கோடக் மகிந்தரா வங்கி மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் தனியார் வங்கியாகும். அதிக சந்தை மதிப்பு கொண்ட வங்கிகள் பட்டியலில் (எஸ்பிஐ) பாரத ஸ்டேட் வங்கியை பின்னுக்கு தள்ளி கோடக் மகிந்தரா வங்கி 2வது இடத்தை பிடித்துள்ளது.
வட்டி விகிதக் குறைப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு சேமிப்பு வங்கிக் கணக்கு வட்டி விகிதத்தை முதன் முறையாகக் குறைத்தது எஸ்பிஐ.
அந்த வகையில்,
> 1 கோடிக்கும் குறைவான தொகை கொண்ட சேமிப்பு வங்கிக் கணக்குகளுக்கு 3.5% வட்டி என்று குறைத்துள்ளது.
> ரூ.1 கோடிக்கும் அதிகமான சேமிப்புக்கு 4% வட்டி என்பதில் மாற்றமில்லை.
இந்த புதிய வட்டி விகிதம் ஜூலை 31-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
எஸ்பிஐ வங்கி பல்வேறு சேவைகளுக்கு அறிவித்துள்ள புதிய கட்டண விகிதங்கள் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளன.
இலவமாக இதுவரை அளிக்கப்பட்டு வந்த ஐஎம்பிஎஸ் எனப்படும் உடனடி பணபரிமாற்ற சேவைக்கு இனிமேல் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும்.
> ஒரு லட்சம் ரூபாய் வரை 5 ரூபாய் சேவை வரி வசூலிக்கப்படும்.
> 2 லட்சம் ரூபாய் வரை 15 ரூபாய்
> 5 லட்சம் ரூபாய் வரை 25 ரூபாய்
என கட்டணம் இருக்கும்.
அதேபோல் ஏ.டி.எம். கார்டுகளை பொறுத்தவரை ரூபே கார்டுகள் மட்டுமே இலவசம். இதர கார்டுகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
ரூபாய் 30 லட்சத்துக்கும் கீழ் உள்ள வீட்டுக்கடனுக்கான வட்டியை 0.25% (எஸ்பிஐ) ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.
அதேபோல், 30 லட்சத்துக்கும் மேலான கடன்களுக்கு வட்டி 0.10% குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட இந்த வட்டி விகிதம் நாளை முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா குறைப்பின் மூலம் இனி வட்டி 8.35% இருக்கும்.
பாதுகாப்பு பெட்டக வசதி, காசோலை வசதி உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) உயர்த்தியுள்ளது. பாதுகாப்பு பெட்டகத்தை ஆண்டுக்கு 12 முறை மட்டுமே இலவசமாக பயன்படுத்தலாம் என்று பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கு மேல் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறையும் ரூ.100 கட்டணத்துடன் சேவை வரி வசூலிக்கப்படும்.
ஏடிஎம் இயந்திரத்தின் மூலம், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு, டெபிட் கார்டு பின் எண் போன்றவை திருடப்பட்டிருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் 30 லட்சம் டெபிட் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் முன்னணி வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களில் சுமார் 20 லட்சம் பேரின் டெபிட் கார்டுகளை முடக்கியுள்ளது. ஏடிஎம் மையங்கள் மல்வாரே தாக்கி பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
கடந்த ஜூலை மாத நிலவரப்படி, எஸ்பிஐ மற்றும் அதன் துணை வங்கிகள் சார்பாக, நாடு முழுவதும் 4.75 கோடி டெபிட் கார்டுகள் தரப்பட்டதாக குறிப்பிடத்தக்கது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.