நாம் கோவில் சன்னதியில் இறைவனை தரிசிக்கும் பொது கண்களை மூடியபடி பிராத்தனை செய்யலாமா?
சன்னிதியில் நின்று சுவாமியை தரிசிப்பது சில மணித்துளிகள் தானே. அந்த நேரத்திலும் கண்ணை மூடிக் கொண்டு நின்றால் எப்படி கடவுளைக் கண்ணாரக் காண முடியும். சிதம்பரம் கோவிலுக்கு சுந்தரர் வரும் போது, நடராஜப்பெருமானின் (Lord Shiva) ஆனந்தக் கூத்தினைக் காண்கிறார்.
கண்களை இமைக்காமல் அப்படியே மெய் மறந்து நின்று விட்டார். இக்காட்சியை சேக்கிழார் 'ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள' எனத் துவங்கி 'தனிப்பெரும் கூத்தினைக் கண்டு மகிழ்ந்தார்' எனப் பாடி முடிக்கிறார். எனவே சன்னிதியில் நிற்கும்போது கண் மூடி நிற்காமல், தரிசனம் முடித்தபின், கொடிமரம் அருகில் அமர்ந்து சிறிது நேரம் கண் மூடி தியானம் செய்ய வேண்டும்.
ALSO READ | திருமணத்தில் தாலி கட்டும்போது மூன்று முடிச்சு போடுவது ஏன்?
கோயில்களுக்குச் செல்லும்போது, அங்கே அமர்ந்திருக்கும் ஏழைகளுக்கு உணவோ, பணமோ தானம் செய்வது உண்டு. அந்த தானத்தை கோயிலுக்குள் செல்லும்போது கொடுப்பதா அல்லது தரிசனம் முடிந்து வெளிவரும்போது கொடுக்க வேண்டுமா?
கோயிலுக்கு நாம் போகும்போது பகவானை நினைத்துக்கொண்டு போகிறோம். திரும்பி வரும்போதும் பகவானை நினைத்துக் கொண்டுதான் வருகிறோம். தர்மம் எப்போது வேண்டுமானாலும் பண்ணலாம். நமக்கு வசதி இருக்கும்போது பண்ணலாம். கோயில் வாசலில் இருப்பவர்களுக்குத்தான் தர்மம் பண்ண வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. வீடு தேடி வருபவர்களுக்கும் பண்ணலாம்.
கோயிலுக்குப் போவதற்கும் அங்கே உட்கார்ந்து இருப்பவர்களுக்கு தர்மம் செய்வதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உண்மையைச் சொல்லப் போனால், கோயில் வாசலில் ஒரு கும்பல் தர்மத்தை எதிர்பார்த்து உட்கார்ந்திருப்பதே நமது கலாசாரத்துக்குப் புறம்பான ஒரு விஷயம். அது நமது சமுதாயத்துக்கே குறை. நமது வீட்டு வாசலுக்கு வந்து கேட்பவரிடம் ‘‘போட்டாச்சு, போ!’’ என்று சொல்லும் தைரியம் நமக்கு உண்டு. ஆனால், கடவுளைக் கும்பிட்டு வரும்போது ‘இல்லை’ என்று சொல்ல நாம் தயங்குவோம்.
இந்த பலகீனத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் வியாபார யுக்திதான் கோயில் வாசலில் பிச்சைக்கு உட்காருவது. கோயிலில் கொடுப்பது மனமுவந்து கொடுக்கிற தர்மமே இல்லை. தர்மம் என்பதை வீட்டிலேயே செய்ய வேண்டும். இதில் முன்னாடி கொடுப்பதா, பின்னால் கொடுப்பதா என்கிற குழப்பத்துக்கு இடமே இல்லை.!
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR