லக்னோ(Lucknow): மும்பை திரைப்படத்துறை, நாட்டில் மட்டுமல்ல உலகின் மிகப்பெரிய இந்தி திரைப்படத் துறையாக அறியப்படுகிறது. இப்போது அதற்கு போட்டியாக, நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிக அழகான ஃபிலிம் சிட்டி ( film city) உருவாக்கப்படும் என உத்திர பிரதேசம் இப்போது அறிவித்துள்ளது. கவுதம்புத் நகர் மாவட்டத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் இது அமைக்கப்படும். இது தில்லி தலைநகர் வலைய பகுதியை சேர்ந்தது என்பது கூடுதல் சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது.
லக்னோவில், வீடியோ கான்பரன்சிங் மூலம் உயர் அதிகாரிகளை வெள்ளிக்கிழமை சந்தித்தபோது, முதல்வர் யோகி ஆதித்யநாத் (Yogi Adityanath ), தற்போதைய சூழ்நிலைகளில், நாட்டுக்கு ஒரு நல்ல ஃபிலிம் சிட்டி தேவை என்று கூறினார். ஒரு சிறந்த ஃபிலிம் சிட்டி இங்கே உருவாக்கப்படும். இதற்காக, நொய்டா, கிரேட்டர் நொய்டா மற்றும் யமுனா அதிவேக நெடுஞ்சாலை பகுதி சிறப்பான தேர்வாக இருக்கும் என்றார். இந்த திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ஒரு சிறந்த மாற்றுத் தேர்வை வழங்கும், அத்துடன் இதன் மூலம் வேலைவாய்ப்புகளும் பெருகும். இதுதொடர்பாக, நிலத்திற்கான விருப்பங்களுடன் கூடிய விரைவில் ஒரு செயல் திட்டத்தை தயாரிக்க அவர் பணித்தார்.
ALSO READ | கேரளா மேற்குவங்களத்தில் பயங்கரவாதிகள் கைது.. NIA அதிரடி நடவடிக்கை..!!!
முதல்வர் யோகி மீரட் (Meerut) பிரிவில் அதாவது, மீரட், ஹப்பூர், பாக்பத், கவுதம் புத் நகர், காஜியாபாத், புலந்த்ஷர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளை வெள்ளிக்கிழமை மாலை தனது அரசு இல்லத்தில் ஆய்வு செய்தார். கைலாஷ் மன்சரோவர் கட்டிடத்தின் கட்டுமான நிலையை மதிப்பாய்வு செய்த முதலமைச்சர், காசியாபாத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள மையத்தின் கட்டுமான பணிகளை விரைவில் தொடங்குமாறு அறிவுறுத்தினார். மீரட் மற்றும் காசியாபாத்தை ஸ்மார்ட் நகரங்களாக உருவாக்கும் திட்டம் மிக முக்கியமானது என்று யோகி கூறினார். அதை விரைவாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
ALSO READ | Love Jihad: மத மாற்ற தடை சட்டம் கொண்டு வருகிறது யோகி அரசு..!!!
மாநிலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளின் (Expressway) நெட்வொர்க்கை மாநில அரசு உருவாக்கி வருவதாக முதல்வர் கூறினார். டெல்லி-மீரட் அதிவேக நெடுஞ்சாலையின் (Delhi-Meerut Expressway) முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்த அவர், இந்த பணியை 2020 டிசம்பருக்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR