50 மில்லியன் facebook கணக்குகளின் தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டிருக்கலாம் என facebook நிறுவனம் தெரிவித்துள்ளது!
உலக அளவில் 223 கோடி பயனர்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைப்பக்கமான facebook, தங்களது பயனர் கணக்குகளிலின் தகவல்கள் திருடப்பட்டு இருப்பத்தினை ஒப்புக்கொண்டு facebook பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. facebook-ல் பயனர்கள் பதிந்து வகைப்படப்படம் பதிவுகள் சமூகத்தில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. சமூக வலைத்தளங்களில் மிக முக்கியமானதாக கருதப்படும் facebook நிறுவனம், அதைப் பயன்படுத்துபவர்களின் கணக்குகள் செயல்படும் முறையில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக அறிந்துள்ளது.
இந்த பாதுகாப்பு குறைபாட்டினால் சுமார் 50 மில்லியன் பயனர்களின் கணக்குகளின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும், 5 கோடி பேர் கணக்குகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
facebook நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதியில் இருந்து, facebook பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. இதனை facebook நிறுவன பொறியாளர்கள் ஆராய்ந்தபோது facebook பயனாளர்கள் தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளதாக facebook நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பில் இவர் குறிப்பிட்டுள்ளது படி பாதிக்கப்பட்டவர்களின் கணக்குகள் தானாக தங்களது செயலிகளில் இருந்து லாக்வுட் (logout) ஆகியிருக்கும், மேலும் பயனர்களை மீண்டும் லாக்இன்(login) செய்ய வேண்டும் என்றும் கோரும் என தெரிவித்துள்ளார்.
உலக அளவில் 223 கோடிபேர் facebook-னை பயன்படுத்துகின்றனர், எனினும் இந்தியாவில் தான் அதிகமான பயனர்கள் (24.1 கோடி) facebook-னை பயன்படுத்துகின்றனர். தங்கள் கணக்கு பாதுகாப்பானது இல்லை என தெரிந்தும் பயன்படுத்துவது தவறில்லை, தொடர்ந்து தங்களது தகவல்களை இந்த கணக்கில் இணைத்து வைத்திருப்பது தான் தவறு...