சைபர் கிரைம் ஆசாமிகள் பயன்படுத்தும் டெக்னிக் இவை தான்... எச்சரிக்கும் போலீஸார்

டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சைபர் மோசடியில் இழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது குறித்த செய்திகள் அடிக்கடி செய்தித் தாள்களிலும் ஊடகங்களிலும் காண்கிறோம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 9, 2024, 10:24 AM IST
  • சைபர் மோசடி ஆசாமிகள் குறிப்பிட்ட சில டெக்னிக்குகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகின்றனர்.
  • மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பறிக்கும் சைபர் கிரைம் ஆசாமிகள்.
  • சைபர் கிரைம் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு காவல்துறை மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
சைபர் கிரைம் ஆசாமிகள் பயன்படுத்தும் டெக்னிக் இவை தான்... எச்சரிக்கும் போலீஸார் title=

டிஜிட்டல் யுகத்தில், நமது பணிகள் பல எளிதாகி விட்டாலும், ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பாடிப்பட்டு  சம்பாதித்த பணத்தை சைபர் மோசடியில் இழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது குறித்த செய்திகள் அடிக்கடி செய்தித் தாள்களிலும் ஊடகங்களிலும் காண்கிறோம். இந்நிலையில் தில்லி போலீஸார் சில முக்கிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.

சைபர் குற்றவாளிகள் மக்களை பல வழிகளில் ஏமாற்றி வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தலைநகர் டெல்லியில், இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில், சைபர் கிரைம் வழக்குகள் அதிகரித்துள்ளன. இதில் பெரும்பலானவை UPI தொடர்பானவை. இந்த காலகட்டத்தில், 25,924 பேர் UPI தொடர்பான மோசடி தொடர்பான புகார்களை அளித்துள்ளனர் என டெல்லி காவல்துறை கூறியுள்ளது. 

மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பறிக்கும் சைபர் மோசடி ஆசாமிகள் குறிப்பிட்ட சில டெக்னிக்குகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகின்றனர் என போலீஸார் எச்சரித்துள்ளனர். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

டூப்ளிகேட்  UPI QR குறியீடு

டூப்ளிகேட்  UPI QR குறியீட்டை அனுப்பி, மோசடியில் ஈடுபடுகிறார்கள். உங்கள் நண்பர்களாகவோ அல்லது உறவினர்களாகவோ தங்களை அடையாளப் படுத்திக் கொண்டு, காட்டி உங்களை ஏமாற்றுகிறார்கள். ஏதோ அவசரத்தில் பணம் தேவை என்று சொல்லி, டூப்ளிகேட்  UPI QR குறியீட்டை அனுப்பி, உங்களிடம் பணம் கேட்பார்கள். உங்கள் UPI கணக்கில் உள்ள அனைத்து தகவல்களும் திருடப்படக்கூடிய ஆபத்தான பகுதிகளுக்கு இந்தக் குறியீடுகள் உங்களை அழைத்துச் செல்லும். எனவே இது குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்.

மேலும் படிக்க | Jio Fiber: ரிலையன்ஸ் ஜியோவின் பிராட்பேண்ட் திட்டம்... அன்லிமிடெட் டேட்டா உடன் OTT நன்மைகள்

போலி ஸ்க்ரீன்ஷாட் மூலம் மோசடி

சிலர் உங்களுக்கு பணம் அனுப்பியதாக போலியான ஸ்கிரீன்ஷாட்களை அனுப்பி, தான் தவறாக அணுப்பி விட்டதாகவும் அதனால் பணத்தை திரும்ப தருமாறும் கூறுவார்கள். அதற்காக டூப்ளிகேட்  UPI QR குறியீட்டை அனுப்பி, உங்களிடம் பணம் கேட்பார்கள்.  

ஆபத்தான செயலிகள் மூலம் தரவுகளை திருடுதல்

சில செயலிகள் அல்லது ஆப்ஸ் உங்கள் ஃபோன் திரையை கண்காணிக்கும் ஆற்றல் கொண்டவை. இதன் மூலம் ஹேக்கர்கள் உங்கள் UPI பின் எண் மற்றும் OTP போன்ற முக்கியமான எண்களை திருடலாம்.

பண உதவி கேட்டு சிக்க வைத்தல்

சிலர் போலி கோரிக்கைகளை அனுப்பி, தாங்கள் சிக்கலில் இருப்பதாகவும் உங்கள் உதவி தேவை அல்லது ஏதேனும் வங்கி சார்பாக செய்தி அனுப்புங்கள் என்று கேட்பார்கள். இதற்கான லிங்கை அனுப்பி தங்களுக்கு உதவுமாறு கேட்பார்கள். எனவே இது குறித்து எச்சரிக்கையாக இருக்கவும். .

சைபர் கிரைம் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு டெல்லி காவல்துறை மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. UPI தொடர்பான பல மோசடிகள் நடைபெறுவதாக காவல்துறை கூறுகிறது. அதனை தவிர்க்க, நீங்கள் கீழ்கண்ட விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்:

1. போலி ஸ்கிரீன் ஷாட்களை நம்பாதீர்கள்

2. யாருக்கும் சரிபார்ப்பு இல்லாமல் பணம் அனுப்பாதீர்கள்.

3. தெரியாதவர் அனுப்பும் QR குறியீடுகளை ஸ்கேன் செய்ய வேண்டாம். 

4. உங்கள் UPI பின், OTP அல்லது பிற தகவல்களை யாருடனும் பகிர வேண்டாம். 

5. முன் பின் தெரியாதவரின்  எந்த ஒரு கோரிக்கையை ஏற்க வேண்டாம்.

மேலும் படிக்க | மலிவான கட்டணத்தில் தினம் 3GB... 22+ OTT சேனல்கள்... அசத்தும் ஏர்டெல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News