அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் (Joe Biden) வெற்றி பெற்றதாக அமெரிக்க ஊடகங்கள் அறிவித்த மூன்று வாரங்களுக்கு பிறகு சீனா வாழ்த்து தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த நான்கு ஆண்டுகளில் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆட்சியின் போது பெய்ஜிங்கிற்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் மோசமடைந்துள்ளது என்து அனைவரும் அறிந்ததே. வர்த்தகம், தொழில்நுட்பம், கொரோனா வைரஸ் (Corona virus) மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து இரு நாடுகளும் மோதல் போக்கை கடைபிடித்து வந்தன
இந்நிலையில், ஜோ பைடனும் சீன அதிபர் ஜி ஜின்பிங் (Xi Jinping) அனுப்பிய செய்தியில், "வேறுபாடுகளை களைந்து" உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு மேம்பட கவனம் செலுத்தப்படும் என தான் நம்புவதாகக் கூறினார்.
இரு தரப்பினரும் முரண்பாடுகளை களைந்து, பரஸ்பர மரியாதை கொடுத்து மற்றும் இரு தரப்பினருக்கும் பலன் அளிக்கும் வகையிலான ஒத்துழைப்பை ஏற்படுத்தப்படுத்தவும், உலக அமைதிக்காக, மற்ற நாடுகளுடனும் சர்வதேச சமூகத்துடனும் இணைந்து செல்லவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஜி ஜின்பிங் நம்பிக்கை வெளியிட்டார்,
சீன துணை அதிபர் வாங் கிஷன் அமெரிக்க துணைத் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸை வாழ்த்தினார்.
அதிபர் டிரம்ப் நிர்வாகம் , அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனிடம், முறையான ஆட்சி மாற்றத்தை தொடங்க அங்கீகாரம் அளித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு ஜோ பைடனுக்கு (Joe Biden) ஜி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்தார். இருப்பினும், டிரம்ப் (Donald Trump) இதுவரை தனது தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை.
ALSO READ | வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரர் மகனை காணவில்லை... நீடிக்கும் மர்மம்..!!!
குடியரசுக் கட்சியின் தற்போதைய அதிபர் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்ததைத் தொடர்ந்து சீனா ஆரம்பத்தில் பிஜோ பைடனை வாழ்த்த தயங்கியது.
இருப்பினும், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், நவம்பர் 13 ம் தேதி ஊடகவியலாளர் சந்திப்பில் "அமெரிக்க மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தினரிடமிருந்தும் அமெரிக்கத் தேர்தல்கள் குறித்து தெரிவித்துள்ள வாழ்த்துக்களை நாங்கள் கவனித்து வருகிறோம். அமெரிக்க மக்களின் தேர்வை நாங்கள் மதிக்கிறோம், பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அமெரிக்க சட்டங்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவு தீர்மானிக்கப்படும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ”என்று வாங் கூறினார்.
ALSO READ | நான் ஜோ பிடனை அமெரிக்க அதிபராக ஏற்க மாட்டேன்: ரஷ்ய அதிபர் புடின்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR