EPFO New Rules: இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. சமீபத்தில், EPFO இன் மத்திய அறங்காவலர் குழுவின் (CBT) 236வது கூட்டம் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது, இபிஎஃப் உறுப்பினர்களின் (EPF Members) பலன்களை அதிகரிக்கவும், செயல்முறையை எளிதாக்கவும் பல மாற்றங்களுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இவற்றை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
உறுப்பினர்களின் அதிக வருமானத்திற்காக ETFs எனப்படும் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்களுக்கான (Exchange Traded FUnds) மீட்புக் கொள்கைக்கு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மத்திய அறங்காவலர் வாரியம் (CBT) ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் (CPSEகள்) மற்றும் பாரத் 22 குறியீட்டில் ETF இலிருந்து பெறப்பட்ட நிதியில் 50 சதவீதத்தை மறு முதலீடு செய்ய CBT ஒப்புதல் அளித்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
புதிய கொள்கையில் உள்ளது என்ன?
- புதிய கொள்கையின்படி, குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஃபண்டை வைத்திருப்பது கட்டாயமாகும்.
- மீதமுள்ள தொகை அரசு பத்திரங்கள் மற்றும் கார்ப்பரேட் பத்திரங்கள் போன்ற பிற நிதி கருவிகளில் முதலீடு செய்யப்படும் என்று அறிக்கைகள் மேலும் கூறுகின்றன.
- மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வழங்கிய தகவல், இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தால் (SEBI) ஒழுங்குபடுத்தப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களால் நிதியளிக்கப்படும் உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகள் (இன்விட்கள்) / ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகள் (REITs) மூலம் வழங்கப்படும் யூனிட்களில் முதலீடு செய்ய CBT அனுமதித்துள்ளது.
அதிக வட்டி கிடைக்கும்
EPF திட்டம் 1952 இல் ஒரு முக்கியமான திருத்தத்திற்கும் வாரியம் ஒப்புதல் அளித்தது. தற்போதுள்ள விதிகளின்படி, ஒவ்வொரு மாதமும் 24 ஆம் தேதிக்குள் தீர்வு செய்யப்படும் க்ளெய்ம்களுக்கு முந்தைய மாத இறுதி வரை மட்டுமே வட்டி செலுத்தப்படும். இப்போது தீர்வு தேதி வரை இபிஎஃப் உறுப்பினருக்கு(EPF Members) வட்டி வழங்கப்படும். இதன் மூலம் உறுப்பினர்களுக்கு நிதிப் பலன்கள் கிடைப்பதுடன் புகார்களும் குறையும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Auto Claim Limit: தானியங்கு க்ளெய்ம் வரம்பு அதிகரிப்பு
இது தவிர, ஆட்டோ க்ளைம் வரம்பையும் அரசு உயர்த்தியுள்ளது. தற்போது வீடு கட்ட, திருமணம் மற்றும் கல்விக்கான இந்த வரம்பு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் 1.15 கோடி ஆட்டோ க்ளைம்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. நவம்பர் 2024 வரையிலான தரவுகளின்படி, நிராகரிப்பு விகிதம் 14 சதவீதமாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசின் இந்த முடிவுகளால் நாடு முழுவதும் உள்ள 7 கோடி இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் பயனடைவார்கள். நடப்பு நிதியாண்டில் 1.57 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள 3.83 கோடி க்ளெய்ம்களுக்கான தீர்வை இபிஎஃப்ஓ வழங்கியுள்ளது என்றும், இதன் மூலம், தனது பணியின் வேகத்தை EPFO அதிகரித்துள்ளது என்றும் CBT தெரிவித்துள்ளது என்றும் CBT தெரிவித்துள்ளது. 2023-24 நிதியாண்டில், EPFO 4.45 கோடி 1.82 லட்சம் கோடி க்ளைம்களை தீர்த்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ