Guru Peyarchi 2025: குரு பகவான் கடந்த நவம்பர் 28ம் தேதி ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரித்த நிலையில், 2025, ஏப்ரல் 10ம் தேதி வரை அங்கேயே இருப்பார். இந்நிலையில், குரு பெயர்ச்சி, எந்த ராசிகளுக்கு கோடி நன்மைகளை கொட்டி கொடுக்கப் போகிறது, எந்த ராசிகள் சிறிது கவனமாய் இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
கிரகங்களின் இயக்கம் நம் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், குரு பெயர்ச்சி, அனைத்து ராசிகளின் வாழ்க்கையின் சில முக்கிய அம்சங்களான தொழில், கல்வி, நிதி நிலை மற்றும் குடும்ப உறவுகளில் எந்த வித மாற்றங்களைக் கொண்டு வரும் என அறிந்து கொள்ளலாம்.
மேஷம்: குரு பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு நிதி பலன்களை அள்ளித் தரும். புதிய தொழில் தொடங்க அல்லது முதலீடு செய்ய நல்ல நேரம். வருமானம் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இருப்பினும், செலவுகளும் அதிகரிக்கக்கூடும், எனவே பட்ஜெட்டில் கவனம் செலுத்துங்கள். தனிப்பட்ட வாழ்க்கையில், நீங்கள் பொறுமையாக இருந்தால், சிக்கல்களை எளிதாக தீர்க்க முடியும்.
ரிஷபம்: குரு பெயர்ச்சி ரிஷபம் ராசிக்காரர்களுக்கு கலவையான பலனைத் தரும். வேலையில், தொழிலில், நீண்ட கால திட்டமிடலுக்கு சாதகமான நேரம். எனினும், வாழ்க்கைத் துணை அல்லது காதல் துணை தொடர்பான விஷயங்களில் குழப்பம் ஏற்படலாம், இதன் காரணமாக முடிவுகள் எடுப்பதில் சிரமம் ஏற்படலாம். தன்னம்பிக்கையை அதிகரிக்கும் நேரமிது, எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்காமல் இருந்தால், குருவின் அருளால் உங்கள் எண்ணங்கள் தெளிவாகும்.
மிதுனம்: குரு பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். நீங்கள் புதிய வேலை அல்லது படிப்பில் அடியெடுத்து வைக்க நினைத்தால், உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கும். இருப்பினும், பணிச்சுமையால் மன சோர்வை சந்திக்க நேரிடலாம். எனவே வேலையுடன் உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். குடும்ப வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மனம் விட்டு பேசுவதால் பிரச்சனை தீரும்.
கடகம்: குரு பெயர்ச்சி கடக ராசிகளுக்கு மன அமைதியையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கும். உங்களுக்குள் ஒரு புதிய ஆற்றலையும் நம்பிக்கையையும் அனுபவிப்பீர்கள். இருப்பினும், நெருங்கிய உறவுகளில், சிறிய விஷயங்களில் தகராறு ஏற்படலாம். இது பதட்டத்திற்கும் வழிவகுக்கும். தொழில் பயணத்தில் தடங்கல் ஏற்படுவதற்கான அறிகுறிகள் உள்ளன, எனவே உறுதியான திட்டங்களை வகுக்கவும்.
சிம்மம்: குரு பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் வேலையில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள், உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். சமூக உறவுகளும் மேம்படும். ஆனால், குடும்ப உறவுகளில் சில சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்பதால் குடும்ப விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
கன்னி: குரு பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களை தரும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். ஆனால் முக்கிய முடிவுகளை எடுக்கும் போது சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில், நீங்கள் வேலையில் அதிக சுமை இருப்பதாக உணரலாம், இது உடல் மற்றும் மன சோர்வுக்கு வழிவகுக்கும். மன அழுத்தம் ஆரோக்கிய பிரச்சனைகளை உண்டாக்கும் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
துலாம்: குரு பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு, குறிப்பாக கல்வி, பயண விஷயங்களில் மிகுந்த பலன் தரும். மேலும் புதிய திட்டம் அல்லது யோசனைகளை ஏற்றுக்கொள்வதற்கு இந்த நேரம் சாதகமானது. வெளியூர் பயணம், உயர்கல்வி மற்றும் வணிக கூட்டாண்மைக்கு சாதகமான நேரம். நீங்கள் சிந்தனையில் நேர்மறையான மாற்றங்களை உணருவீர்கள்.
விருச்சிகம்: குரு பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு நிதி விஷயங்களில் முன்னேற்றம் தரும். சேமிப்பை அதிகரித்து நிதி திட்டங்களில் வெற்றியை அடையலாம். பண வரவும் மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். இருப்பினும், குடும்பம் தொடர்பான சில பிரச்சனைகள் எழலாம், அதை தீர்க்க கவனம் தேவை. நீங்கள் குடும்ப சண்டைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
தனுசு: குரு பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். உங்கள் தொழிலில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். மேலும் முக்கிய முடிவுகளை சரியான திசையில் எடுப்பீர்கள். குடும்ப விஷயங்களில் சில சிக்கல்கள் ஏற்படக்கூடும், அதைத் தீர்க்க நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையின் கண்ணோட்டத்தில் மாற்றம் மற்றும் மன அமைதி அடைய நேரம் நல்லது.
மகரம்: குரு பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு நற்பலன்களைக் கொடுக்கும். கல்வி, ஆராய்ச்சி மற்றும் மனவளர்ச்சிக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். ஏதேனும் புதிய படிப்பில் சேர அல்லது உங்கள் தொழிலை மாற்ற நினைத்தால், இதுவே சரியான நேரமாக இருக்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் இருக்கலாம் ஆனால் முக்கிய முதலீட்டு முடிவுகளை தவிர்க்க வேண்டும்.
கும்பம்: குரு பெயர்ச்சி கும்பம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் புதிய முயற்சி அல்லது திட்டம் ஏதேனும் நினைத்தால் இந்த நேரம் உங்களுக்கு நல்லதாக இருக்கும். நிதி நிலைமை மேம்படும். ஆனால் சில முக்கிய நிதி முடிவுகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனை இருக்கலாம் ஆனால் அதை சமரசம் மூலம் தீர்க்க முடியும்.
மீனம்: குரு பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் மன அமைதி ஆகியவற்றை கொடுக்கும் காலமாக இருக்கும். உங்கள் தொழிலிலும் நல்ல பலன்களைப் பெறலாம். உங்கள் கடின உழைப்புக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கும். புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டிய நேரம் இது. பழைய பிரச்சனைகளை தீர்க்க சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்தத் தகவல்களுக்கு ZEE News பொறுப்பேற்காது.