டிரம்ப் இந்திய வருகை திட்டத்தில் மகள் இவான்காவும் பங்கேறப்பு?

குஜராத்தின் அகமதாபாத்தில் திங்களன்று நடைபெறும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவான்கா மற்றும் அவரது கணவர் ஜாரெட் குஷ்னரும் இந்தியா வர உள்ளனர்.

Last Updated : Feb 21, 2020, 03:10 PM IST
டிரம்ப் இந்திய வருகை திட்டத்தில் மகள் இவான்காவும் பங்கேறப்பு? title=

குஜராத்தின் அகமதாபாத்தில் திங்களன்று நடைபெறும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவான்கா மற்றும் அவரது கணவர் ஜாரெட் குஷ்னரும் இந்தியா வர உள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோர் பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு வரவுள்ளனர். இந்த இரண்டு நாள் பயணத்தின் போது புது தில்லி மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களை விசிட் செய்கிறார் டிரம்ப் மற்றும் அவரது மனைவி. 

அமெரிக்க அதிபர் டிரம்ப் 24ம் தேதி இந்தியா வர உள்ள நிலையில், டெல்லியில் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அகமதாபாத்-ஆக்ரா-டெல்லி ஆகிய மூன்று இடங்களில் மொத்தம் 36 மணி நேரம் இருக்கும் டிரம்ப் 25ம் தேதி பிரதமர் மோடியுடன் பேச்சு நடத்துகிறார்.

உலகிலேயே மிகப்பெரிய பிரம்மாண்டமான கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். அவருடன் பிரதமர் மோடியும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறார். மேலும் அகமதாபாதில் இருந்து ஆக்ரா செல்லும் டிரம்ப் அங்கு தாஜ்மகாலை காண இருக்கிறார். இதில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு டிரம்ப் செல்கிறார். 

அகமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோதிரா கிரிக்கெட் அரங்கை அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி ஆகிய இருவரும் திறந்து வைக்கின்றனர். அதன்பின் பல்வேறு நிகழ்ச்சிகளில் ட்ரம்ப் பங்கேற்கிறார். இந்நிலையில் அதிபர் டிரம்ப் உடன் வரும் உயர்மட்ட குழுவில் இவான்காடிரம்ப்பும் அவரது கணவர் ஜாரெட் குஷ்னரும்இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Trending News