புதுக்கோட்டையில் மதுபான ஆலை:
புதுக்கோட்டை உட்பட ஏழு மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் சுமார் ரூ.14000 கோடி செலவில் காவேரி வைகை குண்டாறு திட்டம் செயல்படுத்தப்பட, திட்டம் வகுக்கப்பட்டு தற்பொழுது முதல் கட்டமாக கரூர் மாவட்டம் மாயனூரில் இருந்து கிளை கால்வாய்கள் மூலமாக திருச்சி, புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லை பகுதியான கலிமங்கலம் நாகமங்கலம், குன்னத்தூர், துரைக்குடி, நஸ்ரத் வழியாக இந்த கால்வாய்கள் வெட்டப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சிக்கு உட்பட்ட குன்னத்தூர் ஊராட்சியில் கலிமங்கலம் என்ற கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் 13 ஆண்டுகளாக கால்ஸ் சாராய ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் தற்போது பீர் மட்டும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் சில மாதங்களில் பிராந்தி, விஸ்கி போன்ற மதுபானங்களும் தயாரிக்கப்பட உள்ளது.
ஆலையிலிருந்து வெளியேறும் கழீவு நீர்..!
ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் ஊரில் உள்ள குளம் மற்றும் கண்மாயிகள் பாழடைந்து வருகிறது. இது மட்டுமின்றி நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக சாராய ஆலைக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலப்பரப்பில் ஆலை கழிவு தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவேரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்தில் கோரை ஆற்றை இணைக்க வேண்டும் என்றும் இந்த ஆறு மூலம் குளம், கண்மாய்களை தண்ணீர் நிரப்பிக்கொள்ள முடியும் எனக்கூறி அதிகாரிகள் நிலமெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்து கேட்பு கூட்டம்..
இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைசாமி தலைமையில் விராலிமலையில் பொதுமக்களிடமிருந்து கருத்து கேட்பு கூட்டம் நடைப்பெற்றது. இதில், கோரை ஆறு மூலமாக கண்மாய், குளங்களுக்கு காவிரி வைகை குண்டாறு திட்டத்தில் தண்ணீர் நிறப்புவதற்கான திட்டமிடல் இல்லை என்பது தெரியவந்தது. இது மட்டுமின்றி கோரை ஆற்றில் வரும் மழை நீரை காவிரி வைகை குண்டாறு கால்வாயில் இணைக்க திட்டமிட்டது வெளிச்சத்திற்கு வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், கோரை ஆற்றை அதிகாரிகள் திட்டமிட்டபடி இணைக்க வேண்டும் என்றால் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றி இணைக்க வேண்டி உள்ளது என்பதை எடுத்துக் கூறியதோடு, கோரை ஆறு செல்லும் வழியிலேயே காவிரி வைகை குண்டாறு திட்டத்தில் இணைக்க வெறும் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் இணைத்து விடலாம் எனவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை கூறியுள்ளனர்.
மேலும் படிக்க | காவேரி கூக்குரல் இயக்கத்தின் இந்த வருடத்திற்கான இலக்கு 1.1 கோடி மரங்கள்!!
இதனை ஏற்க மறுத்த அதிகாரிகள் ஏற்கனவே திட்டமிட்ட வழித்தடத்தில் மட்டுமே கோரை ஆற்றை இணைக்க போவதாக கூறி நிலமெடுக்கும் பணியில் ஈடுபட்டு, கல் புதைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்க கூட்டத்தில் கலியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சாராயம் இருந்து வெளியேறும் கழிவுநீர் பாட்டிலுடன் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் முறையிட்டனர்.
பொதுமக்கள் தர்ணா..
ஆட்சியரிடர் அலுவலகத்தில் முறையிட்டதற்கு பிறகு, பொது மக்கள் தரையில் அமர்ந்தும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோளுக்கு இணங்க அவரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ