PM Awas Yojana: சொந்த வீட்டிற்கான ஆசையும் கனவும் நம் அனைவருக்கும் உள்ளது. சிலரால் இந்த கனவை நிஜமாக்க முடிகின்றது. ஆனால், சிலரால் இது முடிவதில்லை. எனினும், இவர்களுக்கு அரசாங்கம் உதவுகிறது. ஏழை எளிய மக்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்திக் கொடுக்க மத்திய அரசு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற வீட்டு வசதி திட்டத்தை நடத்தி வருகின்றது.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா
இந்த திட்டம் மத்திய அரசின் லட்சிய திட்டமாகும். பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடு என்ற கனவை நனவாக்குவதற்கான வாய்ப்பை அளிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. சமீபத்தில் இந்த திட்டத்தின் விதிகளில் உத்தர பிரதேச அரசாங்கம் ஒரு பெரிய மாற்றத்தை செய்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்..
Pradhan Mantri Awas Yojana
பிஎம் ஆவாஸ் திட்டம் 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போதிருந்து, இந்த திட்டத்தின் மூலம், ஏராளமான மக்கள் சொந்த வீடுகளைப் பெற்றுள்ளனர். இந்தத் திட்டத்தின் பலன்களுக்குத் தகுதி பெறுவதற்கு அரசாங்கம் குறிப்பிட்ட தகுதி அளவுகோல்களை நிர்ணயித்துள்ளது, மேலும் அந்த வழிகாட்டுதல்களின் அடிப்படையில் உதவி வழங்கப்படுகிறது.
மாநில அரசு செய்த விதி மாற்றம்
உத்தரபிரதேச அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் சலுகைகளுக்கான விதிகளை புதுப்பித்துள்ளது. பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் மிஷன் சக்தி பிரச்சாரத்தில் கவனம் செலுத்தும் வகையில், வரும் காலங்களில், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளைத் தவிர, முதன்மையாக பெண் குடும்பத் தலைவரின் பெயரிலேயே இந்த சலுகைகள் வழங்கப்படும் என்று அரசு முடிவெடுத்துள்ளது.
மற்ற மாநிலங்களில் உள்ள விதி என்ன?
உத்தரப்பிரதேசத்தில் பெண்கள் முக்கிய பயனாளிகளாக இருக்க வேண்டும் என்று விதிகள் மாற்றப்பட்டுள்ள நிலையில், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா தொடர்பாக இந்த மாற்றம் மற்ற மாநிலங்களிலும் செய்யப்பட்டுள்ளதா அல்லது செய்யப்படுமா என்பதை தெரிந்துகொள்ள பலர் ஆர்வமாக உள்ளனர். ஆனால் இதன் பதில் ‘இல்லை’ என்பதே. இந்த மாற்றங்கள் உத்தரப்பிரதேசத்தில் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களில் இந்த திட்டத்திற்கான விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆகையால் மற்ற மாநிலங்களில் உள்ள மக்கள் முன்னர் இருந்த விதிகளின் படியே இந்த திட்டதை அணுக முடியும்.
இத்திட்டத்தின் மூலம் பயனாளிகள் பயன்பெற மொத்தம் 21 நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று திட்டத்துடன் தொடர்புடைய ஒருவர் தெரிவித்தார். இதில் உள்ள சில முக்கிய அம்சங்களை இங்கே காணலாம்:
- பயனாளி ஏற்கனவே நிரந்தர வீடு உடையவராக இருக்கக்கூடாது.
- பயனாளியின் மாத வருமானம் ரூ.15 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- பயனாணிகளின் கிரெடிட் கார்ட் பில் 50 ஆயிரத்துக்கு மேல் இருக்கக்கூடாது.
- பயனாளி வேறு எந்த திட்டத்தின் கீழும் வீடு பெற்றிருக்கக் கூடாது.
இந்த திட்டத்தின் கீழ் எவ்வளவு தொகை கிடைக்கும்?
- இத்திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் உள்ள பயனாளிகளுக்கு, மூன்று தவணைகளில், 1.2 லட்சம் ரூபாய் வழங்கப்படுகின்றது.
- நகர்ப்புறங்களில் ரூ.2.5 லட்சம் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ