Union Budget 2025: இன்னும் சில நாட்களில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார். பெண்கள், மாணவர்கள், நடுத்தர மக்கள், அரசு ஊழியர்கள், மூத்த குடிமக்கள் என பலதரப்பட்ட மக்களுக்கு இந்த பட்ஜெட்டில் பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. தங்களுக்கான நல்ல செய்தி பட்ஜெட்டில் வரும் என அனைத்து துறையினரும் காத்திருக்கிறனர்.
Budget 2025 Expectations: பட்ஜெட் 2025 எதிர்பார்ப்புகள்
இந்த ஆண்டு பட்ஜெட்டில் அடல் ஓய்வூதியத் திட்டம் (APY) குறித்து அரசாங்கம் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூகப் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன், இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை அரசாங்கம் இரட்டிப்பாக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.
Atal Pension Scheme: அடல் பென்ஷன் திட்டம்
தற்போது, அடல் பென்ஷன் திட்டத்தில் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத் தொகை ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை உள்ளது. பயனாணிகளுக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பது அவர்களது பங்களிப்பைப் பொறுத்தது. ஓய்வூதியத் தொகையின் வரம்பை அரசு இப்போது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Minimum Monthly Pension: மாதாந்திர ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்க அரசு திட்டம்
- இந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தை அதிகரிக்கும் திட்டத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளிக்கக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- குறைந்தபட்ச உத்தரவாதத் தொகையை ரூ.10,000 ஆக உயர்த்தும் திட்டம் இறுதி கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.
- கடந்த பட்ஜெட்டிலேயே இதற்கான எதிர்பார்புகள் அதிகமாக இருந்தன.
- இந்த பட்ஜெட்டில் இது அறிவிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.
Atal Pension Yojana: அடல் ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?
அடல் ஓய்வூதியத் திட்டம் (APY) என்பது அரசாங்கத்தின் ஓய்வூதியத் திட்டமாகும். இது ஏழைகளுக்கும், அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்களுக்கும் அவர்களின் வயதான காலத்தில் நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2015-16 ஆம் ஆண்டில் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில், பணம் டெபாசிட் செய்பவர்களுக்கு தற்போது மாதந்தோறும் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை ஓய்வூதியம் கிடைக்கிறது.
இந்த திட்டத்தின் மிகப்பெரிய அம்சம் என்ன?
அடல் ஓய்வூதிய திட்டத்தின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், பயனாளி இறந்தால், நாமினியாக பரிந்துரைக்கப்பட்டவருக்கு முழுப் பணமும் கிடைக்கும். அடல் ஓய்வூதிய திட்டத்தில் கணக்கைத் திறக்க, பயனாளிக்கு வயது 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களிடம் சொந்தமாக வங்கிக் கணக்கு இருக்க வேண்டும்.
APY: அடல் ஓய்வூதியத் திட்டத்தில் சேருவது எப்படி?
- இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள, முதலில் உங்கள் சேமிப்புக் கணக்கு உள்ள வங்கியில் இருந்து பதிவுப் படிவத்தைப் பெற வேண்டும்.
- அல்லது வலைத்தளத்திலிருந்து படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
- இதற்குப் பிறகு, படிவத்தில் விவரங்களை நிரப்பி, ஓய்வூதிய விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
- பின்னர் படிவத்தை ஆதார் அட்டை மற்றும் பிற தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ