டிவிட்டரில் கருத்து பதிவிடுவோர் இனி 280 எழுத்துக்கள் வரை அடிக்கலாம் என டிவிட்டர் அறிவித்துள்ளது.
டிவிட்டரில் கருத்துகளை பதிய இதுநாள் வரையில் 140 எழுத்துகளுக்குள் மட்டுமே எழுத முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது. இந்நிலையில் தற்போது அதனை தளர்த்தி கூடுதலாக 140 எழுத்துகள் எழுத டிவிட்டரில் வாய்ப்பு தந்துள்ளது.
இது சிறிய அளவிலான மாற்றமாக இருந்தாலும் பலரிடமும் வரவேற்பை பெறும். கருத்து பதிவிடுவோர் மற்றும் எஸ்எம்எஸ் அனுப்புவோருக்கு 140 முதல் 160 எழுத்துக்கள் என்பது பெரிய பிரச்னையாக இருந்தது. இதனால் எழுத்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு, டிவிட்டர் குழுவால் சோதனை அடிப்படையில் 280 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.