’கால் காசு சம்பளம் என்றாலும் அது சர்க்கார் சம்பளம்’என்பார்கள். காலப்போக்கில் அதன் நிலைமை மாறிக்கொண்டே போக, படிப்புக்கேற்ற வேலையைவிடக் கிடைத்த வேலையை செய்யும் மனநிலைக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் காலியாக உள்ள 48 கால்நடை உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. பத்தாம் வகுப்புத் தகுதியான இந்த வேலைக்கு குமரி மாவட்டத்தில் 5906 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான நேர்முகத் தேர்வு இன்று தொடங்கியது. இதில் பள்ளிப்படிப்பு மட்டுமே படித்தவர்களுக்கு இணையாக பட்டதாரிகள் பலரும் கலந்துகொண்டது ஆச்சரியத்தையும், வேலையின்மையின் மீதான கள யதார்த்தத்தையும் உணரவைத்துள்ளது. காலியாக உள்ள 48 பணியிடங்களுக்கு நேற்றுமுதல் பத்துநாள்கள் நேர்முகத்தேர்வு நடக்கிறது.
இதில் விண்ணபித்துள்ள 5906 பேருக்கும் சரியாக சைக்கிள் ஓட்டத் தெரிகிறதா? மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளைச் சரியாகக் கையாளத் தெரிகிறதா? என்பது உள்ளிட்ட சோதனைகள் நடத்தப்பட்டது. விண்ணப்பதாரர்களின் திறனை அதிகாரிகள் மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்கப்பட்டது. இரண்டாவது நாளான இன்று மாலை 5.30 வரை நடக்கும் இந்த நேர்முகத் தேர்வுக்கு 750 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. வரும் 30-ம் தேதிவரை இந்த நேர்முகத் தேர்வு நடக்கிறது.
மேலும் படிக்க | கர்நாடகாவை தொடர்ந்து தமிழக பள்ளியில் ஹிஜாப் தடை
நாள் ஒன்றுக்கு சராசரியாக 600 முதல் 750 பேர்வரை கலந்துகொள்கிறார்கள். 29-ம் தேதி வரை நடக்கும் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள இயலாதவர்களுக்கு வரும் 30-ம் தேதி, மதியம் ஒருமணிவரை மட்டும் கலந்து கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதில் பெண்களும் அதிகளவில் நேர்முகத்தேர்வில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பெண்ணிடம் சில்மிஷம் - போலீஸ் காலில் விழுந்து தப்பிக்க முயன்ற இளைஞர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR