தமிழ்நாட்டின் ஒரு பகுதியான சிவகங்கை சீமையை ஆங்கிலேயார்கள் கைப்பற்றிய பிறகு தலைமறைவாக இருந்து படை திரட்டி அவர்களை தோற்கடித்து மீண்டும் ஆட்சியை பிடித்த வீரப் பெண்மணி வேலு நாச்சியார். உலகில் முதல் பெண்கள் படைப்பிரிவையும், தற்கொலை படைப்பிரிவையும் உருவாக்கியவர் வேலு நாச்சியார்.
வேலுநாச்சியார் வாழ்க்கையை சொல்லும் நாட்டிய நாடகத்தை ஸ்ரீராம் சர்மா என்பவர் நடத்தி வருகிறார். நேற்று இந்த நாட்டிய நாடக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது பேசிய வைகோ, இந்த நாடகமானது விரைவில் சினிமாவாகும் என அறிவிப்பை வெளியிட்டார்.
தனா இயக்கும் படைவீரன் படத்திற்காக தனுஷ் குரலில் விஜய் யேசுதாஸ் EVOKE PRODUCTIONS A. மதிவாணன் தயாரிப்பில் மணிரத்தினத்தின் துணை இயக்குனராக பணிபுரிந்த தனா இயக்கத்தில் “படைவீரன்” என்ற படம் உருவாகி வருகிறது. கதாநாயகனாக பாடகர் விஜய் யேசுதாஸ் அறிமுகமாக, மிகமுக்கிய கதாபத்திரத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா நடித்திருக்கிறார். நாயகியாக அம்ரிதா ஐயர் அறிமுகமாக, இயக்குனர் மனோஜ் குமார், இயக்குனர் கவிதா பாரதி, நிதிஷ் வீரா, கலையரசன், சுரேஷ் ஏகா, சாரா ஜோசப், கன்யா பாரதி உள்ளிட்ட பலர் நடித்திருகின்றனர்.
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் சமந்தா நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கியது. சிம்ரன், சூரி உள்பட பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.
சிவகார்த்திகேயன்- பொன்ராம் கூட்டணியில் உருவாகும் 3-வது படமாகும் இது. அக்டோபர் மாதம் சமந்தாவுக்கு திருமணம் நடைபெற இருப்பதால், திருமணத்திற்கு முன்பு தனது காட்சிகளை நடித்து கொடுக்கிறார்.
விக்ரமுடன் தற்போது தமன்னா ‘ஸ்கெட்ச்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பையும் தமன்னா முடித்துவிட்டதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தில் இவருடன் ஐஸ்வர்யா ராஜேஷும் இன்னொரு ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஸ்கெட்ச்’ படத்தை விஜய் சந்தர் இயக்கி வருகிறார். தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 80 சதவீதம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அடுத்த மாத இறுதியில் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள 'நெருப்புடா' படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில், நடிகர்கள் பிரபு, விஷால், லாரன்ஸ், தனுஷ், சத்யராஜ், இயக்குநர் விக்ரமன், 'நெருப்புடா' படத்தின் கதாநாயகி நிக்கி கல்ராணி ஆகியோர் பங்கேற்றனர்.
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டோரா’ படத்திற்கு சென்சார் போர்டு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளது. திகில் காட்சிகள் படத்தில் அதிகம் இடம்பிடித்துள்ளதால் சென்சார் போர்டு இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளனர்.
இந்நிலையில் ‘டோரா’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் அளித்ததற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் சென்சார் போர்டை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன் - விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் 'விக்ரம் வேதா' படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது.
'ஓரம் போ', 'வா' உள்ளிட்ட படங்களை இயக்கிய இணை புஷ்கர் - காயத்ரி. இருவருமே தங்களுடைய அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் நீண்ட நாட்களாக ஈடுபட்டு வந்தார்கள். இப்படத்தை சசிகாந்த் தயாரிக்க முன்வந்தார்.
'விக்ரம் வேதா' எனத் தலைப்பிடப்பட்டு இருக்கும் இப்படத்தில் மாதவன், விஜய் சேதுபதி, கதிர், ஷரதா ஸ்ரீநாத், வரலெட்சுமி சரத்குமார் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன் - விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் 'விக்ரம் வேதா' படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
'ஓரம் போ', 'வா' உள்ளிட்ட படங்களை இயக்கிய இணை புஷ்கர் - காயத்ரி. இருவருமே தங்களுடைய அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் நீண்ட நாட்களாக ஈடுபட்டு வந்தார்கள். இப்படத்தை சசிகாந்த் தயாரிக்க முன்வந்தார்.
'விக்ரம் வேதா' எனத் தலைப்பிடப்பட்டு இருக்கும் இப்படத்தில் மாதவன், விஜய் சேதுபதி, கதிர், ஷரதா ஸ்ரீநாத், வரலெட்சுமி சரத்குமார் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
ரஜினிகாந்த் சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து ‘சூப்பர் ஸ்டாராக’ உயர்ந்தார். சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் 1973-ல் பெங்களூர் போக்குவரத்து கழக பஸ்சில் அவர் பணியாற்றினார். அதன்பிறகு சென்னை வந்து சினிமா வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார். அப்போது டைரக்டர் கே. பாலசந்தர் மூலம் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் நடிகராக அறிமுகமானார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.