புதுடெல்லி: பாகிஸ்தான் நாட்டு தூதரக உயரதிகாரிகள் மீதான இந்தியப் பெண்ணின் குற்றச்சாட்டுகளை விசாரித்து வருவதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. விசா தொடர்பான சந்திப்பின் போது பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள், அந்தப் பெண்ணிடம் பாலியல் வாழ்க்கை மற்றும் திருமண நிலை பற்றி கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பிரதமர் மோடியை விமர்சித்து எழுத வேண்டும் என்றும் அந்த பாகிஸ்தான் ஹைகமிஷன் அதிகாரிகள் வாட்ஸ்அப் செய்திகளை அனுப்பியுள்ளதான புகார் இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அபாசமாக பேசிய பாகிஸ்தான் அதிகாரிகள்
'என்னுடைய பாலியல் வாழ்க்கையைப் பற்றி என்னிடம் கேட்டார்கள்' என்று புகார் தெரிவித்த அந்த என்.ஆர்.ஐ இந்தியப் பெண், பாகிஸ்தான் தூதர்களின் அநாகரீகமான செயல்பாடுகளைப் பற்றி புகார் அளித்துள்ளார். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் அதிகாரிகள் தகாத முறையில் நடந்து கொண்டதாக எழுந்த புகாரை விசாரித்து வருவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் பாகிஸ்தான் ஹை கமிஷன்
2022 ஆம் ஆண்டில், விசாவிற்கு விண்ணப்பிப்பதற்காக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் ஹை கமிஷனுக்கு சென்றிருந்த போது, ஊழியர்கள் தன்னிடம் தேவையற்ற பாலியல் சீண்டல்களை செய்ததாக ஒரு பெண் குற்றம் சாட்டியுள்ளார். அந்த இந்தியப் பெண், பாகிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகத்தின் அழைப்பை ஏற்று, உரையாற்ற பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டியிருந்தது.
மேலும் படிக்க | Budget 2023: பல துறைகளில் பெரிய அறிவிப்புகள், வரி செலுத்துவோருக்கு நிவாரணம்!!
பாகிஸ்தான் விசா
முதலில் விசாவிற்காக தூதரகத்திற்கு சென்றபோது, ஈத் பண்டிகை முடிந்து மே மாதம் வருமாறு கூறப்பட்டது. இருப்பினும், தூதரகத்தில் உள்ள மற்றொரு அதிகாரி, அந்த பெண்ணின் விசா விண்ணப்பத்தை பரிசீலிக்க முடியும் என்று தெரிவித்ததாக புகாரில் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
திருமண நிலை, பாலியல் வாழ்க்கை குறித்து கேள்விகள்
தன்னை வேறொரு அறைக்கு அழைத்துச் சென்று முதலில் பொதுவான கேள்விகளைக் கேட்டதாகவும், பின்னர் அவளது திருமண நிலை மற்றும் பாலியல் வாழ்க்கை குறித்து கேட்கப்பட்ட நிலையில், அந்த உரையாடல் எல்லையைத் தாண்டியதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளதாக நியூஸ் 18 தெரிவித்துள்ளது. "அதிகாரி என்னுடைய அந்தரங்கமான பாலியல் வாழ்க்கையைப் பற்றி கேட்டது சங்கடமாக இருந்தது," என்று அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு, இரண்டு பாகிஸ்தான் அதிகாரிகளும் காலிஸ்தான் இயக்கம் மற்றும் காஷ்மீர் தீர்மானம் பற்றி பேச ஆரம்பித்து, இந்த விஷயத்தில் இருந்து உரையாடலை முழுவதுமாக திசை திருப்பினார்கள்.
கட்டுரைகளில் பிரதமர் மோடியை விமர்சிக்குமாறு கோரிக்கை
இந்த சம்பவம் நடந்து சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து வாட்ஸ்அப் செய்திகள் வந்ததாக அந்தப் பெண் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து கட்டுரைகள் எழுதுவதற்கு ஈடாக இரண்டு பேரும் தனக்கு பணம் தருவதாக கூறியுள்ளனர். ஆண்கள் ஒரே நேரத்தில் செய்தி அனுப்புவதாகவும், அவர்களின் செய்திகளை நீக்கினாலும், அவற்றை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்திருப்பதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம்
இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், விசாவுக்காக, பாகிஸ்தான் ஹைகமிஷனுக்கு வரும் தூதரக விண்ணப்பதாரர்களிடம் முறையான நடத்தை மற்றும் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும், அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியிருக்கிறது,
மேலும் அனைத்து தூதரக ஊழியர்களும் தொழில் ரீதியாக நடந்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும், பாகிஸ்தான் தூதரகங்களுக்குச் செல்லும் நபர்களிடம் தவறாக நடந்துக் கொள்வதற்கோ அல்லது வேறு எந்தவிதமான தவறான நடத்தையையோ பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கண்டித்துள்ளது.
புகார் தொடர்பான விசாரணை
இந்தியப் பெண்ணின் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நேரம் மற்றும் முறை குறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு நடைமுறைப்படுத்தப்பட்ட நடைமுறைகள் உள்ளன என்பதை சுட்டிக்காட்டினார்.
இந்த சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், குற்றச்சாட்டு தொடர்பான மேலதிக விசாரணை நடந்து வருகிறது என்றும் தெரிவித்தார். அதோடு, எந்தவொரு தவறான நடத்தையும் தீவிரமாகவும் முழுமையாகவும் விசாரிக்கப்பட்டு, நிவாரணம் வழங்கப்படும் என்றும், ஏதேனும் தவறுகள் நேர்ந்திருந்தால் அது தொடர்பாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாகிஸ்தான் அரசு உறுதி தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | Budget 2023: வரி செலுத்துவோருக்கு ஜாக்பாட் நிவாரணம்? டிபிஎஃப் வைத்த கோரிக்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ