துபாய் கார் ரேஸில் இருந்து அஜித் விலகல்! திடீர் அறிவிப்புக்கு என்ன காரணம்?

கார் பந்தயத்திற்காக அஜித் குமார் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது விலகி கொள்வதாக அறிவித்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Written by - RK Spark | Last Updated : Jan 11, 2025, 06:28 PM IST
  • கார் ரேஸில் இருந்து விலகல்.
  • அஜித் எடுத்த முக்கிய முடிவு.
  • பாதுகாப்பு காரணங்களுக்காக விலகல்.
துபாய் கார் ரேஸில் இருந்து அஜித் விலகல்! திடீர் அறிவிப்புக்கு என்ன காரணம்? title=

துபாயில் நடைபெற்று வரும் கார் ரேஸில் இருந்து அஜித் விலக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தீவிர பரிசீலனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த செய்தி தற்போது சமூக ஊடக தளங்களில் விவாதத்தைத் தூண்டியுள்ளது. ரசிகர்கள் மற்றும் அஜித்தை பின்தொடர்பவர்கள் அவரது இந்த முடிவிற்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தினர். அஜித் குமார் கார் ரேஸில் கலந்து கொள்ள உள்ளார் என்ற செய்தி உலகம் முழுவதும் பிரபலமானது. இதற்காக கடந்த சில மாதங்களாக அஜித் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் அஜித் கார் ரேஸில் இருந்து விலக உள்ளார் என்று தகவல் வெளியான நிலையில், அஜித்குமார் ரேசிங்கின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க | நெல்சன் இயக்கத்தில் உருவான டிஎன்ஏ! வெளியானது அதிரடி டீசர்!

அதில், "கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு துபாய் 24H சீரிஸூக்கான கார் ரேஸ் பயிற்சியில் நடிகர் அஜித்குமார் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதுபற்றி, அஜித்குமார் ரேசிங் குழு முழுமையாக மதிப்பீடு செய்துள்ளது. அணியின் உரிமையாளராகவும், அணியின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் உள்ள அஜித்குமார் இதில் உள்ள பலவிதமான சவால்களையும் கருத்தில் கொண்டு, அணியினரின் நலனை முன்னுரிமை படுத்தி இருக்கிறார். பலவித ஆலோசனைகளுக்குப் பிறகு பாதுகாப்பு குறித்தான மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளார். பலகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, வரவிருக்கும் துபாய் 24H சீரிஸில், அஜித்குமார் ரேசிங்கிற்கு வாகனம் ஓட்டுவதில் இருந்து பின்வாங்குவது என்ற கடினமான ஆனால் தன்னலமற்ற முடிவை அஜித்குமார் எடுத்துள்ளார்.

தன்னுடைய தனிப்பட்ட விருப்பம் என்பதையும் தாண்டி அணியின் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை இது காட்டுகிறது. அஜித்தின் இத்தகைய ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் அணியினருக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது. மோட்டார் ஸ்போர்ட்டின் மீதான அபரிதமான ஆர்வம் கொண்ட அஜித்குமார் துபாய் 24H சீரிஸில் தொடர்ந்து பங்கேற்பார். போர்ஷே 992 கப் காரில் (நம்பர் 901) பாஸ் கோட்டனின் அஜித்குமார் ரேசிங்கின் உரிமையாளராக அஜித் உள்ளார். அதே நேரத்தில் போர்ஷேயில் ரஸூனின் கேமன் ஜிடி4 (நம்பர் 414) அஜித்குமார் ரேசிங்கிற்கு நிகழ்வில் போட்டியிடுகிறார். அஜித்தின் இந்த முடிவை துபாய் 24H சீரிஸ் அமைப்பாளர்களால் பாராட்டியுள்ளனர்.

அஜித் அங்கு இருப்பது போட்டிக்கு கூடுதல் உற்சாகத்தையும் தருகிறது. தன்னுடைய இரு அணிகளுக்காகவும் அஜித் களத்தில் இருப்பது அங்கிருக்கும் ரசிகர்களையும் உற்சாகப்படுத்துவதாக அமைந்துள்ளது. மோட்டார் ஸ்போர்ட் தொடர்ந்து பிரபலமடைந்து வருவதால், அஜித்குமாரின் அர்ப்பணிப்பு ரசிகர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக மாறியுள்ளது. தான் ஏற்றிருக்கும் இந்த இரண்டு பொறுப்புகளையும் சரியாக செய்ய அவர் எடுத்திருக்கும் இந்த முடிவு ரசிகர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சி தரக்கூடியது என்பது உறுதி" என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | பிக்பாஸ் 8: டபுள் எவிக்ஷனில் வெளியேறிய சத்யா-தர்ஷிகா வாங்கிய சம்பளம் எவ்வளவு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News