ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட், அரசின் இந்த உத்தரவால் டபுள் லாபம்

Ration Card Update: நீங்கள் ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு கட்டாயம் டபுள் சந்தோஷத்தை தரும். வாருங்கள் இந்த தொகுப்பில் இதன் முழு விவரத்தை அறிந்துக்கொள்வோம்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 11, 2023, 02:26 PM IST
  • வீட்டில் இருந்து ரேஷன் பெறும் திட்டம்.
  • அரசு திட்டத்தின் மூலம் ஊட்டச்சத்து நிறைந்த அரிசி.
  • ரேஷன் கடைகளில் மின்சாரத் தராசுகளுடன் மின்னணு பாயின்ட் ஆப் சேல்.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட், அரசின் இந்த உத்தரவால் டபுள் லாபம் title=

ரேஷன் கார்டு அப்டேட்: நீங்கள் ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு கட்டாயம் டபுள் சந்தோஷத்தை தரும். அதன்படி ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசு அவ்வப்போது பல சிறப்பான திட்டங்களை வழங்கி வருகிறது. ரேஷன் கார்டுதாரர்கள் இந்த திட்டங்களில் இருந்து தவறிவிடக்கூடாது என்பதற்காக இந்த திட்டங்கள் குறித்த தகவல்களை அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. அந்தவகையில் பெரும்பாலான குடும்பங்கள் இந்தத் திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. இதன் காரணமாக குடும்ப உறுப்பினர்களுக்கு குறைவான நிதிச்சுமை உள்ளது. அதேபோல் வீட்டில் இருந்து ரேஷன் பெறும் குடும்பங்கள் நாட்டில் உள்ளன. இதனிடையே தற்போது ​​ரேஷன் தொடர்பாக சமீபகாலமாக அரசாங்கம் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, அதன் விவரத்தை தெரிந்துக்கொள்வோம்.

ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசு இலவச ரேஷன் வழங்குவது மிகவும் பாராட்டுக்குரியது மற்றும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அந்த வகையில் வருகிற 2024 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் அரசு திட்டத்தின் மூலம் ஊட்டச்சத்து நிறைந்த அரிசியை விநியோகிப்பதே அரசின் நோக்கமாகும். தற்போதைக்கு 269 மாவட்டங்களில் பொது விநியோகத் திட்டம் மூலம் இந்த அரிசி விநியோகிக்கப்படுகிறது. இந்த அரிசியின் தரம் முந்தைய அரிசியை விட மிகவும் சிறப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. மறுபுறம், ஊட்டச்சத்து கூறுகள் நிறைந்த இந்த தரமான அரிசி அரசால் இலவசமாக வழங்கப்படும்.

மேலும் படிக்க | உங்கள் வங்கி கணக்கில் ரூ.147 டெபிட் செய்யப்பட்டதா? உடனே செக் பண்ணுங்க!

மறுபுறம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் அரசு தராசின் உதவியுடன் அளந்து வழங்கப்படுகிறது. ஆனால், தற்போது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளில் மின்சாரத் தராசுகளுடன் மின்னணு பாயின்ட் ஆப் சேல் (இபிஓஎஸ்) சாதனங்களை இணைக்க அரசு முயற்சித்து வருகிறது, இதனால் ரேஷன்பெறுவோர் தங்களின் ரேஷன் பொருளை முழுமையாக பெற முடியும். மேலும் இதற்காக உணவு பாதுகாப்பு சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

ரேஷனில் குளறுபடி இருந்தால் டீலர் மீது எப்படி புகார் அளிப்பது
ரேஷன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது ரேஷன் விநியோகம் செய்யும் டீலரால் ஏதேனும் இடையூறு ஏற்பட்டாலோ வாடிக்கையாளர் நேரடியாக புகார் அளிக்கலாம். இதற்கு ரேஷன் கார்டு வைத்திருப்பது அவசியமாகும். உங்கள் புகார் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.

அதன்படி நீங்கள் டெல்லி ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருந்தால், மின்னஞ்சல் மூலமாக உங்கள் புகாரை தெரிவிக்கலாம். இதற்கு cfood@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதனுடன், அதிகாரப்பூர்வ வலைத்தளமான http://fs.delhigovt.nic.in இல் ஆன்லைன் புகாரை பதிவு செய்யலாம்.

ரேஷன் முறைகேடுகளை தவிர்க்க புகார் எண்
உத்தரப் பிரதேசம் - 18001800150
உத்தரகாண்ட் - 18001802000, 18001804188
மேற்கு வங்காளம் - 18003455505
மகாராஷ்டிரா- 1800224950
பஞ்சாப் - 180030061313
ராஜஸ்தான் - 18001806127
குஜராத்- 18002335500
மத்தியப் பிரதேசம்- 07552441675, உதவி மையம் எண்: 1967 / 181
ஆந்திரப் பிரதேசம் - 18004252977
அருணாச்சல பிரதேசம் - 03602244290
அசாம் - 18003453611
பீகார்- 18003456194
சத்தீஸ்கர்- 18002333663
கோவா- 18002330022
ஹரியானா - 18001802087
ஹிமாச்சல பிரதேசம் - 18001808026
ஜார்கண்ட் - 18003456598, 1800-212-5512
கர்நாடகா- 18004259339
கேரளா- 18004251550
மணிப்பூர்- 18003453821
மேகாலயா- 18003453670
மிசோரம்- 1860222222789, 18003453891
நாகாலாந்து- 18003453704, 18003453705
ஒடிசா - 18003456724 / 6760
சிக்கிம் - 18003453236
தமிழ்நாடு - 18004255901
தெலுங்கானா - 180042500333
திரிபுரா- 18003453665
டெல்லி - 1800110841
ஜம்மு - 18001807106
காஷ்மீர் - 18001807011
அந்தமான் & நிக்கோபார் தீவுகள் - 18003433197
சண்டிகர் - 18001802068
தாத்ரா & நகர் ஹவேலி & டாமன் & டையூ - 18002334004
லட்சத்தீவு - 18004253186
புதுச்சேரி - 18004251082

மேலும் படிக்க | EPFO: PF பணத்தை இந்த ஆப் மூலம் சுலபமாக பெற்று கொள்ளலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News