ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் அடிக்கடி புதுப்புது சர்பிரைஸ்களை கொடுத்துக் கொண்டே இருக்கும். அந்தவகையில் இப்போது அறிவித்திருக்கும் நெட்பிளிக்ஸ் சப்ஸ்கிரிப்சன் பிளான் தான் ஜியோ வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தியுள்ளது. நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா, 5ஜி நெட்வொர்க், 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த பிளான் 1099 ரூபாய் மட்டுமே. இந்த திட்டம் குறித்த கூடுதல் விவரங்களை இங்கே பார்க்கலாம்.
ஜியோவின் நெட்பிளிக்ஸ் பிளான்
ஜியோவின் 1099 ரூபாய் பிளானில் நெட்பிளிக்ஸ் மூன்று மாதங்களுக்கு கிடைக்கும். இதன் விலை மாத அடிப்படையில் கணக்கிட்டால் 392 ரூபாய் தான். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல் ஓடிடி (OTT) மற்றும் ஜியோ அன்லிமிடெட் ட்ரூ 5ஜி டேட்டா (Jio Unlimited True 5G Data) சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி வீதம் மொத்தமாக 168 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதோடு நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகள் வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க | நவராத்திரிக்கு பம்பர் ஆப்பர்... 50 GB டேட்டாவை வாரி வழங்கும் வோடபோன்!
ஜியோ ப்ரீமியம் சப்ஸ்கிரிப்சன்
தினசரி டேட்டா 2 ஜிபியை முழுவதும் பயன்படுத்திவிட்டாலும், அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது. இதில் ஜியோ சினிமாவில் ப்ரீமியம் சலுகைகள் கொடுக்கப்படாது. இந்த சலுகைகள் போக உங்களுக்கு நெட்பிளிக்ஸ் மொபைல் (Netflix Mobile) சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. அதோடு ஜியோ 5ஜி சேவை கிடைக்கும் நகரங்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.
ஜியோவின் 1499 ப்ரீப்பெய்ட் பிளான்
இந்த திட்டத்திலும் டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சலுகைகள் கொடுக்கப்படுகிறது. அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் கிடைக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு நாளொன்றுக்கு 3 ஜிபி வீதம் மொத்தமாக 252 ஜிபி டேட்டா வழங்கப்படும். இந்த டேட்டாவை முழுவதும் பயன்படுத்திய பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம். அதேபோல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி கால்களை செய்து கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையும் கொடுக்கப்படுகிறது. மேலும் ஜியோ டிவி, ஜியோசினிமா, ஜியோ கிளவுட் மற்றும் நெட்பிளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் நெட்பிளிக்ஸ் பேஸிக் (Netflix Basic) சலுகைகளை பெற்றுக்கொள்ள முடியும். அதோடு ஜியோ 5ஜி ஏரியாக்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்தலாம். ஜியோவில் நெட்பிளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷன் வேண்டுமானால், இந்த 2 திட்டங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்த திட்டங்களின் மாதாந்திர கட்டணத்தை பார்த்தால், ரூ.1499 திட்டத்துக்கு ரூ.535 செலவும், ரூ.1099 திட்டத்துக்கு 392 ரூபாயும் செலவாகும்.
மேலும் படிக்க | பல்சர் காதலர்களே ரெடியா... விரைவில் NS400 - விலை, ரிலீஸ் தேதி, சிறப்பம்சங்கள் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ