தீபாவளி நெருங்குது, செலவும் இருக்குது... கிரெடிட் கார்டு லிமிட்டை அதிகரிக்க இதை செய்யுங்க!

Credit Card Limit: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், ஒருவரின் கிரெடிட் கார்டின் லிமிட்டை எப்படி அதிகப்படுத்துவது என்பது குறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Oct 20, 2024, 07:43 AM IST
  • கிரெடிட் கார்டு பயன்பாடு தற்போது அதிகரித்துவிட்டது.
  • ஆபத்து காலங்களில் கிரெடிட் கார்டு பெரிய நன்மையை அளிக்கும்.
  • பண்டிகை காலங்களிலும் கிரெடிட் கார்டின் தேவைகள் அதிகமாக இருக்கும்.
தீபாவளி நெருங்குது, செலவும் இருக்குது... கிரெடிட் கார்டு லிமிட்டை அதிகரிக்க இதை செய்யுங்க! title=

How To Increase Credit Card Limit: நவீன கால வாழ்க்கையில் கிரெடிட் கார்டு பயன்பாடு என்பது அதிகரித்து காணப்படுகிறது. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் கிரெடிட் கார்டு கலாச்சாரம் பல ஆண்டுகளுக்கு முன்னரே ஆக்கிரமித்துவிட்ட சூழலில், தற்போது அவரை கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட இரண்டாம் கட்ட நகரங்களில் கூட அதிகம் புழக்கத்திற்கு வரத்தொடங்கிவிட்டன. 

கிரெடிட் கார்டு (Credit Card) வந்த பின் ஒவ்வொருவரின் வாழ்க்கைமுறையிலும் பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கும். தேவைக்கு பயன்படுத்தும் பழக்கம் குறைந்து, கடன் வாங்கி பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துவிட்டது, அதாவது அது அவசியமான இல்லையா என்பது தெரிவதற்கு முன்னரே... மாதாமாதம் கிரெடிட் கார்டுக்கு சம்பளத்தில் பாதிக்கும் மேல் ஒதுக்குவதை ஒருசிலர் பழக்கமாக வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் அவசர காலங்களிலும், குடும்பச் சூழல் உள்ளவர்களுக்கும் கிரெடிட் கார்டு என்பது வரப்பிரசாதம்தான். அந்த இருமுனை கத்தியை பாதுகாப்பாக பயன்படுத்த தெரிந்தவர்களே ஆபத்தில் இருந்து தப்பிப்பார்கள்.

தீபாவளி வந்தாச்சு...

அந்த வகையில், தற்போது தீபாவளி பண்டிகை (Diwali) வேறு மாதக்கடைசியில் வருகிறது. இப்போதே புத்தாடைகள், வெடி, சொந்த ஊர் பயணம் என பல்வேறு செலவுகள் வரிசைக்கட்டி நிற்கும். எனவே, இதுபோன்ற பண்டிகை காலங்களில் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பெரிய பிரச்னை இருக்காது எனலாம். அதிலும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அமேசான், பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் நிச்சயம் பல்வேறு தள்ளுபடிகள், ஆப்பர்களும் காத்திருக்கும். மற்ற நேரங்களை விட இந்த காலகட்டத்தில்தான் கிரெடிட் கார்டின் பயன்பாடும் அதிகம் இருக்கும். 

மேலும் படிக்க | உங்கள் கிரெடிட் கார்டை க்ளோஸ் செய்வது எப்படி? இதற்கான RBI விதிகள் என்ன?

ஆனால், கிரெடிட் கார்டுக்கும் லிமிட் (Credit Card Limit) இருக்கும் என்பதால் அதை தாண்டியும் உங்களால் செலவு செய்ய இயலாது. உதாரணத்திற்கு உங்களின் லிமிட் ரூ. 15 ஆயிரம் என்றால் அதனை முழுமையாகவும் நீங்கள் பயன்படுத்துக்கூடாது, அவசர காலங்கலை தவிர்த்து... அப்படியிருக்க வங்கிகளில் விண்ணப்பிப்பதன் உங்களின் கிரெடிட் கார்டு லிமிட்டை அதிகரிக்கலாம். உங்களின் லிமிட்டை அதிகரிக்க வங்கிகள் என்னென்ன விஷயங்களையெல்லாம் கருத்தில் கொள்ளும் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும், அதனை இத்தொகுப்பில் காணலாம்.

வங்கிகள் என்னென்ன கேட்கும்?

உங்களின் வருமானத்தை பொறுத்தே கிரெடிட் கார்டின் லிமிட்டும் வங்கிகளால் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். உங்களின் வருமானம் எந்தளவிற்கு அதிகரிக்கிறதோ அந்தளவிற்கு கிரெடிட் கார்டின் லிமிட்டும் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி உங்களின் கிரெடிட் ஸ்கோரும் (Credit Score) மிக மிக முக்கியம். நீங்கள் வாங்கும் கடனை சரியான நேரத்திலோ அல்லது முன்கூட்டியோ செலுத்திவிடுவதன் மூலம் நீங்கள் கிரெடிட் ஸ்கோரை சிறப்பாக வைத்திருக்கலாம். 

எனவே, நீங்கள் கிரெடிட் கார்டின் லிமிட்டை அதிகரிக்க வேண்டும் என நினைத்தால் முறையாக குறிப்பிட்ட தேதியிலோ அல்லது அதற்கு முன்கூட்டியோ மொத்த இஎம்ஐ-க்களையும் செலுத்தி கிரெடிட் ஸ்கோரை நன்றாக வைத்திருக்க வேண்டும். மேலும், உங்களின் ஆண்டு வருமானம், வேலையின் நிலைத்தன்மை, நீங்கள் வாங்கியிருக்கும் கடன் ஆகியவையும் இந்த கிரெடிட் கார்டின் லிமிட்டை அதிகரிக்க முக்கியமாக கருத்தில்கொள்ளப்படும். உங்களின் கடன் வரலாறும் கிரெடிட் கார்டின் லிமிட்டை முடிவு செய்யும்.

கடைசியாக இதை செய்யுங்கள்!

இவை அனைத்தையும் நீங்கள் சரியாக வைத்திருக்கிறீர்கள் என்றால், உங்களின் கிரெடிட் கார்டு லிமிட்ட அதிகரிக்க உடனே உங்களின் வங்கியை அணுகி இதுசார்ந்த கோரிக்கையை முன்வைக்கும். உங்களின் விண்ணப்பத்தை அடுத்து, உங்களின் மொத்த வரவுகள் மற்றும் செலவுகள் மட்டுமின்றி மற்ற அனைத்து அளவுகோள்களையும் வங்கிகள் தீர விசாரிக்கும். நீங்கள் அது தகுதிபெற்றிருக்கும்பட்சத்தில் வங்கி உங்களின் கிரெடிட் கார்டின் லிமிட்டை அதிகரிக்கும். இதுமட்டுமின்றி, நீங்கள் புதிய கிரெடிட் கார்டையோ அல்லது மேம்படுத்தப்பட்ட கிரெடிட் கார்டையோ கூட வங்கிகளிடம் இருந்து வாங்கலாம். 

மேலும் படிக்க | ஒருவர் எத்தனை கிரெடிட் கார்டு வைத்து கொள்ள முடியும்? ஆர்பிஐ விதிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

iframe allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="350" src= https://zeenews.india.com/tamil/live-tv/embed?autoplay=1&mute=1 width="100%">

Trending News