மாஸ்கோ: ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான தொடர்ச்சியான பகைமையின் மற்றொரு அடையாளமாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஞாயிற்றுக்கிழமை, ஜோ பிடனை அடுத்த அமெரிக்க அதிபராக அங்கீகரிக்க தான் இன்னும் தயாராக இல்லை என்று கூறினார். எனினும், எந்தவொரு அமெரிக்கத் தலைவருடனும் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.
பொதுமக்களுக்கு ஆற்றிய ஒரு உரையில், புடின், "அமெரிக்க மக்கள் நம்பிக்கைக் கொண்டுள்ள எவருடனும் நாங்கள் பணியாற்றுவோம். ஆனால் அந்த நம்பிக்கையை, எதிர்க்கட்சியால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வெற்றியைப் பெற்ற வேட்பாளர் மீதுதான் காட்ட முடியும். அல்லது சட்ட ரீதியாக முடிவுகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்” என்று கூறினார்.
ஜோ பிடனை (Joe Biden) வாழ்த்த வேண்டாம் என எடுக்கப்பட்ட முடிவு ஒரு ‘முறையான’ முடிவு என்றும் அதில் எந்த விதமான உள்நோக்கமும் இல்லை என்றும் ரஷ்ய அதிபர் தெரிவித்தார்.
அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான உறவுகள் 'பாழாகிவிட்டன' என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.
2016 இல் டிரம்ப் வெற்றி பெற்றபோது, புடின் விரைவாக, முறையாக தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். ஆனால் அந்தத் தேர்தலில் டிரம்ப்புக்கு எதிராக நின்ற ஹிலாரி கிளிண்டனும் தன் தோல்வியை மறுநாளே ஒப்புக்கொண்டார்.
பிடனுக்கு ஆதரவாக தேர்தல் முடுவுகள் வந்து சில நாட்களில், புடினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் இந்த தேர்தல் வித்தியாசமானது என தெரிவித்தார்.
தேர்தலுக்குப் பிந்தைய அமளி அடங்க தான் காத்திருந்ததாகவும், அதனால்தான் காத்திருப்பு அணுகுமுறையை தான் கையாண்டதாகவும் ரஷ்ய அதிபர் வ்ளாடிமிர் புடின் (Vladimir Putin) கூறினார்.
ALSO READ: சீனாவை ஒரு கை பார்க்காமல் டொனால்ட் டிரம்ப் கிளம்ப மாட்டார்: அரசியல் நிபுணர்கள்
"நாங்கள் ஒருவரை ஒருவர் விரும்புகிறோமா அல்லது விரும்பவில்லையா என்பது பற்றிய விஷயமல்ல இது. அமெரிக்காவின் உள் நாட்டு அரசியல் மோதல் முடிவுக்கு வர நாங்கள் காத்திருக்கிறோம்," என்று புடின் கூறினார். தனக்கு டிரம்ப் மற்றும் பிடென் இருவரிடமும் ஒரே மாதிரியான மரியாதை இருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் நவம்பர் மாதம் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று அமெரிக்காவின் முக்கிய ஊடக நெட்வொர்க்குகள் கணித்திருந்தன.
தான் தேர்தலில் வெற்றி பெற்றதாகவும், ஆனால் அந்த வெற்றி ஒரு பெரிய தேர்தல் மோசடி மூலம் தன்னிடமிருந்து திருடப்பட்டதாகவும் டிரம்ப் வாதாடுகிறார். அவர் பல மாநிலங்களில் மீண்டும் வாக்கெண்ணக்கைகள் நடத்தப்பட வேண்டும் என அதற்கான பணிகளை துவக்கியதோடு பல வழக்குகளையும் தாக்கல் செய்துள்ளார்.
ALSO READ: Donald Trump: அரசியல் தோல்வியை தொடர்ந்து குடும்ப வாழ்க்கையிலும் தோல்வியா..!!!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR