தமிழக வெற்றிக் கழகம் 2026 தேர்தலுக்காக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் மாவட்டச் செயலாளர்கள் நியமனம் நடந்து முடிந்தது. மாற்றுக் கட்சியில் இருந்து பல முக்கிய தலைவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் தேர்தலை முன்னிட்டு விஜய் மக்களை நேரடியாக சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் நேற்று சென்னையில் விஜய் சந்தித்து பேசி உள்ளார். விஜய்யின் நீலாங்கரை இல்லத்தில் கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு மேல் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்து வரப்போகும் மகிழ்ச்சியான செய்தி..! ரெடியா மக்களே
ஆதவ் அர்ஜுனாவின் மாஸ்டர் பிளான்
சமீபத்தில் விடுதலை சிறுத்தை கட்சியிலிருந்து வெளி வந்த ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார், அவருக்கு உடனடியாக முக்கிய பொறுப்பும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் அவரது ஏற்பாட்டின் கீழ் தான் பிரசாந்த் கிஷோர் மற்றும் விஜய்யின் சந்திப்பு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் கம்பெனி தேர்தல் உத்திகளை வகுத்துக் கொடுத்தது, அந்த அணியில் ஆதவ் அர்ஜுனாவும் இடம்பெற்று இருந்தார்.
தனியாக அரசியல் கட்சியை தொடங்கினாலும் மற்ற கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்து வருகிறார் பிரசாந்த் கிஷோர். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கட்சிக்கு பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூகங்களுக்காக ஒப்பந்தம் செய்ய உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் விஜய்யை சந்தித்துள்ளது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஏற்கனவே பிரசாந்த் கிஷோரை ஆதவ் அர்ஜுனா பாட்னாவில் வைத்து சந்தித்ததாகவும், அதன் அடிப்படையில் தான் தற்போது பிரசாந்த் கிஷோர் விஜய்யை நேரில் வந்து சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சென்னையில் நடைபெற்ற முக்கிய ஆலோசனையில் விஜய், பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜுனா, புஷி ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் இருந்ததாக கூறப்படுகிறது.
விஜய்க்கு பிரசாந்த் கிஷோர் சொன்ன அட்வைஸ்
2026 தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று திமுக குறிக்கோளுடன் உள்ளது. குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். எனவே கூட்டணி குறித்த உங்களின் முடிவை தற்போது தெரிவிக்க வேண்டாம். தேர்தல் நெருங்கும் சமயத்தில் பேசிக் கொள்ளலாம் என்று விஜய்க்கு பிரசாந்த் கிஷோர் சொல்லியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுகவும் தமிழக வெற்றிக் கழகமும் இணைந்து 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி வந்தாலும், இதனை இரண்டு கட்சிகளும் மறுத்து வருகின்றனர். தற்போது பிரசாந்த் கிஷோர் உள்ளே வந்திருப்பது இந்த சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தி உள்ளது. எனினும் இந்த சந்திப்பிற்கான காரணங்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
மேலும் படிக்க | வங்கி நகை கடன் தள்ளுபடி! தமிழக அமைச்சர் பெரியகருப்பன் சொன்ன முக்கிய தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ