ட்விட்டர் நிறுவனம் சீன வீடியோ பகிர்வு செயலியான டிக்டாக்-கை கையகப்படுத்தும் ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்..!
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ட்விட்டர் சீன வீடியோ பகிர்வு செயலியான டிக் டாக்-கை கையகப்படுத்தும் ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இது போன்ற எந்தவொரு ஒப்பந்தமும் கடுமையான தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று தோன்றுகிறது என்பதால், டிக் டாக்-கை வாங்குவதற்கான தனது திட்டத்துடன் ட்விட்டர் முன்னேறுமா என்பதைப் பார்க்க வேண்டும் என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா சீனா கருத்து மோதல்களுக்கு இடையே நாளுக்கு நாள் பதற்றம் கூடித்துக் கொண்டே போகிறது. இந்த நிலையில் TikTok-கை கையகப்படுத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. TikTok-கை அமெரிக்க நிறுவனம் வாங்கினால் பிரச்சனை இல்லை. இல்லையேனும், அதற்கு செப்டம்பர் 15 வரை கால அவகாசம் வழங்குவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார்.
ALSO READ | 45 நாட்களில் Tik Tok, WeChat ஆகியவை அமெரிக்காவில் தடை செய்யப்படும்: டிரம்ப்
மேலும், இந்த குறிப்பிட்ட காலத்தில் சூமுக ஒப்பந்தம் போடப்படாவிட்டால், அதற்கு தடை விதிப்பேன் என்றும் கூறியிருந்தார். இதற்கிடையில் தான் டிக் டாக்கிற்கு தடை விதிக்கும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இது குறித்த அறிக்கையில் நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக டிக்-டாக்கின் உரிமையாளர்கள் மீது தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. TikTok நிறுவனம் சீன அரசால் கட்டுப்படுத்தப்படுவதாகவும், அது பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களை சீனாவுடன் பகிர்ந்து கொள்வதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டினார். ஆக இதனை எதிரொலிக்கும் விதமாகத் தான் இந்த தடை உத்தரவிலும் கையெழுத்திட்டுள்ளார்.
ஆகஸ்ட் 2 ஆம் தேதி, மைக்ரோசாப்ட் அதன் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா அதிபர் டிரம்புடன் TikTok கையகப்படுத்தல் குறித்து பேசியதாகக் கூறியிருந்தார். இதில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்தில் டிக்டோக் நடவடிக்கைகள் அடங்கும். மைக்ரோசாப்ட் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் பேச்சுவார்த்தைகளை முடிக்க திட்டமிட்டுள்ளது.