றை சரி செய்வது பிரம்ம பிரயத்னமாகவே உள்ளது. 

உடல் எடை அதிகரிப்பதால் நம் உடலில் பல வித பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. உடல் பருமன் காரணமாக, சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற கடுமையான நோய்களும் நம்மை தாக்குகின்றன. ஆகையால், உடல் எடை அதிகரிக்கத் தொடங்கும் போதே இதை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது மிக அவசியமாகும். 

உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மெற்கொள்கிறார்கள். எனினும், சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். உடல் எடையை குறைக்க, உணவு மற்றும் உடற்பயிற்சியுடன், இந்த ஆயுர்வேத வைத்தியங்களையும் முயற்சிக்கலாம். 

ஆயுர்வேதம்

ஆயுர்வேதத்தில் உடல் எடையை குறைக்கும் சக்தி வாய்ந்த பல விஷயங்கள் உள்ளன. இதில் சிறப்பு என்னவென்றால், உடல் பருமனுக்கான இந்த ஆயுர்வேத தீர்வுகளைத் தேடி நாம் எந்த கடைகளுக்கும் செல்ல வேண்டியதில்லை. இவை நம் வீட்டு சமையலறைகளிலேயே காணப்படுகின்றன. கொழுப்பை எரித்து கூடுதல் கலோரிகளை எரிக்க இவை உதவுகின்றன. இவை எடை இழப்பில் (Weight Loss) உதவுவதோடு, ஹார்மோன் சமநிலை, இன்சுலின் உணர்திறன், கொலஸ்ட்ரால் (எல்டிஎல்) கட்டுப்பாடு ஆகியவற்றோடு கொழுப்புக் கட்டிகளை  குறைப்பதிலும் பயனுள்ளதாக இருக்கின்றன. 

உடல் எடையை குறைக்க ஆயுர்வேதம் நமக்களித்த இந்த அற்புத பொருட்களை பயன்படுத்தினால் போதும்

தேன்: ஆயுர்வேதத்தின் படி, தேன் (Honey) நம் உடலில் சேர்ந்துள்ள கொழுப்பை எரிக்க பயன்படுகிறது. சுவையில் இனிப்பாகவும், சூடாகவும், வறண்ட தன்மையுடனும் இருக்கும் தேன், எளிதில் ஜீரணமாகி சளியைக் குறைக்கும். உடல் எடையை குறைக்க, தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து உட்கொள்ளவும்.

மேலும் படிக்க | குரங்கு அம்மையின் அபாய அறிகுறிகள் இவைதான்: அலட்சியம் காட்ட வேண்டாம்

பார்லி: பார்லியில் (Barley) பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. உடல் எடையை குறைக்க இதை உட்கொள்ளலாம். பார்லியை உட்கொள்வதால் உடல் பருமன் குறைவது மட்டுமின்றி, சர்க்கரை நோய் மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்தலாம். இது தவிர, செரிமானம், நினைவாற்றல் மற்றும் உடல் வலிமையையும் இது மேம்படுத்துகிறது. 

மஞ்சள்: இயற்கையிலேயே உஷ்ணத்தன்மை கொண்ட மஞ்சள் (Turmeric), உடலில் உள்ள நச்சுகளை நீக்கும் ஆற்றல் கொண்டது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. மஞ்சள், இருமல் மற்றும் சளியைக் குறைக்கவும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. உடல் பருமனை குறைக்க, வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் தேன் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சளை நெல்லிக்காயுடப் சேர்த்து சாப்பிடலாம்.

ஆம்லா: இது மூன்று வித தோஷங்களான வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகியவற்றை சமன் செய்து உடலை அமைதிப்படுத்துகிறது நெல்லிக்காய் (Amla) உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கின்றது. இதை தினமும் உட்கொள்வதால் உடல் எடை குறைவதோடு, நீரிழிவு, முடி உதிர்தல் மற்றும் அமிலத்தன்மை ஆகிய பிரச்சனைகளுக்கும் நிவாரணம் கிடைக்கும். 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு... சர்க்கரை நோய்க்கு எமனாகும் சில காய்கறிகள்...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News