HMPV Virus Latest News: உலக நாடுகளை புரட்டிப்போட்டு, உலக மக்களின் வாழ்வை பல இன்னல்களுக்கு ஆளாக்கிய கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தை தற்போதுதான் மக்கள் மறக்கத் தொடங்கியுள்ளனர். அதற்குள் கோவிட் 19 தொற்று தொடங்கிய அதே நாடான சீனாவில் தோன்றியுள்ள மற்றொரு தொற்று உலக மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. சீனாவில் நூற்றுக்கணக்கான மக்களை பாதிப்புக்குள்ளாக்கியுள்ள ஹியூமன் மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) படிப்படியாக உலகின் பிற நாடுகளிலும் பரவி வருகிறது.
HMPV in India: இந்தியாவில் HMPV வைரஸ்
இந்தியாவில் HMPV வைரஸால் இதுவரை 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரு, அகமதாபாத் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் பற்றி உறுதியான செய்திகள் கிடைத்துள்ளன.
HMPV: சுவாச மண்டலத்தை பாதிக்கும் ஹெச்எம்பிவி வைரஸ்
இந்தியாவில் HMPV வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இது குறித்த முழுமையான விழிப்புணர்வு இருக்க வேண்டியது மிக அவசியமாகிறது. இந்த வைரஸ் முக்கியமாக சுவாச மண்டலத்தை பாதிப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். அதன் அறிகுறிகள் பொதுவான காய்ச்சலைப் போலவே இருக்கலாம். இருப்பினும், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் மற்றும் சிறு குழந்தைகளில் இது கடுமையான தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகின்றது.
HMPV: ஹெச்எம்பிவி வைரஸ் முதலில் எந்த உறுப்பை பாதிக்கும்?
- இந்த வைரஸ் முதலில் நுரையீரல் மற்றும் காற்றுப்பாதைகளை குறிவைப்பதாக சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
- இந்த தொற்று சுவாச மண்டலத்தின் செல்களை சேதப்படுத்துகிறது.
- இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகின்றது.
- இருமல் மற்றும் பிற பிரச்சனைகளும் இதன் காரணமாக ஏற்படுகின்றன.
- பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள், சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆகியோருக்கு இந்த தொற்று வேகமாக பரவி தீவிர சுவாச நோயை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளது.
HMPV பாதிப்பால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழ்கின்றன?
- சுவாசிப்பதில் சிரமம்: HMPV வைரஸ் சுவாச மண்டலத்தை பாதிக்கிறது. இது சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும். இந்த பிரச்சனை சிறு குழந்தைகளில் மிகவும் தீவிரமாக இருக்கும் என கூறப்படுகின்றது.
- அதிக காய்ச்சல் மற்றும் சோர்வு: நோய்த்தொற்றின் ஆரம்பத்தில், அதிக காய்ச்சல், தலைவலி மற்றும் உடலில் பலவீனத்தை உணர நேரிடலாம்.
- தொண்டை புண் மற்றும் சளி: HMPV தொண்டையையும் பாதிக்கிறது. இதனால் தொண்டை புண், வறட்டு இருமல் மற்றும் சளி ஆகியவை ஏற்படுகின்றன.
- சுவாச சிக்கல்கள்: தொற்று அதிகரிக்கும் போது, மூச்சுக்குழாய் அழற்சி (Bronchitis), நிமோனியா (Pneumonia) மற்றும் மூச்சுக்குழாய் அடைப்பு போன்ற கடுமையான பிரச்சினைகள் ஏற்படலாம்.
- உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை: தொற்று தீவிர நிலையை அடையும் சந்தர்ப்பங்களில், உடலில் ஆக்ஸிஜன் அளவு குறையக்கூடும். இது ஹைபோக்ஸியாவுக்கு வழிவகுக்கும்.
HMPV: தடுப்பு நடவடிக்கைகள் என்ன?
HMPV தொற்றை தவிர்க்க, சில முக்கிய பாதுகாப்பு நடைவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
- முழுமையான தூய்மையை கடைபிடிக்க வேண்டும்.
- நெரிசலான இடங்களைத் தவிர்க்க வேண்டும்.
- நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருப்பது முக்கியம்.
- சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மீது சிறப்பு கவனம் தேவை.
இந்தியாவில் HMPV வைரஸ்: அரசு மற்றும் மருத்துவர்களின் ஆலோசனை
இந்தியாவில் HMPV வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சமீபத்தில் வேறு எந்த நாட்டிற்கும் பயணம் செய்ததற்கான பதிவுகள் இல்லை என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுவாசிப்பதில் சிரமம் அல்லது வேறு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுமாறு மருத்துவர்களும், மத்திய, மாநில அரசுகளும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.
மேலும் படிக்க | HMPV Virus | பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் -தமிழக அரசு உத்தரவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ