பிளஸ்-2 மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு: என்னென்ன கட்டுப்பாடுகள்

தமிழகம் முழுவதும் இன்று 8.37 லட்சம் மாணவர்கள் எழுதும் பிளஸ் 2 தேர்வு தொடங்க உள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 5, 2022, 06:52 AM IST
  • 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று முதல் தொடக்கம்.
  • வரும் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
  • பிளஸ்-2 பொதுத்தேர்வு 3,119 மையங்களில் நடக்கிறது.
பிளஸ்-2 மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு: என்னென்ன கட்டுப்பாடுகள் title=

கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு முழுமையாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் மாதாந்திர தேர்வு, காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு உள்ளிட்டவையின் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்பட்டது. அதேபோல் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டனர். மறுபுறம் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்த முடியாத காரணத்தால், ‘ஆன்லைன்’ வகுப்புகள் வழியாகவே பாடங்கள் நடத்தப்பட்டன.

இதற்கிடையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் படிப்படியாக தொடங்கப்பட்டது. அதன்படி முதலில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கும், அதன் பின்னர் 6 முதல் பிளஸ்-1 வகுப்பு வரையிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டது. பிறகு 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலும் தொடர்ந்து மழலையர் வகுப்புகளும் தொடங்கப்பட்டன.

மேலும் படிக்க | தேர்வு நேரத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மின்சார வாரியம்

இந்நிலையில் தமிழகத்தில் பிளஸ்-2 எனப்படும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று முதல் தொடங்குகிறது. இந்த தேர்வு வரும் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டு வெற்றிகரமாக பொதுத் தேர்வை நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. 

+2 Exam, +1 Exam, 10th Exam,Public exam,Schools

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு 3,119 மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வினை 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 பேர் எழுதுகிறார்கள். இதில், மாணவர்கள் 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 பேரும், மாணவிகள் 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 பேரும் அடங்குவார்கள். அதேபோல், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை மறுநாள் (6-ந் தேதி) தொடங்கி 30-ந்தேதி வரை நடக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மொத்தம் 3,936 மையங்களில் நடக்கிறது. இந்தத் தேர்வை, 9 லட்சத்து 55 ஆயிரத்து 474 பேர் எழுதுகிறார்கள். இதில், மாணவர்கள் 4 லட்சத்து 86 ஆயிரத்து 887 பேர், மாணவிகள் 4 லட்சத்து 68 ஆயிரத்து 587 பேர் ஆவார்கள். இந்த தேர்வை 8,37,311 மாணவர்கள் எழுத உள்ளனர். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், நேற்றிரவு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், பிளஸ்-2 தேர்வு மையங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதன்படி.,

* மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
* தேர்வு மையங்களில் ஒவ்வொரு மாணவருக்கும் இடையே ஆறடி இடைவெளி இருக்க வேண்டியது கட்டாயம்.
* கிருமிநாசினி கொண்டு தேர்வறைகளை சுத்தம் செய்தல் அவசியம்.
* மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளுதல் கட்டாயம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக மாணவர்கள் தேர்வுக்கு 8 மணிக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலை 9 மணிக்குத் தேர்வு மையங்களுக்கு வந்தால் போதும் என்று தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது. அதேபோல் காலை 9.45 மணிக்கு முதல் ஒரு முறை மணி அடிக்கப்படும். அப்போது தேர்வர்கள் தேர்வறைக்கு வருகை தர வேண்டும். இரண்டாவது மணி 9.55 மணிக்கு அடிக்கப்படும். அப்போது அறைக்கண்காணிப்பாளர் வினாத்தாள் உறைகளை மாணவர்களிடம் காண்பித்து, இரு மாணவர்களிடம் கையெழுத்து பெற்று, உறைகள் பிரிக்கப்படும். காலை 10 மணிக்கு மூன்றாவது மணி அடிக்கப்படும். அப்போது மாணவர்களுக்குத் தேர்வுத் தாள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படுக்க | வசூல் ராஜா MBBS பட பாணியில் 10 வகுப்பு மாணவனின் ஹை டெக் காப்பி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News