EPFO Update: பிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. EPF எனப்படும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (Employees Provident Fund) மற்றும் ESIC எனப்படும் ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகம் (Employees State Insurance Corporation) ஆகியவற்றின் கீழ் வரும் தொழிலாளர்களுக்கான சம்பள வரம்பை உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. முன்மொழியப்பட்ட உயர்வு மாத ஊதிய உச்சவரம்பை தற்போதைய வரம்பிலிருந்து 30,000 ரூபாயாக உயர்த்தும்.
இதன் மூலம் இந்த சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் அதிகமான பணியாளர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். கூடுதலாக, ESIC ஊதிய உச்சவரம்பை EPF உடன் ஒத்திசைக்கும் திட்டங்களும் உள்ளதாக கூறப்படுகின்றது.
EPFO கூட்டத்தில் முக்கிய விஷயங்களுக்கான விவாதம்
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழுவின் (CBT) கூட்டத்தில் சனிக்கிழமை இந்த முன்மொழிவு குறித்து முழுமையாக ஆராயப்பட்டது. தற்போது, EPFO கவரேஜுக்கான சம்பள வரம்பு மாதத்திற்கு ரூ.15,000 ஆகவும், ESIC -க்கான வரம்பு ரூ.21,000 ஆகவும் உள்ளது. இரண்டு வரம்புகளும் இன்னும் சில நாட்களில் ரூ.30,000 ஆக திருத்தப்படக்குடும் என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிப்ரவரியில் இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
வரம்புகளை அதிகரிப்பது குறித்த இந்த விஷயத்தில் CBT பிப்ரவரி கூட்டத்தில் இறுதி முடிவை எடுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர் அமைச்சகம் இந்த திருத்தத்திற்கு ஆதரவாக இருப்பதாகவும், இதனுடன் வாரியத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு அளிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாற்றம் அங்கீகரிக்கப்பட்டால், அதிகரித்த ஊதிய வரம்பு அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களுக்கு EPF மற்றும் ESIC க்கு பங்களிப்புகளை கட்டாயமாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு இந்த திருத்தத்தால் என்ன மாற்றம் ஏற்படும்?
தற்போது, மாதம் ரூ.15,000க்கு மேல் சம்பாதிக்கும் ஊழியர்கள் EPF கவரேஜிலிருந்து விலகிக்கொள்ள வசதி உள்ளது. ஊதிய உச்சவரம்பை ரூ.30,000 ஆக உயர்த்துவதன் மூலம், கட்டாய கவரேஜுக்கு தகுதியான ஊழியர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். தற்போதைய நிலவரப்படி, EPFO ல் சுமார் 7 கோடி ஆக்டிவ் உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு ஊதிய உச்சவரம்பு உயர்த்தப்பட்டது. அப்போது மாதம் ரூ.6,500 ஆக இருந்த உச்சவரம்பு ரூ.15,000 ஆக உயர்ந்தது.
EPF Subscribers: சந்தாதாரர்களுக்கு வருங்கால வைப்பு நிதி பங்களிப்புகளில் தாக்கம்
தற்போதைய விதிகளின்படி, ரூ.15,000 அடிப்படைச் சம்பளம் பெறும் ஊழியர் ஒவ்வொரு மாதமும் அவரது இபிஎஃப் கணக்கில் (EPF Account) ரூ.1,800 செலுத்துகிறார். சம்பள வரம்பு ரூ.30,000 ஆக உயர்ந்தால், இபிஎஃப் பங்களிப்பு (EPF Contribution) இரட்டிப்பாகும், அதாவது ரூ.3,600 ஆக இருக்கும். நிறுவனங்கள் பணியாளர்களின் பங்களிப்புக்கு இணையான பங்களிப்பை அளிக்க வேண்டும். இதன் மூலம் ஓய்வூதிய சேமிப்பு கணிசமாக அதிகரிக்கும்.
நிதி பாதுகாப்பு அதிகரிக்கும்
- பணியாளர்களுக்கான சம்பள வரம்பு அதிகரிக்கப்பட்டால், ஊழியர்களின் நீண்ட கால சேமிப்பு மேம்படும்.
- இதுமட்டுமின்றி, நாட்டின் சமூகப் பாதுகாப்பு கட்டமைப்பும் வலுப்பெறும்.
- இந்த நடவடிக்கை பணியாளர்கள் மற்றும் முதலாளிகள் இருவருக்கும் பயனளிக்கும்.
- மேலும், தொழிலாளர்களுக்கு அதிக ஸ்திரத்தன்மையையும் நிதி பாதுகாப்பும் கிடைக்கும்.
மேலும் படிக்க | PAN 2.0 ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் மின்னஞ்சலில் இலவசமாக புதிய PAN பெறுவது எப்படி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ