ஜல்லிக்கட்டுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் சிம்பு இன்று தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்பொழுது அவர் கூறியதாவது:-
தமிழை தாய்மொழியாக கொண்டதில் பெருமை அடைகிறேன். தமிழில் ஐந்தாம் வகுப்பு வரை 99 மதிப்பெண்கள் எடுத்தேன். நான் முதலில் தமிழன், பிறகுதான் நான் இந்தியன். தமிழர்களுக்கு ஏகப்பட்ட பிரச்னை இருக்கிறது.
சிம்பு நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் அச்சம் என்பது மடமையடா படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் சிம்பு மற்றும் மஞ்சிமா மோகன் நடிக்கிறார்கள். கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் இசையமைத்துள்ளார். இப்படம் நவம்பர் வெளியாகிறது.
கடந்த வாரம் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் ரெமோ. இந்த படத்திற்கான ப்ரெஸ் மீட் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.
அந்த ப்ரெஸ் மீட்டில் பேசிய சிவகார்த்திகேயன் ரெமோ திரைப்படம் வெளியிடுவதற்கு பெரிதும் போராடியதாகவும் மற்றும் சிலர் படம் வெளிவர விடாமல் தொல்லைகள் கொடுத்ததாகவும் அவர் கூறி கண்ணீர் விட்டு அழுதார். இச்சம்பவம் தமிழ் திரை வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்புவின் புதிய கெட்டப் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அடர்ந்த முடி, அடர்ந்த தாடியுடன் இருக்கும் சிம்புவின் இந்த புதிய கெட்டப் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.
முதன்முறையாக சிம்பு இதில் 3 வேடங்களில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சிம்பு நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் அச்சம் என்பது மடமையடா படத்தின் புதிய டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் சிம்பு மற்றும் மஞ்சிமா மோகன் நடிக்கிறார்கள். கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் இசையமைத்துள்ளார். இப்படம் ஜூலை 15-ம் தேதி வெளியாகிறது.
அச்சம் என்பது மடமையடா' திரைப்படத்துக்காக உருவாக்கிய 'ராசாளி' பாடலில் ஆங்காங்கே ஒலிக்கும் மரபுசார் இசை மற்றும் வரிகள், கதையின் போக்கிற்கு உதவும் நோக்கில் இழைக்கப்பட்டிருக்கின்றன. அருணகிரிநாதரின் முத்தைத்தரு பத்தித் திருநகை, நின்னுக்கோரி வர்ணம், பட்டணம் சுப்பிரமணியரின் வளச்சி வாச்சி ஆகிய இசைப் படிவங்கள் கொண்டு, கதை நகரும் களங்களுக்கு இசையின் மூலமாக உங்களைக் கொண்டுசெல்லும் சிறு முயற்சி இது.
புதிய இசையும் மரபுசார் இசையும் இணையும்போது கிடைக்கும் அனுபவம் இது.
கடந்த 3 வருடங்களாக காத்துக் கொண்டு இருந்த ரசிகர்களுக்கு "இது நம்ம ஆளு" இன்று ரிலீஸ் செய்யப்பட்டது. ரசிகர்கள் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.
டிவிட்டரில் #idhunammaaalu என்ற ஹெஷ்டேக் உருவாக்கி ரசிகர்கள் தங்கள் பாராட்டுகளையும், விமர்சனங்களையும் பதிவு செய்து வருகின்றன. இந்த ஹெஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த 3 வருடங்களாக காத்துக் கொண்டு இருந்த ரசிகர்களுக்கு மகிழ்சி. இது நம்ம ஆளு நாளை ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளனர்.
இதைக்குறித்து சிம்பு கூறியதாவது:-
"இது நம்ம ஆளு படம்" வெறும் காதலை மட்டும் பேசும் படம் இல்லாமல் பெண்ணகளை பற்றி உயர்வாக சொல்லும் ஒரு படம். அது மற்றும் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கும் விதத்தில் இப்படம் இருக்கும்.
இந்த படத்தில் நடித்து எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.