உடலுறவுக்கு மனைவி தயக்கம் காட்டுவது ஏன்? 7 காரணங்கள்

Relationship | உடலுறவுக்கு மனைவி தயக்கம் காட்டினால் கணவன் தெரிந்து கொள்ள வேண்டிய 7 மிக முக்கியமான காரணங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 9, 2025, 09:15 PM IST
  • உடலுறவுக்கு மனைவி தயக்கம் காட்டுவது ஏன்?
  • நிச்சயமாக இந்த 7 காரணங்களாக தான் இருக்கும்
  • கணவன் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்
உடலுறவுக்கு மனைவி தயக்கம் காட்டுவது ஏன்? 7 காரணங்கள் title=

Relationship Tips Tamil | தம்பதிகளுக்கு இடையில் உள்ள காதல், நெருக்கம், ஈர்ப்பை உடலுறவு எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கும். அன்பில் மூழ்கி, நெருக்கத்தை அதிகப்படுத்தும் உடலுறவில் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மனைவிகளுக்கு ஈர்ப்பில்லாமல் போய்விடும். பல தம்பதிகள் இப்படியான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அதற்கு 7 முக்கிய காரணங்கள், மையமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

உறவில் திருப்தியின்மை

பார்ட்னர் மீது வைத்திருக்கும் மதிப்புக்கும் உடலுறவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மிகவும் மகிழ்ச்சியாக, உறவில் எந்த சிக்கலும் இல்லாதபோது மட்டுமே மனைவி உடலுறவுக்கு ஒத்துழைப்பார்கள். உங்கள் மீது எரிச்சல், கோபம் இருந்தால் அவர்கள் நிச்சயமாக ஒத்துழைக்கமாட்டார்கள். இதுகுறித்து நீங்கள் வெளிப்படையாக உரையாட வேண்டும். அவர்களின் எண்ணத்தையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும்போது, நிச்சயம் உடலுறவுக்கு இணங்குவார்கள்.

நம்பிக்கையின்மை

மனைவி உங்கள் மீது கொண்டிருக்கும் கோபத்துக்கான விடையை நீங்கள் கண்டிப்பாக கொடுக்க வேண்டும். உங்களின் செயல்பாடுகள் நம்பிக்கையற்றதாகவும், அவர்களுக்கு துரோகம் இழைக்கும் வகையில் இருந்தால், உங்களின் ஆசைக்கு இணங்கமாட்டார்கள். கடந்த கால தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு, அவர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நம்பிக்கையுடன் நடக்க முற்பட்டால், உங்களின் ஆசை நிறைவேறும்.

மேலும் படிக்க | இந்த குணாதிசியங்கள் இருக்கிறதா? அப்போ நீங்க ஒரு நல்ல கணவர் தான்!

உடல் ஒத்துழைக்காமை

உடலுறவுக்கு ஒத்துழைக்காமல் போவதற்கு வயதும் ஒரு காரணமாக இருக்கலாம். பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், வலி உள்ளிட்ட உபாதைகளை ஏற்படுத்தலாம். இதனால், உடலுறவு கொள்வதில் அவர்களுக்கு நாட்டம் இருக்காது. இதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், அவர்களின் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வை மருத்துவ சிகிச்சை மூலம் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொறுப்புகளால் கூடுதல் சுமை

வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தால், வேலையை முடிந்த பிறகு வீட்டிற்கு வந்து அன்றாட வேலைகளை செய்ய வேண்டியிருக்கும். இது அவர்களுக்கு  உடலளவில் மிகவும் களைப்பை ஏற்படுத்துவது மட்டுமில்லாமல், மனதளவிலும் வலியை ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலைகளில் அவர்களுடைய வேலையை நீங்களும் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். இருவரும் மனம் விட்டு உரையாடி, அவர்களுக்கான பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

உணர்சிகளை தூண்டுதல்

உடலுறவு என்பது நேரடியாக உடலளவில் இணைந்து இருப்பது மட்டும் அல்ல. தம்பதிகளைப் பொறுத்தவரை இது தொடர்ச்சியான நடவடிக்கை. தினம்தோறும் முத்தமிடுதல், கைகளை கோர்த்து நடத்தல், பைக்கில் ஊர் சுற்றுதல், பிடித்ததை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியாக வைத்திருக்கும்போது, உங்களின் செய்கைகள் அவர்களுக்குள் ஒருவித ரசனையையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தும். அப்போது, செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது ஒரு நிறைவை அனுபவிப்பீர்கள்.

மன அழுத்தம்

மன அழுத்தம் உடலுறவுக்கு இணங்காமல் செல்வதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். உங்கள் மனைவி ஏதோ ஒன்றுக்காக தினமும் ஏங்கிக் கொண்டிருக்கலாம். அதனை நினைத்து வேதனைப்பட்டுக்கொண்டிருக்கலாம். இந்த வேதனையால் உங்களுடன் நெருக்கத்தில் இருப்பதை அவர்கள் விரும்பமாட்டார்கள். அதனை முதலில் நீங்கள் சரிசெய்ய வேண்டும்.

உடலுறவு

செக்ஸ் என்பது தம்பதிகளுக்கு இடையில் இயல்பானது என்றாலும், நாள்தோறும் அதில் ஒரு புதுமையை புகுத்தும்போது எல்லையற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அதாவது, ஒரே இடத்தில் செக்ஸ் வைத்துக்கொள்ளாமல் வெவ்வேறு இடங்கள், புதிய படுக்கை, ஷோபா, குளியலறை ஆகிய இடங்களில் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம். இப்படியான உடலுறவு இருவருக்கும் புதுமையான அனுபவத்தை கொடுக்கும்.

மேலும் படிக்க | உஷார்: பொது இடத்தில் மறந்தும் ஒருபோதும் இந்த 8 செயல்களைச் செய்யாதீர்கள்!

 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News