செக்கச் சிவந்த வானம் திரைப்பட படபிடிப்பின் போது நடிகர் விஜய் சேதுபதிக்கு, நடிகர் சிம்பு உணவு ஊட்டிவிடும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது!
சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற நடிகர் சிம்புவை பற்றி நல்ல விஷயங்களைச் சொல்பவர்களைத் தாண்டி குறை கூறுபவர்கள் தான் அதிகம். நடிகர் சிம்பு எப்போதும் தன் மனதில் பட்டதை அப்படியே வெளிப்படையாக கூறிவிடுவார். அதனாலேயே அவர் நிறைய பிரச்சனைகளை சந்தித்தார் என்றே கூறலாம்.
சில காலங்களுக்கு முன்பு நடிகர் சிம்பு சமூகவலைத்தளத்திலிருந்து வெளியேறினார். அந்த வகையில் நடிகர் சிம்பு நீண்ட நாட்கள் கழித்து ரசிகர்களுக்காக வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். வீடியோ பார்க்க.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. பெண் ரசிகைகளே இவருக்கு அதிகம் என்னும் அளவுக்கு திறமை கொண்டவர்.
எத்தனை சர்ச்சைகள் வந்தாலும் அதனால் துவண்டுவிடாத சிம்பு, சமீபத்தில் அவரது அடுத்த படம் குறித்த அதிரடி அறிவிப்புகளை தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட முக்கிய சமூக வலைதளங்களில் இருந்து தான் வெளியேறுவதாக சிம்பு அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து நடிகர் சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் இறுதியாக குறிப்பிட்டிருந்த விளக்கம் வருவதாவது,
ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் சிம்பு 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படத்தில் நடித்தார். இப்படத்திற்கு பிறகு தற்போது நடிகர் சிம்பு யார் இயக்கத்தில், எந்த மாதிரியான கதைக்களத்தில் நடிக்கப்போகிறார் என்று பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
குறிப்பாக அஜித் நடிப்பில் வெளியான பில்லா படத்தின் 3 ஆம் பாகத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது.
இதையடுத்து நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில், அடுத்த படம் குறித்து டிவித் பதிவு செய்துள்ளார். அதில்,
கிருஷ்ணா, ஆனந்தி, நிதின் சத்யா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் ‘பண்டிகை’. ஃபிரோஷ் இயக்கத்தில், நடிகை விஜயலட்சுமி இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லரை நேற்று நடிகர் சிம்பு வெளியிட்டார்.
தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் ஜூலை 7-ம் தேதி ‘பண்டிகை’ திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்துக்கு சிம்பு இசையமைக்க இருப்பதாக சமூகவலைதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், அட்லீ இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார் இப்படத்தைத் தொடர்ந்து லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார்.
இப்படம் குறித்த தகவல் வெளியான நேரத்தில், இதற்கு சிம்பு இசையமைக்கவுள்ளதாக சமூகவலைதளத்தில் செய்திகள் வெளியானது.
தாய்மாமன் ஆனதில் மகிழ்ச்சியாக உள்ளது என்று நடிகர் சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிம்புவின் தங்கை இலக்கியா ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதனால் டி. ராஜேந்தர், சிம்பு ஆகியோர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் இது குறித்து சிம்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் அஸ்வின் தாத்தா டீஸரை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் சிம்புவுக்கு போன் செய்து பாராட்டியுள்ளதாக சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் குஷியாக பதிவு செய்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இதில் சிம்பு மூன்று வித்தியாசமான வேடங்களில் வருகிறார்.
இந்நிலையில் அஸ்வின் தாத்தா டீஸர் ரிலீஸாகியுள்ள நிலையில் ட்ஸீரை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி சிம்புவுக்கு போன் செய்து பாராட்டியுள்ளார்.
இது குறித்து சிம்பு டிவிட்டரில் கூறியிருப்பதாவது:-
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு மூன்று வேடத்தில் நடிக்கும் படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.
டீஸர், பஸ்ட் லுக் என ரசிகர்களை ஏற்கெனவே படக்குழு குஷிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இப்படத்தில் சிம்பு நடிக்கும் வேடமான அஸ்வின் தாத்தா டீஸர் வெளியாகி உள்ளது.
அதன்படி நேற்று டீஸர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள், இளைஞர்கள் இணைந்து நடத்திய அமைதிப் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்தாலும், இந்த போராட்டம் கடைசியில் வன்முறையில் முடிந்தது அனைவருக்கும் பெரிய வருத்தத்தை கொடுத்துள்ளது.
இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சிம்பு, இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர்:-
தமிழகம் முழுவதும் நடந்து வரும் ஜல்லிக்கட்டு போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் தெரு முனைகளில் மக்கள் திரண்டு தொடர்ந்து போராட்டத்தை நடத்த வேண்டும் என்று நடிகர் சிம்பு அழைப்பு விடுத்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சிம்பு, தன் வீட்டு முன்பு குடும்பத்தாருடன் கறுப்பு உடையணிந்து மவுனமான முறையில் போராட்டம் நடத்தினார்.
ஜல்லிக்கட்டுக்காக மாநிலம் முழுக்க பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றனர். அரசியல் கட்சியினர், மாணவர்கள், திரையுலகினர் என பலரும் போராட்டகளத்தில் குதித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த சிம்பு பேசினார். இன்று தமிழக மக்கள் அவரவர் இருக்கும் இடத்தில் 10 நிமிடம் எழுந்து நின்று மவுன போராட்டம் நடத்துங்கள் என கோரிக்கை விடுத்திருந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.