தமிழகத்தில் அனேக இடங்கங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
இதைக்குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:- கன்னியகுமரி பகுதியில் நிலை கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடிப்பதால். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அனேக இடங்களிலிலும் மழை பெய்யும ஒரு சில இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கும்.
அடுத்த 2 நாளுக்கு மழை நீடிக்கும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை வாய்ப்பு உள்ளது. என அவர் கூறினார்.