புதுடெல்லி: இந்திய அரசுக்கு எதிராக வாட்ஸ்அப் தொடர்ந்த வழக்குக்கு வலுவான பதிலளித்த மத்திய அரசு, தனது குடிமக்களின் தனியுரிமைக்கான உரிமையை உறுதி செய்வதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் எந்த "அடிப்படை உரிமையும் முழுமையானது" என்றும் அரசு தெரிவித்துள்ளது. தனியுரிமைக்கான உரிமை "நியாயமான கட்டுப்பாடுகளுக்கு" உட்பட்டது என்றும் அரசாங்கம் குறிப்பிட்டது.
புதன்கிழமை (மே 26) நடைமுறைக்கு வரும் புதிதாக வடிவமைக்கப்பட்ட விதிமுறைகளைத் தடுக்க கோரி இந்திய அரசுக்கு (Indian Government) எதிராக வாட்ஸ்அப் சட்டப் புகாரை அளித்துள்ளது. ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, இந்த விதிகள் கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட பேஸ்புக் பிரிவை தனியுரிமை பாதுகாப்பு அம்சங்களை மாற்ற கட்டாயப்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
தனியுரிமை பற்றிய கவலைகளைச் சுற்றியுள்ள சந்தேகங்களை தெளிவு செய்த மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தனது குடிமக்கள் அனைவருக்கும் தனியுரிமைக்கான உரிமையை உறுதி செய்வதில் இந்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்றார். ஆனால் அதே நேரத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
ALSO READ: New IT rules தனியுரிமைக்கு முடிவு கட்டும் என WhatsApp நீதிமன்றத்தில் வழக்கு
வாட்ஸ்அப்பை (WhatsApp) சாடிய இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், "ஒரு தனியுரிமைக் கொள்கையை கட்டாயப்படுத்த வாட்ஸ்அப் முயல்கிறது. இதன் மூலம், பயனர்களின் அனைத்து தரவுகளையும் வாட்ஸ்அப் அதன் தாய் நிறுவனமான பேஸ்புக்கோடு பகிர முயல்கிறது. சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர நோக்கங்களுக்காக இதைச் செய்ய இந்த நிறுவனம் எண்ணம் கொண்டுள்ளது" என்பதை தெளிவுபடுத்தியது.
"இந்தியாவில் (India) நடத்தப்படும் எந்தவொரு நடவடிக்கைகளும் இந்திய நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டவையாகும்". இந்திய அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க வாட்ஸ்அப் மறுப்பது "அரசாங்க நடவடிக்கையை எதிர்ப்பதற்கான ஒரு தெளிவான செயலாகும். இதனால் இந்த நிறுவனத்தின் நோக்கம் மீது நிச்சயமாக சந்தேகம் எழுகிறது" என்று இந்தியா கூறுகிறது.
முன்னதாக 3 மாதங்களுக்கு முன்னர், இந்தியாவில் சமூக ஊடக தளங்களுக்கான புதிய மற்றும் கடுமையான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டது. பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகியவற்றில் சுமார் 113.5 மில்லியன் பயனர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: SOCIAL MEDIA: இன்ஸ்ட்ராகிராம், பேஸ்புக், டிவிட்டர் நாளை முடக்கப்படுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR