Pongal 2025: பொங்கலுக்கு இந்த 2 நாளும் விடுமுறை - அரசின் கடைசி நேர அப்டேட்

Pongal 2025 Holidays: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த 2 நாள்களும் பொது விடுமுறை அறிவித்து, புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பொங்கல் பண்டிகைக்கு நான்கு நாள்கள் அரசு விடுமுறை அறிவித்துள்ள நிலையில், புதுச்சேரி அரசும் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

1 /8

பொங்கல் பண்டிகை சுமார் நான்கு நாள்களுக்கு தமிழ் மக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும். அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகை மார்கழி 30ஆம் தேதி தொடங்கி (ஜன. 13), தை 3ஆம் தேதிவரை (ஜன. 16) கொண்டாடப்படும்.    

2 /8

ஜன. 13ஆம் தேதி போகி பண்டிகை தொடங்கி, ஜன. 14இல் சூரிய பொங்கல், ஜன. 15இல் மாட்டுப் பொங்கல், ஜன. 16ல் காணும் பொங்கல் என நான்கு நாள்கள் கொண்டாடப்படுகிறது.   

3 /8

தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் அவர்கள் பள்ளி, கல்லூரிகள், வேலை பார்க்கும் நிறுவனங்களுக்கு விடுப்பு எடுத்து கொண்டாடுவார்கள்.   

4 /8

எனவே, தமிழ்நாட்டில் வழக்கமாக தை முதல் நாளில் இருந்து அரசு விடுமுறை அறிவிக்கப்படும். அந்த வகையில் இந்தாண்டு ஜன. 14, 15, 16 ஆகிய தேதிகளில் பொங்கல் பண்டிகைக்கான பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டது.   

5 /8

மேலும், ஜன. 18, 19 ஆகிய தேதிகள் வார இறுதி என்பதால் அன்றுமே பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை. எனவே, ஜன. 17ஆம் தேதியும் தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. எனவே, தமிழ்நாட்டு மக்களுக்கு பொங்கலுக்கு ஜன.14ஆம் தேதி தொடங்கி ஜன. 19ஆம் தேதி வரை என 6 நாள்கள் விடுமுறை இருக்கிறது.   

6 /8

ஒருவேளை, சிலர் ஜன. 13ஆம் தேதி மட்டும் விடுப்பு எடுத்துக்கொண்டால், நாளை (ஜன. 11) தொடங்கி, ஜன. 19ஆம் தேதிவரை என 9 நாள்களுக்கு விடுமுறை கிடைக்கும் எனலாம். எனவே, தமிழக மக்கள் குஷியில் உள்ளனர். 

7 /8

அப்படியிருக்க, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஜன. 14, 15 ஆகிய தேதிகளில் மட்டுமே பொங்கலுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மக்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தியை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.   

8 /8

பொங்கல் விடுமுறையை ஒட்டி ஜன. 16, 17 தேதிகளிலும் விடுமுறை விடப்படுவதாக அறிவித்துள்ளது. இதற்கு மாற்றாக பிப். 1 மற்றும் பிப். 8 ஆகிய நாள்கள் வேலை நாட்களாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.