தென் தமிழகத்தில் 23 வருடங்களுக்கு பிறகு முழு சூரிய கிரகணம் தெரியவுள்ளது. இது ஒரு நெருப்பு வளையம் போன்று தோன்றும்,
வரும் 26 ஆம் தேதி நிகழவிருக்கும் நெருப்பு வளைய சூரிய கிரகணமானது கேரளாவில் தொடங்கி தென் தமிழக பகுதிகளான கோவை, பொள்ளாச்சி, திருப்பூா், திண்டுக்கல் வழியாக புதுக்கோட்டை மாவட்டம் பனங்குடி வழியாக நிறைவு பெறுகிறது.
இந்த சூரியகிரகணமானது காலை 8.3 மணி முதல் 9.33 மணி வரை 97.3 சதவீதம் முழுமையாக சூரியனை மறைக்கிறது. இதை மக்கள் வெறும் கண்ணால் பாா்க்க கூடாது. இதற்காக கொடைக்கானலிலுள்ள இந்திய வான் இயற்பியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு முன்னால் இந்த சூரிய கிரகணமானது கடந்த 1996-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் நிம்கா தானா என்ற இடத்தில் தெரிந்தது. தற்போது 23-ஆண்டுகளுக்கு பிறகு தெரிய உள்ளது. இந்த அபூா்வ நிகழ்வானது அடுத்த 50-ஆண்டுகளுக்கு மேல்தான் தெரியும் என வானியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.