டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் முறைகேடு - மதுரை நீதிமன்றம் முக்கிய உத்தரவு

TNPSC | டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் போலிச் சான்றிதழ்கள் கொடுத்து பணி நியமன ஆணை பெற்றது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 24, 2024, 02:57 PM IST
  • டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் முறைகேடு
  • மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு
  • முக்கிய உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் முறைகேடு - மதுரை நீதிமன்றம் முக்கிய உத்தரவு title=

TNPSC Latest News Tamil | குரூப் 1 தேர்வில் தமிழ் வழியில் படித்ததாக போலிச் சான்றிதழ் வழங்கியது தொடர்பாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) நடத்தி வரும் விசாரணைக்கு, நான்கு பல்கலைக்கழகங்கள் ஒத்துழைக்காததற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகிய 4 பல்கலைக்கழங்களிலும் சோதனை நடத்தவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் நான்கு பல்கலைக்கழகங்களுக்கும் தலா ஒரு அதிகாரியை நியமித்து ஆவணங்களை பெறவும், அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெறும் விசாரணையின்போது வழக்கு குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறது.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கு விவரம்

 2021 ஆம் ஆண்டு மதுரையைச் சேர்ந்த ஜி சக்தி ராவ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 2019 ஆம் ஆண்டு நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில், தமிழ் வழியில் படித்ததாக போலி சான்றிதழ்கள் சமர்பிக்கப்பட்டு பணி நியமனம் சிலர் பெற்றிருப்பதாக தெரிவித்தார். தமிழ் வழியில் முழுக் கல்வியையும் படித்தவர்கள் மட்டுமே பிஎஸ்டிஎம் இடஒதுக்கீடு பெற வேண்டும் என்று நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை டிஎன்பிஎஸ்சி கடைப்பிடிக்கவில்லை என்றும் அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிமன்றம், ஆங்கில வழியில் படித்து பின்னர் PSTM இடஒதுக்கீட்டைப் பெறுவதற்காக தொலைதூரக் கல்வி மூலம் தமிழ் வழியில் பட்டம் பெற்றது உறுதியாகியுள்ளது. 

மேலும் படிக்க | மாநாடு நடைபெற உள்ள நிலையில் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்த போலி சான்றிதழ் மோசடியை டி.வி.ஏ.சி விசாரித்து வருவதால், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் பிற பல்கலைக் கழகங்களால் வழங்கப்பட்ட பி.எஸ்.டி.எம் சான்றிதழ்கள் உட்பட போலி சான்றிதழ்கள் தொடர்பான பிரச்னையை விசாரிக்க டி.எஸ்.பி அளவிலான அதிகாரி தலைமையில் சிறப்புக் குழுவை அமைக்குமாறு டி.வி.ஏ.சி இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளது. 

மேலும், போலி சான்றிதழ் விசாரணைக்கு ஒத்துழைக்காத நான்கு பல்கலைக்கழங்களின் பதிவாளர்களையும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எதிர்மனுதார ராக சேர்த்துள்ளது. தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையை பொறுத்தவரையில் மேலும் 22 பேர் இதுபோன்ற போலி சான்றிதழ்களை சமர்பித்திருப்பதாக சந்தேகித்துள்ளது. வரும் அக்டோபர் 28 ஆம் தேதி இந்த வழக்கு குறித்து விசாரிக்க உள்ளது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. அப்போது, வழக்கின் லேட்டஸ்ட் நிலவரம் குறித்த அறிக்கையை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்யும். 

மேலும் படிக்க | Ration Card | தவறவிடாதீர்கள் மக்களே! தமிழக அரசின் ரேஷன் கார்டு இலவச முகாம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News