சீனாவின் விண்வெளி நிலையத்தை உருவாக்குவதற்கான 6 மாத காலப் பயணத்தை முடித்துவிட்டு, 3 சீன விண்வெளி வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை 'Shenzhou-15' ஆளில்லா விண்கலம் மூலம் பூமிக்கு பாதுகாப்பாக திரும்பினர். பெய்ஜிங் நேரப்படி காலை 6.33 மணியளவில், உள் மங்கோலியா தன்னாட்சிப் பகுதியில் அமைந்துள்ள டோங்ஃபெங்கில், ஷென்சோ-15 விணகலத்தில் பயணம் விண்வெளி வீரர்களான ஃபீ ஜுன்லாங், டெங் கிங்மிங் மற்றும் ஜாங் லு தரையிறங்கியதாக சீன மனிதர்கள் கொண்ட விண்வெளி நிறுவனம் (சிஎம்எஸ்ஏ) தெரிவித்துள்ளது. ஜுன்லாங், கிங்மிங் மற்றும் லு ஆகிய விண்வெளி வீரர்கள், சீன விண்வெளி நிலையத்தில், 6 மாத கால விண்வெளி ஆய்வுப் பயணத்தை நிறைவு செய்துள்ளதாக சீனர்களை கொண்ட விண்வெளி நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த மே 30ம் தேதி, சீனா சொந்தமாக உருவாக்கியுள்ள தியாங்காங் விண்வெளி நிலையத்துக்கு 3 விண்வெளி வீரா்களை தனது ஷென்ஷூ-16 விண்கலம் மூலம் அந்த நாடு செவ்வாய்க்கிழமை அனுப்பியது. சீனாவின் கல்லூரி பேராசியரும், ஆய்வாளருமான குய் ஹாய்சாவ், விண்கல தலைவா் ஜிங் ஹைபெங், விண்வெளி பொறியாளா் ஷூ யங்ஷூ ஆகிய மூவரும் அந்த விண்கலத்தின் மூலம் தியாங்காங் விண்வெளி நிலையம் சென்றனா். விண்வெளி நிலையத்தில் 6 மாத கால விண்வெளி ஆய்வுப் பயணத்தை நிறைவு செய்வார்கள் சீனர்கள் கொண்ட விண்வெளி நிறுவனம் அறிவித்துள்ளது.
சர்வதேச விண்வெளி மையம்
ரஷ்யா உட்பட ஏழு நாடுகள் இணைந்து, சர்வதேச விண்வெளி மையத்தை நிறுவியுள்ளன. இதன் ஆயுள்காலம் 2030ல் முடிகிறது. இந்நிலையில், விண்வெளியில் ஆராய்ச்சி செய்வதற்காக தனக்கென தனியாக ஆராய்ச்சி மையத்தை சீனா உருவாக்கி வருகிறது குறிப்பிடத்தக்கது. இதன் கட்டுமானம் மற்றும் அதற்கு தேவையான பொருட்களை, சீனா தொடர்ந்து அனுப்பி வருகிறது. இதன்படி, மூன்று பேர் அடங்கிய குழுவினர், வடமேற்கு சீனாவின் ஜியாகுயான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நான்கு நாட்களுக்கு முன் அனுப்பி வைக்கப்பட்டனர்.
Shenzhou-15 பயணம் வெற்றிகரமாக இருந்தது
விண்வெளி வீரர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஷென்சோ-15 மனிதர்களை ஏற்றிச் சென்ற பயணம் வெற்றிகரமாக இருப்பதாகவும் சீன மனிதர்கள் விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக, மே 30 ஆம் தேதி 3 விண்வெளி வீரர்களுடன் ராணுவத்தில் அல்லாத ஒருவர் உட்பட சீன விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர். இந்த புதிய விண்வெளி வீரர்கள் குழு 5 மாதங்கள் விண்வெளி நிலையத்தில் தங்கியிருப்பார்கள்.
அமெரிக்காவை பின் தள்ளும் சீனா
சீனாவின் இந்த நிலையம் தயாரானால், ரஷ்யாவின் 'சர்வதேச விண்வெளி நிலையம்' (ISS) பல நாடுகளின் கூட்டுத் திட்டமாக இருப்பதால், சொந்த விண்வெளி நிலையத்தைக் கொண்டிருக்கும் ஒரே நாடு சீனாவாகத்தான் இருக்கும். 2030க்குள் ISS சேவையில் இருந்து வெளியேறும்.
மேலும் படிக்க | ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக்கில் செயற்கைக்கோள் நகரத்தை அமைக்க உள்ள இந்தியா!
சாதனையை படைத்துள்ள சீனா
சீனாவின் விண்வெளி நிலையத்தின் மிகப்பெரிய அம்சம் அதன் இரண்டு ரோபோ கைகள். இதில், விண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றக்கூடிய நீண்ட கை முக்கியமானது. மிஷன் கமாண்டர் ஃபீ கூறுகையில், ‘ஒதுக்கப்பட்ட அனைத்து பணிகளையும் முடித்துவிட்டோம். நாங்கள் எங்கள் தாய்நாட்டிற்கு திரும்புவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்றார். ஷென்சோ-16 விண்கலத்தில் அனுப்பப்பட்டுள்ள மூன்று வீரர்களும், கடந்த நவம்பர் மாத இறுதியில் விண்வெளி நிலையத்துக்கு வந்த இந்த 3 பேர் கொண்ட குழுவினர் மாற்றாக விண்வெளி நிலையத்தில் இடம் பெறுவார்கள். அவர்கள் 5 மாதங்கள் தங்கி ஆய்வு பணியை மேற்கொள்வார்கள்.
நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டம்
இதற்கிடையில் வருகிற 2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இது குறித்து சீன விண்வெளி ஆய்வு மைய பிரிவு இணை இயக்குனர் லின் ஷிகியாங் கூறுகையில், "2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி அங்கு சோதனைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. நிலவில் ஆய்வுகள் மேற்கொள்வது மட்டுமின்றி, வேற்று கிரகத்துக்கு மனிதர்களை அழைத்து செல்வதற்கான தொழில்நுட்ப சோதனைகளையும் மேற்கொள்வது இத்திட்டத்தின் நோக்கமாகும்" என்றார்.
மேலும் படிக்க | FATF கருப்பு பட்டியலில் இணைந்தால்... இந்தியாவை எச்சரிக்கும் ரஷ்யா..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ