76வது குடியரசு தினம்: இந்த 7 படம் ரொம்ப முக்கியம்.. பார்க்க மறந்துறாதீங்க!

2025 ஆம் ஆண்டில் 76வது குடியரசு தின விழாவில் உங்கள் வீட்டில் குடும்பத்துடன் ஒற்றுமையாகத் தேசபக்தி நிறைந்த இந்த 7 படங்களைப் பாருங்கள். இந்தியத் தேசத்தில் இன்று சுதந்திரமாக நடந்து செல்கிறோம் என்பதற்கு காரணமான நம் நாட்டின் தலைவர்களை நாம் இந்த நாளில் நினைவுக்குக் கொண்டுவருவது இன்றியமையக் கடைமை என்றே சொல்லலாம். 

76வது குடியரசு தின விழாவையொட்டி உங்கள் மனதில் தேசபக்தியை மேலும் பலமடங்கு தூண்டும் முக்கிய 7 இந்தியத் திரைப்படங்கள் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டும். இந்திய நாட்டிற்காக உயிர்கொடுத்த மானிடர்கள் முதல் தலைவர்கள் வரை சுதந்திர இந்தியாவை மக்களுக்குப் பெற்றுத்தரத் தனது தீராத முழு தியாகத்தை நாட்டிற்காக அர்ப்பணித்துள்ளனர்.

1 /8

ஆகஸ்ட் 16 1947: நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் புகழ் நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியானது. 1947யில் தகவல் தொடர்பு வசதி இல்லா கிராமத்தில் வசிக்கும் மக்கள் அவர்களின் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாமல் ஆங்கிலேயரின் கீழ் கொடுமையை அனுபவிப்பதை விவரிக்கிறது.   

2 /8

பாரதி: தேவையாணி மற்றும் சாயாஜி நடிப்பில் 2000 ஆம் ஆண்டு பாரதி திரைப்படம் வெளியானது. இப்படம் முழுவதும் மகாகவி பாரதியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியர்கள் அனுபவித்த அவலங்கள் அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

3 /8

ரோஜா:  நடிகர் அரவிந்த் சாமி மற்றும் மதுபாலா நடிப்பில் 1992ஆம் ஆண்டில் வெளியானது. காஷ்மீரில் சுதந்திரத்திற்காகப் போராட்டம் நடத்தப்பட்ட தேசபக்தி நிறைந்த படம்.

4 /8

ஹே ராம்: 2002 ஆம் ஆண்டில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் ஷாருக்கான் நடிப்பில் வெளியான இப்படம் தேசபக்தி நிறைந்த படம். இந்த திரைப்படம் முழுவதும் தேசபக்தியைத் தூண்டும் மற்றும் இந்து - இஸ்லாமியரின் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் படம்.  

5 /8

சிறைச்சாலை: பிரபல மலையாள  நடிகர் மோகன் லால் நடிப்பில் சிறைச்சாலை திரைப்படம் 1996 ஆம் ஆண்டில் வெளியானது. இப்படத்தில் சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளை முன்வைத்து எடுக்கப்பட்ட தேசபக்தி நிறைந்த படம்.

6 /8

இந்தியன் : நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த இப்படம் 1996ஆம் ஆண்டில் வெளியானது. இப்படத்தில் சுதந்திரப் போராட்டத்தில் இந்தியர்கள் அனுபவித்த போராட்ட இன்னல்கள் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

7 /8

கப்பலோட்டிய தமிழன்: சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் அற்புதமான படங்கள். அதிலும் 1961 ஆம் ஆண்டில் கப்பலோட்டிய தமிழன் படத்தில் சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளை எதிர்கால தலைமுறைக்குக் காட்டுகிறது. 

8 /8

வீர பாண்டிய கட்டபொம்மன்: சுதந்திரப் போராட்டம் குறித்து பல்வேறு படங்கள் தமிழிலிருந்தாலும் இப்படத்திற்கு ஈடு வேறுபடம் இல்லையென்றே சொல்லலாம். 1959 ஆம் ஆண்டில் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களை நெஞ்சைப் பறித்த தேசபக்தி நிறைந்த படம்.