சாமானியர்களுக்கு என்ன நன்மை? புதிய வருமான வரி மசோதா 2025 குறித்து 10 முக்கியமான விஷயங்கள்!

New Income Tax Bill News: புதிய வரி மசோதா: புதிய வரி மசோதா இன்று சமர்ப்பிக்கப்படும்.. சாமானிய மக்களுக்கு என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளுங்கள். 

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 13, 2025, 10:57 AM IST
சாமானியர்களுக்கு என்ன நன்மை? புதிய வருமான வரி மசோதா 2025 குறித்து 10 முக்கியமான விஷயங்கள்! title=

10 Points About New Income Tax Bill 2025: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நாட்டிய அரசாங்கம் புதிய வருமான வரி மசோதாவை (New Income Tax Bill 2025) மக்களவையில் அறிமுகப்படுத்த இதன்மூலம் உள்ளது. 63 ஆண்டுகளுக்குப் பிறகு வருமான வரிச் சட்டம் 1961 ரத்து செய்யப்படும். இந்த புதிய வருமான வரி மசோதாவில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

புதிய வருமான வரிச் சட்டம் 2025 என்பது முன்பு இருந்த வருமான வரிச் சட்டத்தை விட எளிமையாகவும், வெளிப்படையாகவும், வரி செலுத்துவோருக்கு ஏற்றதாகவும் மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் டிஜிட்டல் மயமாக்கல், வரி செலுத்துதல் முதல் வரி ஏய்ப்பு தொடர்பான விதிகளை மிகவும் கடுமையாக்குவது என முன்மொழியப்பட்டுள்ளது. இந்த புதிய வருமான வரி மசோதா 2025 பற்றிய 10 முக்கிய விஷயங்களை தெரிந்து கொள்வோம்.

1. புதிய வருமான வரி சட்டம் vs பழைய வருமான வரி சட்டம்

புதிய வருமான வரி மசோதாவில் உள்ள முதல் மற்றும் முக்கிய மாற்றம் என்னவென்றால், இது முன்பை விட சுருக்கமாகவும், சாதாரண மக்களுக்குப் புரியும் வகையில் எளிதாகவும் மாற்றப்பட்டுள்ளது. உதாரணமாக, 1961 வருமான வரி மசோதா 880 பக்கங்களைக் கொண்டிருந்தது. ஆனால் ஆறு தசாப்தங்களுக்குப் பிறகு, அதில் உள்ள பக்கங்களின் எண்ணிக்கை இப்போது 622 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. புதிய வரி மசோதாவில் 536 பிரிவுகளும் 23 அத்தியாயங்களும் உள்ளன.

2. புதிய வருமான வரி சட்டத்தில் நிலையான விலக்கு கிடைக்குமா?

புதிய வரி மசோதாவின் கீழ், நீங்கள் சம்பளம் வாங்கும் நபராக இருந்தால், பழைய வரி முறையின் கீழ் ரூ.50,000 நிலையான விலக்கு தொடர்ந்து பெறுவீர்கள். ஆனால் நீங்கள் புதிய வரி முறையை தேர்வுசெய்தால், உங்களுக்கு விலக்கு ரூ.75,000 வரை கிடைக்கும். மேலும் புதிய வரி முறையின் கீழ் வரி அடுக்கில் எந்த மாற்றமும் இருக்காது. 

4 லட்சம் வரை வருமானத்திற்கு வரி இல்லை.
4 லட்சதிற்கு மேல் முதல் 8 லட்சம் வரை 5% வரி.
8 லட்சதிற்கு மேல் முதல் 12 லட்சம் வரை 10% வரி.
12 லட்சதிற்கு மேல் முதல் 16 லட்சம் ரூபாய் வரை 15% வரி
16 லட்சதிற்கு மேல் முதல் 20 லட்சம் வரை 20% வரி.

3. ஓய்வூதியம், பிஎஃப் பங்களிப்பு மற்றும் காப்பீடு வரி சலுகை

புதிய வருமான வரி மசோதாவின் கீழ், ஓய்வூதியம், தேசிய ஓய்வூதியத் திட்ட பங்களிப்பு மற்றும் காப்பீடு மீதான வரி விலக்கு தொடரும். ஓய்வூதிய நிதி, கிராஜுவிட்டி மற்றும் பிஎஃப் பங்களிப்பும் வரி விலக்கின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. ELSS மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கும் வரிச் சலுகை வழங்கப்படும்.

4. விவசாய வருமானத்திற்கு வரி விலக்கு கிடைக்குமா?

புதிய வரி மசோதாவில், சில நிபந்தனைகளின் கீழ் விவசாய வருமானம் வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. மத அறக்கட்டளைகள், என்ஜிஓ நிறுவனங்கள் மற்றும் நன்கொடைகளுக்கு வழங்கப்படும் பணத்திற்கு வரி விலக்கு கிடைக்கும். மேலும் தேர்தல் நிதிக்கும் வரி விலக்கு அளிக்கப்படும்.

5. வரி செலுத்த E-KYC கட்டாயம்?

புதிய வரி மசோதா மூலம் தற்போதுள்ள வரி முறையை டிஜிட்டல் மயமாக்கவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது. இதற்காக, e-KYC மற்றும் ஆன்லைன் வரி செலுத்துதல் கட்டாயமாக்கப்படுகிறது. மின்னணு தாக்கல் முறையை கட்டாயமாக்குவது வரி செலுத்துதலில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும்.

6. வரி ஏய்ப்பு செய்தால் கடும் அபராதம்

புதிய வரி மசோதாவில், வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது அதிக கண்டிப்பு மற்றும் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதாவது தேவைப்பட்டால் வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது வழக்குத் தொடரலாம். வரி செலுத்தத் தவறினால் அதிக வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படலாம். ஒருவர் தனது வருமானத்தை மறைக்க முயன்றால், அவரது கணக்கு பறிமுதல் செய்யப்படலாம். இது தவிர, தவறான அல்லது முழுமையற்ற தகவலை வழங்குவதற்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்.

7. மத்திய நேரடி வரிகள் வாரியத்திற்கு (CBDT) முழு அதிகாரம்

வருமான வரிச் சட்டம், 1961 உடன் ஒப்பிடும்போது புதிய வரி மசோதாவில் அடுத்த பெரிய மாற்றம் பார்க்கப்படுவது, மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) அதிகாரம் குறித்து தான். புதிய மசோதாவின்படி, முன்னதாக வருமான வரித் துறை பல்வேறு வரித் திட்ட பணிகளை மேற்கொள்ள நாடாளுமன்றத்தை அணுக வேண்டியிருந்தது. ஆனால் புதிய வரிச் சட்டம் 2025 இன் படி, இப்போது CBDTக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. அதாவது மத்திய நேரடி வரிகள் வாரியத்திற்கு, வரி நிர்வாக விதிகள், இணக்க வழிமுறைகள், டிஜிட்டல் வரி கண்காணிப்பு அமைப்பு போன்ற பணிகளை முடிவு செய்ய முழு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. இதமூலம் அதிகார சிக்கலை நீக்கப்படும். 

8. வரி ஆண்டு என்ற வாரத்தை பயன்படுத்தப்படும்

இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய மசோதாவில் வரி ஆண்டு என்ற கருத்து அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது இதுவரை பயன்படுத்தப்பட்ட 'முந்தைய ஆண்டு' என்ற வார்த்தையை 'வரி ஆண்டு' என்று மாற்றப்பட்டு உள்ளது. பொதுவாக, வரி செலுத்தும் போது, ​​வரி செலுத்துவோர் மதிப்பீடு மற்றும் நிதியாண்டு குறித்து குழப்பமடைவது வழக்கம், ஆனால் இப்போது இவை நீக்கப்பட்டு வரி ஆண்டு மட்டுமே பயன்படுத்தப்படும். உதாரணமாக, ஏப்ரல் 1, 2025 முதல் மார்ச் 31, 2026 வரை, வரி ஆண்டு 2025-26 ஆக இருக்கும். அதாவது, நிதியாண்டின் முழு 12 மாதங்களும் இப்போது வரி ஆண்டு என்று அழைக்கப்படும்.

9. மூலதன ஆதாய விகிதங்கள் மாற்றமா?

பங்குச் சந்தைக்கான குறுகிய கால மூலதன ஆதாயங்களின் காலத்தில் வரைவில் எந்த மாற்றமும் இல்லை. பிரிவு 101(b) இன் கீழ், 12 மாதங்கள் வரையிலான காலம் குறுகிய கால மூலதன ஆதாயமாகக் கருதப்படும். இது தவிர, அதன் விகிதங்களும் அப்படியே வைக்கப்பட்டுள்ளன. குறுகிய கால மூலதன ஆதாய வரி 20 சதவீதமாக வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நீண்ட கால மூலதன ஆதாய வரி 12.5 சதவீதமாக இருக்கும்.

10. வரி தொடர்பான சிக்கலை குறைக்கலாம்?

1961 ஆம் ஆண்டு வரி மசோதாவில் உள்ள பல தெளிவற்ற விதிகள் வரி செலுத்துவோருக்கும் அரசாங்கத்திற்கும் இடையே பல சிக்கலுக்கு வழிவகுத்தன. மேலும் வரி செலுத்துவது தொடர்பான் புகார்களும் அதிகரிக்க வழிவகுத்தன. புதிய வரி மசோதா தெளிவான விதிகள் மற்றும் எளிதான வார்த்தைகளுடன் அறிமுகப்படுத்தப்படுகிறது. இது புரிந்துகொள்வதை எளிதாக்குவதோடு, சிக்கலிகளின் எண்ணிக்கையையும் குறைக்கும்.

மேலும் படிக்க - மக்களவையில் தாக்கல் செய்யப்படும் புதிய வருமான வரி மசோதா.. அதன் சிறப்பம்சங்கள்!

மேலும் படிக்க - வருமான வரியை சேமிக்கணுமா? பலருக்கு தெரியாத 4 வழிகள் இதோ

மேலும் படிக்க - இனி யாரெல்லாம் வரி கட்ட தேவையில்லை? பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News