Buying New AC Tips: புதிய ஏசி வாங்குகிறீர்களா? நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

New AC Buying Tips: கோடைக்காலம் வந்துவிட்டது. இனி ஒவ்வொரு நாளும் வெப்பம் நம்மை ஆட்டிபடைக்கும். குளிர்ந்த ஏசி காற்றில் சற்று ஓய்வெடுக்க வேண்டும் என்றால், ஏசி கட்டாயம் அவசியம். ஒரு புதிய ஏசியை வாங்க வேண்டும் தெரிந்துக்கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 21, 2023, 08:36 PM IST
  • புதிய ஏசி வாங்குவது சற்று சவாலானதாக இருக்கும்.
  • நீங்கள் ஒரு ஏசியை வாங்குவதற்கு முன் பல விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
  • புதிய ஏசி வாங்கும் முன் மனதில் கொள்ள வேண்டிய பத்து விவரங்கள்
Buying New AC Tips: புதிய ஏசி வாங்குகிறீர்களா? நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்! title=

Buying New AC Things: கோடை காலம் நெருங்கி வருவதால் ஏசிகளின் தேவையும் அதிகரித்து வருகிறது. கோடைகாலத்தை நோக்கி செல்கிறோம். நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது. இன்னும் சில நாட்களில் வேலை முடிந்து வீட்டிற்குள் நுழைந்த உடன் குளிர்ந்த ஏசி காற்றில் ஓய்வெடுக்க வேண்டிய அவசியம் ஏற்படும். அதற்கு ஏர் கண்டிஷனர் முக்கியம். நீங்கள் ஒரு புதிய ஏர் கண்டிஷனரை வாங்கத் திட்டமிட்டிருந்தால், அதற்கான நேரம் வந்துவிட்டது. தற்போது ஒரு புதிய ஏசி வாங்குவது எளிதானது. ஏனெனில் ஆன்லைன், ஆப்லைன் மூலம் ஏசியை தேர்வு செய்வதற்கு பல விருப்பங்கள் உள்ளன. அதேநேரத்தில் நீங்கள் வாங்கும் ஏசி வகையிலும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சில வகைகள் சிறிய அறைகளில் மட்டுமே நன்றாக வேலை செய்யும், பெரிய அறைகளுக்கு வேறு ஒரு ஏசி தேவைப்படலாம். மேலும் ஸ்டார் ரேட்டிங், கம்ப்ரஸர், வாரண்டி போன்ற முக்கியமான விஷயங்களை பற்றிய அறிந்துக்கொள்வது அவசியம். நீங்கள் புதிய ஏசியை வாங்குவதற்கு முன் நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் பார்ப்போம்.

உங்கள் பட்ஜெட்டை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்
உங்கள் ஏசிக்கான பட்ஜெட்டை நீங்கள் தீர்மானிக்க வேண்டிய முதல் விஷயம். உங்களிடம் இருக்கும் பட்ஜெட்டுக்கு ஏற்ப உங்கள் வரம்பிற்குள் ஏசியை மட்டுமே நீங்கள் தேர்வு செய்ய வேண்டும் என்பதால், எந்த ஏசியை வாங்குவது என்பது எளிதாகிவிடும்.

பணம் செலுத்தும் விருப்பங்கள் குறித்து தெளிவு
நீங்கள் ஏசியை வாங்குவதற்கு நேரடியாக பணம் அல்லது டெபிட் கார்டு மூலமாகவும் வாங்கலாம். அதேபோல கிரெடிட் கார்டுகள் மற்றும் UPI போன்ற பிற விருப்பங்களும் உள்ளன. பல டீலர்கள் நீங்கள் கட்டணமில்லா மாத தவணையில் (EMI) ஏசி வாங்க அனுமதிப்பார்கள். நீங்கள் 6 மாதங்கள் அல்லது ஒரு வருடம் வரை தவணை முறையில் பணம் செலுத்தலாம். எனவே, நீங்கள் ஒரு பெரிய தொகையை ஒரே நேரத்தில் செலவழிக்க விரும்பவில்லை என்றால், மற்ற கட்டண விருப்பங்களையும் பார்க்கவும்.

மேலும் படிக்க: மொபைல் சீக்கிரமே சூடாகுதா? தடுக்க சில வழிகள்!

ஆன்லைன் விலை எவ்வளவு?
நீங்கள் ஆஃப்லைனில் உங்கள் ஏசியை வாங்கச் செல்லும் போதெல்லாம், கடை விற்பனையாளர் உங்களுக்கு ஒரு மாடலைப் பரிந்துரைக்கும்போது, அதன் விலையை ஆன்லைனில் சரிபார்க்க மறக்காதீர்கள். அதே ஏசி ஆன்லைனில் குறைந்த விலையில் கிடைத்தால், நீங்கள் அதை விற்பனையாளரிடம் தெரிவிக்கலாம். அவர்கள் உங்களுக்கு சமமான அல்லது சிறந்த விலையில் வழங்கலாம்.

அறையின் அளவை அறிந்து கொள்ளுங்கள்
ஒரு பெரிய ஹாலில் 1 டன் ஏசி மிகவும் பயனுள்ளதாக இருக்காது மற்றும் ஒரு சிறிய அறையில் 2 டன் ஏசியின் குளிர்ச்சி கையாள முடியாத அளவுக்கு இருக்கும். நீங்கள் வாங்கும் போது உங்கள் அறையின் அளவை மனதில் கொள்ளுங்கள். பொதுவாக, 100 அல்லது 120 சதுர அடி அறைக்கு 1 டன் ஏசி போதுமானது. உங்களிடம் பெரிய அறை இருந்தால், 1.5 அல்லது 2 டன் அலகுக்கு செல்லுங்கள்.

மேலும் படிக்க: 1699 ரூபாய்க்கு ஏசியா? கரண்ட் செலவும் இல்ல... சம்மரை சூப்பரா கொண்டாடலாம்

வீட்டின் தளம் முக்கியமானது
நீங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறீர்கள் என்றால், ஏசி வாங்கும் போது உங்கள் வீட்டின் தளமும் முக்கியமானது. உதாரணமாக, கட்டிடத்தின் மேற்கூரைக்கு அடியில் இருப்பதால், மேல் தளம் அதிக வெப்பமாக இருக்கும். எனவே, நீங்கள் மேல் மாடியில் வசிக்கிறீர்கள் என்றால், பயனுள்ள மற்றும் தடையற்ற குளிர்ச்சியை நீங்கள் விரும்பினால், வழக்கத்தை விட பெரிய மற்றும் அதிக சக்தி வாய்ந்த ஏசி உங்களுக்குத் தேவைப்படும்.

ஸ்பிலிட் ஏசி அல்லது விண்டோ ஏசி
ஸ்பிலிட் ஏசி அல்லது விண்டோ ஏசியின் குளிரூட்டலுக்கு இடையே அதிக வித்தியாசம் இருக்காது. இருப்பினும், ஸ்பிலிட் ஏசிகளுடன் ஒப்பிடும் போது விண்டோ ஏசிகள் சற்று மலிவானதாக இருக்கும். மறுபுறம், ஸ்பிலிட் ஏசிகளை எங்கு வேண்டுமானாலும் பொருத்தலாம். அதேசமயம் விண்டோ ஏசியை பொருத்துவதற்கு உங்களுக்கு சரியான அளவிலான சன்னல் அல்லது இடம் தேவை. விண்டோ ஏசிகள் அதிக ஆற்றலைச் சேமிக்கும். அதே வேளையில், ஸ்பிளிட் ஏசிகள் அதிக அளவு குளிர்ந்த காற்றை வெளியேற்றுவதால் சத்தம் ஏற்படாது மற்றும் சீக்கரமாக ரூம்மை குளிர்ச்சியடைய செய்யும். உங்கள் அறையின் திறன் மற்றும் பட்ஜெட்டின் படி, இரண்டில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.

மேலும் படிக்க: Beat the Heat: கோடை வெயிலை கூலாக்கி சூரியனுக்கே சேலஞ்ச் விடும் T-Shirt AC

கம்ப்ரஸர் பற்றி கேளுங்கள்
இதைப்பற்றி யாருமே அதிகமாக தெரிந்துக்கொள்வதில்லை. ஏசியில் பயன்படுத்தப்படும் கம்ப்ரஸர் வகை பற்றி விசாரிக்கவும். ஏசி வாங்கும் போது கம்ப்ரஸர் இருப்பதை உறுதி செய்யவும். காப்பர் சுருள் பராமரிப்பதற்கும், பழுதுபார்ப்பதற்கும் எளிதானது, வேகமாக குளிர்ச்சியடையும். மற்ற கம்ப்ரஸரை விட காப்பர் கம்ப்ரஸர்  நீண்ட ஆயுளைக் கொண்டுள்ளது.

ஸ்டார் ரேட்டிங் முக்கியம்
குறைந்த மின் சேமிப்பு மதிப்பீடுகளைக் கொண்ட ஏசிகள் மற்ற விருப்பங்களை விட மலிவானதாக இருந்தாலும், அதிக மின்சாரக் கட்டணங்கள் காரணமாக நீண்ட காலத்திற்கு அவை உங்களுக்கு அதிகச் செலவை ஏற்படுத்தும். மறுபுறம், அதிக ஆற்றல் சேமிப்பு மதிப்பீட்டைக் கொண்ட ஏசிகள் அதிக விலை இருக்கும். ஆனால் அவை மிகக் குறைந்த மின்சாரத்தை உட்கொள்வதால் உங்கள் மின்கட்டண பணத்தை மிச்சப்படுத்துகின்றன. எனவே, ஆற்றல் சேமிப்பு புள்ளியில் மிகவும் கவனமாக இருங்கள் மற்றும் யூனிட்டில் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன என்பதைக் கவனிக்க மறக்காதீர்கள். 

மேலும் படிக்க: இரவு நேர ரயிலில் பயணம் செய்கிறீர்களா... இந்த செய்தி உங்களுக்குத்தான்!

வாரண்டி காலம் அவசியம்
உங்கள் ஏசியில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு, ஒவ்வொரு மாதமும் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். நீங்கள் வாங்கும் பிராண்டின் வாரண்டி குறித்து அறிந்துக்கொள்ளுங்கள். நீங்கள் வாங்கும் ஏசிக்கான வாரண்டி, கம்ப்ரஸருக்கான வாரண்டி எத்தனை ஆண்டுகள் என்பதை தெரிந்துகொள்ளவும். ஏசி வாங்குவதற்கு முன், வாரண்டிப் பற்றி உங்கள் டீலரிடம் கேளுங்கள்.

இன்வெர்ட்டர் டெக்னாலஜி
நீங்கள் புதிய ஏசி வாங்கும் போது இன்வெர்ட்டர் டெக்னாலஜி குறித்தும் கேளுங்கள். உங்கள் ஏசியில் இந்த டெக்னாலஜி இருந்தால், அதிக மின்சாரம் செலவாகாது. மின்கட்டணத்தை சேமிக்கலாம். ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஏசி செயல்பட இன்வெர்ட்டர் டெக்னாலஜி முக்கியமானது. 

மேலும் படிக்க: கோடையில் இன்சுலினாக செயல்பட்டு சர்க்கரையை கட்டுப்படுத்தும் ‘சூப்பர்’ பானங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News