மிரட்டும் மழை பாதிப்புகள்... மீளாத மாவட்டங்கள்... நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

School Colleges Leave Updates: கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகளை கருத்தில்கொண்டு, பல்வேறு மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச. 03) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Dec 2, 2024, 09:52 PM IST
  • நாளை பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு
  • விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் கடுமையான பாதிப்பு
  • பள்ளி, கல்லூரிகள் நிவாரண முகாம்களாக செயல்படுகிறது.
மிரட்டும் மழை பாதிப்புகள்... மீளாத மாவட்டங்கள்... நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! title=

Tamil Nadu School Colleges Leave Latest News Updates: வட தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் நிலவிய பெஞ்சல் புயல், நேற்று புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், இன்று காலை ஆழ்ந்த் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் மேலும் வலுக்குறைந்து வட தமிழகத்தின் உள் பகுதிகளில் நிலவுகிறதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதுமட்டுமின்றி, இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காலை தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால், தமிழகத்தில்  அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் 

குறிப்பாக, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்த மழைக் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மட்டுமின்றி தமிழ்நாட்டின் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | கனமழையால் ஏற்பட்ட பேரழிவு.. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5000 ரூபாய் -முதல்வர் அதிரடி

தேசிய நெடுஞ்சாலை முழுவதுமாக துண்டிப்பு

சென்னை - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சாலையை பயன்படுத்தி திருச்சி செல்பவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னையில் இருந்து திருச்சி செல்வோர் சென்னை - விழுப்புரம் - கோலியனூர், பண்ருட்டி - மடப்பட்டு வழியாக தேசிய நெடுஞ்சாலையை அடையலாம். தொடர்ந்து, திருச்சியில் இருந்து சென்னை செல்ல விரும்புவோர் மடப்பட்டு - பண்ருட்டி - கோலியனூர் - விழுப்புரம் - வழியாக சென்று சென்னைக்கு செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

இந்நிலையில், மழை வெள்ள பாதிப்பால் பல்வேறு மாவட்டங்கள் இன்னும் முழுமையாக சீரடையாத நிலையில், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு நாளை (டிச. 3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள் நிவாரண முகாம்களாகவும் செயல்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இதை தொடர்ந்து, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மின்கட்டணம் செலுத்த கால அவகாசம்

பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளை கருத்தில் கொண்டு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அபராதம் ஏதும் இன்றி டிச.10ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம் என கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | வெள்ளத்தில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய மினி பேருந்து, வேன்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News