அதிக வருமானம், சிறந்த வட்டி: அசத்தலான தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள்

Post Offcie Saving Schemes: முதலீட்டாளர்களுக்கு மிக அதிக அளவில் நன்மைகளை அள்ளித்தரும் 6 முக்கிய தபால் நிலைய திட்டங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 17, 2024, 01:57 PM IST
  • மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்.
  • மாதாந்திர வருமான வைப்பு.
  • தேசிய சேமிப்புச் சான்றிதழ்.
அதிக வருமானம், சிறந்த வட்டி: அசத்தலான தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் title=

Post Offcie Saving Schemes: மனித வாழ்க்கைக்கு பணம் மிக அவசியம். மனிதர்களாகிய நாம் அனைவரும் பணத்தை சம்பாதித்து எதிர்கால தேவைகளுக்காக சேமித்து வைக்கிறோம். பாதுகாப்பான வழியில் நல்ல வருமானத்தை அளிக்கும் பல திட்டங்கள் உள்ளன. இவற்றில் தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் மிக பிரபலமாக உள்ளன. தபால் அலுவலக திட்டங்கள் முதலீட்டுக்கு சிறந்த வழியாக கருதப்படுகின்றன. 

தபால் அலுவலகம் (Post Office) பல்வேறு முதலீட்டு திட்டங்களை வழங்குகிறது. அனைத்து திட்டங்களும் அதிகப்படியான நன்மைகளை அளிப்பதால், முதலீட்டாளர்களுக்கு எந்த திட்டத்தில் முதலீடு செய்வது என்ற குழப்பமே எற்படுவதுண்டு. அந்த அளவிற்கு இந்த திட்டங்களில் அதிக நன்மைகள் உள்ளன. முதலீட்டாளர்களுக்கு மிக அதிக அளவில் நன்மைகளை அள்ளித்தரும் 6 முக்கிய தபால் நிலைய திட்டங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

அட்டகாசமான நன்மைகளை அள்ளிக்கொடுக்கும் 6 தபால் நிலைய திட்டங்கள்

வட்டி விகிதம்

ஒவ்வொரு காலாண்டிலும் தபால் அலுவலகத் திட்டத்தின் வட்டி விகிதங்கள் மாறும். நடப்பு நிதியாண்டான 2024-25ன் இரண்டாம் காலாண்டிற்கான, அதாவது ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான வட்டி விகிதங்கள் ஏற்கனவே புதுப்பிக்கப்பட்டுள்ளன.

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வட்டி விகிதங்கள் பற்றிய தகவல்கள் செப்டம்பர் இறுதிக்குள் வெளியிடப்படும். அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் இந்த வட்டி விகிதங்கள் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். எந்த திட்டத்தில் அதிக வட்டி கிடைக்கும் என்ற தகவல், உங்களுக்கு ஏற்ற திட்டத்தை தேர்ந்தெடுப்பதில் உதவியாக இருக்கும். 

தபால் அலுவலகத்தில் பல வகையான முதலீட்டு திட்டங்கள் உள்ளன. 
- நிலையான வைப்பு
- மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்
- மாதாந்திர வருமான வைப்பு
- தொடர் வைப்பு
- தேசிய சேமிப்புச் சான்றிதழ்
- சுகன்யா சம்ரித்தி யோஜனா
- மகிளா சம்மன் சேமிப்புச் சான்றிதழ் 
- கிசான் விகாஸ் பத்ரா

போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

இந்த திட்டங்களின் வட்டி விகிதம் 6.7 சதவீதம் முதல் 8.2 சதவீதம் வரை இருக்கும். அதிக வட்டி விகிதங்களுடன், தபால் அலுவலக திட்டங்கள் இன்னும் பல நன்மைகளை வழங்குகின்றன.

தபால் அலுவலக சேமிப்பு கணக்கு

Post Office Saving Account: வங்கியைப் போலவே, தபால் நிலையத்திலும் சேமிப்புக் கணக்கைத் திறக்கலாம். தற்போதைய நிலவரப்படி, தபால் நிலைய சேமிப்புக் கணக்கில் 4 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

நிலையான வைப்புத் திட்டம்

Fixed Deposit Scheme: தபால் அலுவலகத்தில் நிரந்தர வைப்பு (Post Office FD Scheme) திட்டத்தில் முதலீடு செய்தால், முதலீட்டாளருக்கு நல்ல வட்டி கிடைக்கும். இந்தத் திட்டத்தில் நான்கு வகையான வட்டிகள் கிடைக்கும்.

- 1 வருடத்தில் முதிர்ச்சியடையும் திட்டத்திற்கான வட்டி 6.9 சதவீதம். 
- 2 ஆண்டு அஞ்சல் அலுவலக FD திட்டத்தில் 7 சதவீத வட்டி கிடைக்கிறது.
- 3 ஆண்டு FDக்கு 7.1 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது.
-  5 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் திட்டத்திற்கு 7.5 சதவீத வட்டி கிடைக்கிறது.

தொடர் வைப்புத் திட்டம்

Recurring Deposit Scheme: போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டமும் ஒரு வகையான மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி போன்றதுதான். இந்தத் திட்டம் 5 ஆண்டுகளில் காலாவதியாகும் திட்டமாகும். எனினும், முதலீட்டாளர்கள் வேண்டுமானால் இதை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். அதாவது உங்கள் முதலீட்டு நேரத்தை அதிகரிக்கலாம். தற்போது, ​​அஞ்சல் அலுவலக RD-க்கு 6.7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் ஜூலை முதல் செப்டம்பர் 2024 வரை பொருந்தும்.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹைக்: யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு? கணக்கீடு இதோ

அஞ்சல் அலுவலக மூத்த குடிமக்கள் திட்டம்

Senior Citizen Saving Scheme: இது முதியோருக்கான சிறப்பம்சம் வாய்ந்த சேமிப்புத் திட்டமாக உள்ளது. இத்திட்டத்திற்கு இந்த காலாண்டில் 8.2 சதவீத வட்டி கிடைக்கிறது. குறைந்தபட்சம் ரூ.1000 முதலீடு செய்து இந்தத் திட்டத்தில் கணக்கைத் தொடங்கலாம். இதில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ.30 லட்சமாக உள்ளது.

தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம்

Post Office Monthly Income Scheme: தபால் நிலையத்தின் மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் 7.4% வட்டி கிடைக்கிறது. இந்தத் திட்டத்தில், ஒவ்வொரு மாதமும் வட்டி கிடைக்கிறது. அதாவது திட்டம் முதிர்ச்சியடையும் வரை வட்டி தொடர்ந்து கிடைக்கும். இந்த வட்டிக்கும் வரி விதிக்கப்படும்.
தேசிய சேமிப்பு சான்றிதழ்

National Saving Certificate: அஞ்சல் அலுவலகத்தின் தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) திட்டத்தில் ஜூலை முதல் செப்டம்பர் வரை 7.7% வட்டி கிடைக்கும். இந்தத் திட்டம் 5 ஆண்டுகளில் முதிர்ச்சியடைந்து கூட்டு வட்டியை வழங்குகிறது. அதாவது வட்டிக்கு வட்டி கிடைக்கும். 

மேலும் படிக்க | பம்பர் லாபம் தரும் SIP: முதலீடு செய்யும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News