HMPV வைரஸ்: அச்சப்பட வேண்டாம், சிகிச்சையும் வேண்டாம் - மா.சுப்பிரமணியன் சொல்வது என்ன?

HMPV Virus In Tamil Nadu: தமிழ்நாட்டில் ஏற்பட்ட HMPV வைரஸ் பாதிப்பு குறித்தும், இந்த வைரஸ் குறித்தும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Jan 7, 2025, 04:06 PM IST
  • 2001ஆம் ஆண்டில் HMPV வைரஸ் உருவானது - மா. சுப்பிரமணியன்
  • சேலத்தில் மற்றும் சென்னையில் இருவருக்கு இந்த பாதிப்பு - மா.சுப்பிரமணியன்
  • எந்த சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தாலே போதும் - மா.சுப்பிரமணியன்
HMPV வைரஸ்: அச்சப்பட வேண்டாம், சிகிச்சையும் வேண்டாம் - மா.சுப்பிரமணியன் சொல்வது என்ன? title=

HMPV Virus In Tamil Nadu Latest News Updates: HMPV வைரஸ் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"இந்த வைரஸ் பரவியது முதல் தமிழகத்தின் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மத்திய மருத்துவத்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார்கள்.

பல்வேறு மாநிலங்களில் இருந்து வரக்கூடியவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். விமான நிலையங்களில் இதுபோன்ற கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு அவசர காலம் ஏதேனும் இருந்தால் அவர்களே அறிவிப்பார்கள்.

15 ஆண்டுகளாக இருக்கும் HMPV வைரஸ்

ஏதேனும் அவசர காலம் இருந்தால் உலக சுகாதார அமைப்பு சார்பில் அறிவிப்பு வெளியிடுவார்கள். அதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்படும். 15 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த வைரஸ்  தோன்றியது. அதாவது 2001ஆம் ஆண்டில் இந்த வைரஸ் உருவானது.  

இந்த பாதிப்பு இருந்தால் இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு இருமல், சளி பாதிப்பு இருக்கும். உடல் நலக்குறைவு இருப்பவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும். முகக்கவசம் அணிவது, இடைவெளி பின்பற்றுவது தொடர்ந்து இருந்து வருகிறது. கொரோனா தொற்றுக்குப் பிறகு பல்வேறு வைரஸ் தோன்றியது. இந்த வைரஸ் பொருத்தவரை இரண்டு நாட்களுக்குப் பிறகு அதுவே நீங்கிவிடும். இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் பெருமளவு சிகிச்சை மேற்கொள்ள தேவையில்லை. வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் தனிமைப்படுத்துவது சிகிச்சைதான். சேலத்தில் மற்றும் சென்னையில் இருவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | இந்தியாவில் HMPV வைரஸ்: எந்த பாகம் முதலில் பாதிக்கப்படும்? பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன?

தமிழகத்தில் HMPV வைரஸ்

சேலத்தில் 65 வயதுமிக்க ஒரு நபருக்கு HMPV வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு பல்வேறு உடல் நலக் குறைவு காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 45 வயது நபருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கும் இதுபோன்ற உடல்நலக் குறைவு உள்ளது. தமிழகத்தில் இந்த பாதிப்பு பொறுத்தவரை அதிகமான பதற்றம் ஏற்பட்டுள்ளது. உடல் நலக்குறைவு என்று சோதனை செய்து கொண்டால் ஒரு சில நபர்களுக்கு இந்த வைரஸ் இருக்கும். இந்த வைரஸ் குறித்து பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை. உடல்நலக் குறைவு இருப்பவர்கள் பொதுவெளியில் செல்லும் பொழுது முக கவசம் அணிய வேண்டும்.

HMPV Virus: பரவலை தடுப்பதற்கு என்ன வழி?

பொதுவாக தற்போதைய காலகட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் முகக் கவசம் அணிந்துதான் செல்கிறார்கள். சீனாவில் எப்பொழுதுமே மக்கள் முக கவசம் அணிவார்கள். நோய் பாதிப்பு எதுவும் இருப்பவர்கள் பொதுவெளியில் செல்லும்போது முகக் கவசம் அணிந்து சென்றால் நல்லது. சானிடைசர் பயன்படுத்திக் கொள்வது மிகவும் நல்லது. எந்த நோய்கள் இருந்தாலும் தொற்றும். ஆனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு நான்கு முறை கை கழுவினால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அடிக்கடி கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒன்றிய அரசு கூட பெரும் பாதிப்பு இல்லை என்று கூறியிருக்கிறது. இந்த வைரஸ் பாதிப்புக்காக மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் எதுவும் தேவை இல்லை.

HMPV Virus: எங்கு பரிசோதனை செய்யலாம்?

இந்த வைரஸை பொருத்தவரை எந்த சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தாலே போதும். காய்ச்சல், சளி உள்ளவர்கள் வைரஸ் குறித்து பரிசோதனை மேற்கொள்ள தேவையில்லை. உடல் நலம் குறைவாக இருப்பவர்களுக்கு எந்த வைரஸ் ஆக இருந்தாலும் தாக்கும். பரிசோதனை மையம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் இது போன்ற பாதிப்பு இருந்தால் அரசு தெரிந்து கொள்ளும்" என்றார். 

மேலும் படிக்க | HMPV Virus | பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் -தமிழக அரசு உத்தரவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News