SBI அட்டகாசமான RD திட்டம்: நூறுகளில் முதலீடு, லட்சங்களில் வருமானம்! முழு விவரம் இதோ

SBI Har Ghar Lakhpati Scheme: குறிப்பிட்ட வட்டி மற்றும் கால அளவிற்கு, மாதாந்திர சேமிப்பை முதலீடு செய்ய விரும்பும் நபர்களுக்கு இந்த திட்டம் சிறந்த திட்டமாக இருக்கும். SBI இன் லக்பதி திட்டம் பாதுகாப்பான முறையில் முதலீட்டாளர்களை லட்சாதிபதியாக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 11, 2025, 04:47 PM IST
  • எஸ்பிஐ ஹர் கர் லக்பதி திட்டத்தின் நன்மைகள் என்ன?
  • SBI இன் புதிய திட்டம் எவ்வாறு செயல்படுகிறது?
  • வட்டி விகிதங்கள் மற்றும் வரி விவரம் என்ன?
SBI அட்டகாசமான RD திட்டம்: நூறுகளில் முதலீடு, லட்சங்களில் வருமானம்! முழு விவரம் இதோ title=

SBI Har Ghar Lakhpati Scheme: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), 'ஹர் கர் லக்பதி' என்ற புதிய தொடர் வைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சிறிய மாதாந்திர சேமிப்பு மூலம் மக்கள் ரூ.1 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட நிதியை உருவாக்க உதவுவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டம் ஒவ்வொரு மாதமும் தங்கள் சம்பளத்திலிருந்து சிறிது பணத்தைத் தொடர்ந்து சேமிக்கும் நபர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

State Bank of India

குறிப்பிட்ட வட்டி மற்றும் கால அளவிற்கு, மாதாந்திர சேமிப்பை முதலீடு செய்ய விரும்பும் நபர்களுக்கு இந்த திட்டம் சிறந்த திட்டமாக இருக்கும். SBI இன் லக்பதி திட்டம் பாதுகாப்பான முறையில் முதலீட்டாளர்களை லட்சாதிபதியாக்கும். இந்த திட்டத்தை பற்றி இங்கே காணலாம்.

SBI Har Ghar Lakhpati Scheme: எஸ்பிஐ ஹர் கர் லக்பதி திட்டத்தின் நன்மைகள் என்ன?

- இந்தத் திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் 3 முதல் 10 ஆண்டுகள் வரை நெகிழ்வான காலத்திற்கு மாதாந்திர சேமிப்பைச் செய்யலாம். 
- 10 வயது அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளும் SBI இன் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். 
- குழந்தைகளுக்கு தாங்களாகவே கையொப்பமிடத் தெரிந்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
- கையொப்பமிட முடியாத குழந்தைகளுக்கு, பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் மூலம் கணக்கு திறக்கப்படலாம்.

SBI இன் புதிய திட்டம் எவ்வாறு செயல்படுகிறது?

இந்தத் திட்டத்தில் முதிர்வுத் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான கால அளவு மற்றும் மாதாந்திர தவணையை தேர்வு செய்து கொள்ளலாம். 

- உதாரணமாக, ஒரு வாடிக்கையாளர் 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.2,500 டெபாசிட் செய்தால், முதிர்ச்சியில் அவருக்கு ரூ.1 லட்சம் கிடைக்கும். 
- அவர் 10 ஆண்டுகளுக்கான ஒரு திட்டத்தைத் தேர்வு செய்தால், மாதாந்திர தவணை ரூ.591 ஆகக் குறைகிறது. 
- மாதாந்திர தவணைத் திட்டம், திட்டத்தைத் தொடங்கும் நேரத்தில் பொருந்தக்கூடிய வட்டி விகிதத்தை அடிப்படையாகக் கொண்டது. 
- அதாவது, இந்த திட்டத்தில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட வட்டி பெறப்படுகிறது.

மேலும் படிக்க | Budget 2025: ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கைகள்... நிறைவேறினால் அதிரடி லாபம்

Interest Rates, Tax: வட்டி விகிதங்கள் மற்றும் வரி

- Interest Rate: இந்த திட்டத்தின் கீழ் வட்டி விகிதங்கள் வாடிக்கையாளர் வகையைப் பொறுத்து மாறுபடும்.

- General customers: பொது வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதம் 6.75% வரை உள்ளது.

- Senior citizens: மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 7.25% ஆகும்.

- SBI employees: எஸ்பிஐ ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் 8% வரை வட்டி பெறுகிறார்கள்.

- TDS: வருமான வரி விதிகளின்படி இந்தத் திட்டத்தில் TDS பொருந்தும்.

நெகிழ்வுத்தன்மை, அபராத விவரங்கள் என்ன?

இந்தத் திட்டத்தில் பகுதி தவணை செலுத்தும் வசதி உள்ளது. இருப்பினும், தவணைகளை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால். அதற்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதம் ரூ.100 தவணையில் ரூ.1.50 முதல் ரூ.2 வரை இருக்கலாம். இந்த அபராதம் திட்ட காலத்தைப் பொறுத்தது. தொடர்ச்சியாக 6 தவணைகள் டெபாசிட் செய்யப்படாவிட்டால், கணக்கு மூடப்பட்டு, மீதமுள்ள தொகை வாடிக்கையாளரின் சேமிப்புக் கணக்கிற்கு மாற்றப்படும்.

இந்த கணக்கை எவ்வாறு திறப்பது

- இந்தத் திட்டத்தில் சேர, வாடிக்கையாளர்கள் முதலில் தங்கள் அருகிலுள்ள SBI கிளைக்குச் சென்று தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- ஆதன் பின் முதிர்வுத் தொகை மற்றும் கால அளவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- அதன் அடிப்படையில் மாதாந்திர தவணை முடிவு செய்யப்படும்.

மேலும் படிக்க | Budget 2025: 80C பிரிவின் கீழ் வரம்பு உயருமா? இந்த சலுகைகள் கிடைக்கலாம்.... காத்திருக்கும் மக்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News