அதிக கொலஸ்ட்ரால் என்பது உயிருக்கு ஆபத்தான சுகாதார நிலை. அதை சரியான நேரத்தில் கவனித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மருத்துவரிடம் தவறாமல் பரிசோதித்துக் கொள்வது, மருத்துவர் கொடுக்கும் மருந்துகளை சரியான நேரத்தில் உட்கொள்வது, மற்ற வழிமுறைகளைப் பின்பற்றுவது, முறையான உணவுமுறை மற்றும் முறையான உடற்பயிற்சி போன்றவை அதிக கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். இருப்பினும், இவை அனைத்தையும் தவிர, சில வீட்டு வைத்தியங்களை கடைபிடிப்பதும் பலன் தரும். இது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் குவிவதைத் தடுப்பதில் மிகவும் திறம்பட செயல்படுகிறது ஆயுர்வேதத்தில் பல சிறப்பு மூலிகை பொருட்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் சில அதிக கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. அவற்றில் ஒன்று கடுக்காய். உங்கள் உடலில் அதிக கொழுப்பு இருந்தால் அல்லது குடும்பத்தில் வேறு யாருக்காவது கெட்ட கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால், இந்த வீட்டு வைத்தியம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கெட்ட கொலஸ்ட்ராலை எரிக்கும் கடுக்காய்
எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ராலை (Cholesterol Home Remedies) எரிப்பதில், கடுக்காய், ஒரு சிறந்த மருந்தை போல் செயல்படும். அதிக கொலஸ்ட்ரால் நோயாளிகள் எந்த கவலையும் இல்லாமல் இதைப் பயன்படுத்தலாம். ஆயுர்வேத நிபுணர்கள் கடுக்காயை சரியாக உட்கொள்வது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது என்று நம்புகிறார்கள். அதே சமயம், உங்கள் இதயத்த்தின் செயல்பாட்டை தூண்டக்கூடிய பல சிறப்புக் கூறுகள் கடுப்பாயில் காணப்படுவதாகவும் சில மருத்துவ ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதய நாளங்களில் தேங்கியிருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் வெளியேறத் தொடங்குகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைகிறது. இதய ஆரோக்கியம் (Heart Health) மேம்படுகிறது
கடுக்காயை எடுத்துக் கொள்ளும் சரியான முறை
அதிக கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு கடுக்காயை பயன்படுத்துவது மிகவும் எளிதானது. இருப்பினும், இது கசப்பாக இருக்கும், எனவே சாப்பிட கடினமாக இரு க்கலாம். ஆனால் நீங்கள் அதன் தூளை தயார் செய்யலாம், இதனை வெதுவெதுப்பான நீரில் கலந்து எடுத்துக் கொள்ளலாம். இது தவிர, ஒரு கடுக்காயை இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக உடைத்து, இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில், கடுக்காயை எடுத்து விட்டு, இந்த தண்ணீரை உட்கொள்ளவும்.
மேலும் படிக்க | ஒரே வாரத்தில் உடல் எடை குறைய... சியா விதைகளை இப்படி சாப்பிடுங்க போதும்
உணவில் கடுக்காயை சேர்த்துக் கொள்ளும் முறை
அதிக கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு இது ஒரு ஸ்பெஷல் வீட்டு வைத்தியம், இதை மருந்தாக மட்டும் இல்லாமல் உணவில் கலந்து சாப்பிடலாம். வெதுவெதுப்பான நீரில் கடுக்காய் பொடியை எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, சிறிது பழச்சாறு அல்லது உணவில் கலந்தும் எடுத்துக் கொள்ளலாம். இப்படிச் செய்வதால் அதன் கசப்புச் சுவை அதிகம் தெரியாது.
மருத்துவரின் ஆலோசனை அவசியம்
அதிக கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு பல வீட்டு வைத்தியங்கள் உள்ளன, அவை மிகவும் திறம்பட செயல்படுகின்றன. அவற்றில் ஒன்று கடுக்காய். ஆனால் அதிக கொலஸ்ட்ரால் என்பது ஒரு நாள்பட்ட நோயாகும், இது தொடர்ந்து பரிசோதிக்கப்படாவிட்டால், மாரடைப்பு முதல் பக்கவாதம் போன்ற அபாயகரமான நோய்களுக்கு வழிவகுக்கும், எனவே தவறாமல் மருத்துவரை அணுகுவது அவசியம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் சிகிச்சை அல்லது மருந்துகளுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படக்கூடாது. அதை உட்கொள்ளும் முன் அல்லது எந்த வகையிலும் பயன்படுத்துவதற்கு முன், மருத்துவரின் ஆலோசனை அவசியம்.
மேலும் படிக்க | Pirola: உலகையே அதிர வைக்கும் புதிய கொரோனா வைரஸ்! இந்த அறிகுறிகள் இருக்கா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ