5 ஆண்டுகளில் 1 கோடி வீடுகள்: மோடி அரசின் அட்டகாசமான வீட்டு வசதி திட்டம்

Housing Scheme: அடுத்த 5 ஆண்டுகளில் 1 கோடி வீடுகள் கட்டும் திட்டம் அரசிடம் உள்ளது. மோடி அரசின் இந்த கனவு எப்படி நனவாகும்? இது குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 28, 2024, 12:45 PM IST
  • 5 ஆண்டுகளில் 1 கோடி வீடுகள்.
  • அரசின் முழுத் திட்டம் என்ன?
  • அமைச்சகம் அளித்த தகவல் என்ன?
5 ஆண்டுகளில் 1 கோடி வீடுகள்: மோடி அரசின் அட்டகாசமான வீட்டு வசதி திட்டம் title=

Housing Scheme: மக்களின் நலனுக்காக மோடி அரசு பல வித நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது. மகளிர், மூத்த குடிமக்கள், நலிந்த பிரிவினர் என அனைவருக்கும் பிரத்யேகமான நலத்திட்டங்கள் உள்ளன. நாட்டு மக்களின் வீட்டு வசதிக்காகவும் மோடி அரசாங்கம் குறிப்பிடத்தக்க வகையில் பல மலிவு விலை வீட்டு வசதி திட்டங்களை நடத்தி வருகின்றது. 

5 ஆண்டுகளில் 1 கோடி வீடுகள்

அடுத்த 5 ஆண்டுகளில் 1 கோடி வீடுகள் கட்டும் திட்டம் அரசிடம் உள்ளது. மோடி அரசின் இந்த கனவு எப்படி நனவாகும்? இது குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் இணைச் செயலாளரும் இந்ததிட்டத்தின் இயக்குநருமான குல்தீப் நாராயண், ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி வீடுகளை கட்ட அரசு இலக்கு வைத்துள்ளது என தெரிவித்தார். அபுதாபியில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் உரையாற்றிய நாராயண், 'கடந்த ஒன்பது ஆண்டுகளில் 90 லட்சம் மலிவு விலை வீடுகளை கட்டியுள்ளோம். இது அதற்கு முந்தைய பத்தாண்டுகளில் கட்டப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையை விட பத்து மடங்கு அதிகம். ஐந்தாண்டுகளில் ஒரு கோடி வீடுகளை கட்டுவதுதான் எங்களின் அடுத்த இலக்கு.' என தெரிவித்தார்.

அரசின் முழுத் திட்டம் என்ன?

ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் உச்ச அமைப்பான நேஷனல் ரியல் எஸ்டேட் டெவலப்மென்ட் கவுன்சில் (NAREDCO) இது  தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இடையேயான உறவுகளை வலுப்படுத்த NAREDCO இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. திட்டத்தின் இயக்குநருமான குல்தீப் நாராயண் தனது உரையில், இந்தியாவில் நடைபெற்று வரும் விரைவான நகரமயமாக்கலைக் கருத்தில் கொண்டு, இந்த திசையில் அதிக முயற்சிகள் தேவை என்று கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அடுத்த 20 ஆண்டுகளில் நமது பொருளாதார வளர்ச்சி விகிதம் சராசரியாக ஏழு முதல் எட்டு சதவிகிதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனுடன், புதிய நகரங்களின் வளர்ச்சி மற்றும் புதுமையான நகர்ப்புற திட்டமிடல் ஆகியவை உள்கட்டமைப்பிற்கு முக்கியம் என்பதும் அவற்றின் அவசியமும் சமீக காலங்களில் உணரப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: நினைவில் கொள்ள வேண்டிய மத்திய அரசின் வழிகாட்டுதல்கள்

அமைச்சகம் அளித்த தகவல் என்ன?

ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் இருந்து சிறந்த நடைமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும் என்று குல்தீப் நாராயண் கூறினார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டில் பேசிய நரெட்கோ தலைவர் ஜி.ஹரி பாபு, 'இன்று இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் உலகின் சிறந்த நண்பர்களாக இருக்கின்றன. இந்தியாவின் 21 மாநிலங்களின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டோம்.  மேலும் நிலையான நகர்ப்புற வளர்ச்சியில் முக்கியமான படிப்பினைகளுடன் நாங்கள் திரும்புகிறோம். இந்தியாவின் வீட்டு வசதித் துறையின் பயணம் அடிப்படை வீடுகளில் துவங்கி, மலிவு விலை, நிலையான மற்றும் ஆடம்பர வீடுகள் வரை நீண்டுள்ளன' என்று தெரிவித்தார்.

5 டிரில்லியன் பொருளாதாரம் 

தற்போது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) ரியல் எஸ்டேட் துறையின் பங்களிப்பு ஏழு சதவீதமாக உள்ளது என்று நரெட்கோ தலைவர் டாக்டர் நிரஞ்சன் ஹிராநந்தானி தெரிவித்துக்ளார். NITI ஆயோக் கருத்துப்படி, இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுகையில், இந்தத் துறையின் பங்களிப்பு 15 சதவீதத்தை எட்டும். இந்த வளர்ச்சி வேலைவாய்ப்பு, முதலீடு மற்றும் 270 துணைத் தொழில்களில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்துடன் கூட்டுறவை வலுப்படுத்துவது புதுமைகளை அதிகரிக்கும் என்றும் நிலையான வளர்ச்சியை துரிதப்படுத்தும் என்றும் அவர் கூறினார். நரெட்கோவின் நான்கு நாள் ஆய்வுப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாநாட்டில் 350க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், இந்திய அரசின் 35 பிரதிநிதிகள், தொழில்துறை மற்றும் யுஏஇ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்திய அரசின் 5 ஆண்டுகளில் 1 கோடி வீடுகளுக்கான திட்டம் கோடிக்கணக்கான மக்களின் சொந்த வீட்டுக்கான கனவை நிஜமாக்கும். அதிக செலவு செய்து சொந்த வீடு வாங்க முடியாத சூழலில் இருக்கும் நபர்களுக்கு இது பெரிய நிவாரணத்தை அளிக்கும்.

மேலும் படிக்க | ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் அதிகரிக்கும் பயனாளிகளின் எண்ணிக்கை: எந்த மாநிலம் முதலிடம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News