தமிழக அரசு மிக தவறான பாதையில் செல்கிறது - தமிழிசை சௌந்தர்ராஜன்!

நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும், தி.மு.க நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுமா? இங்கு என்ன ஆட்சியை நடந்து கொண்டு இருக்கிறது? கேட்டால் ஆளுநர் பிரிவினைவாதத்தை தூண்டுகிறார் என்று கூறுகிறீர்கள் - தமிழிசை சௌந்தர்ராஜன்

Written by - RK Spark | Last Updated : Jan 7, 2025, 02:22 PM IST
  • மிகத் தவறான பாதையில் தமிழக அரசு செல்கிறது.
  • பொங்கலுக்கான கொண்டாட்ட தொகை எங்கே?.
  • பாஜக தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி.
தமிழக அரசு மிக தவறான பாதையில் செல்கிறது - தமிழிசை சௌந்தர்ராஜன்! title=

கோவை விமான நிலையத்தில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், பா.ஜ.க மற்றும் எதிர்க் கட்சிகளின் போராட்டங்களுக்கு எப்பொழுதுமே அனுமதி கிடையாது. பெண் தலைவர்கள் எப்பொழுதுமே வீதியில் இறங்கி போராட அனுமதி கிடையாது. தி.மு.க ஆட்சி ஒரு சர்வாதிகார ஆட்சி, மத்திய அரசு தமிழக அரசுக்கு எதிரான மனநிலையில் நாங்கள் இல்லை என எப்பொழுதோ கூறி விட்டது. ஆனால் தி.மு.க சார்ந்த கட்சிகளுக்கும் தி.மு.க வுக்கும் போராட எப்பொழுதுமே அனுமதி உண்டு. ஆனால் இன்று தேசிய கீதம் உதாசீனப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதுக்கு ஆளுநர் ஒரு கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார், ஆனால் நீங்கள் அவரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதற்கு எல்லா இடங்களிலும் அனுமதி கொடுத்திருக்கிறீர்கள்.

மேலும் படிக்க | Live: இன்றைய சட்டப்பேரவையில் என்ன நடக்கும்? நேபாளத்தில் நிலநடுக்கம், சென்னையில் HMPV வைரஸ் - முக்கிய செய்திகள்!

நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும், தி.மு.க நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுமா? இங்கு என்ன ஆட்சியை நடந்து கொண்டு இருக்கிறது, கேட்டால் ஆளுநர் பிரிவினைவாதத்தை தூண்டுகிறார் என்று கூறுகிறீர்கள். தேசிய ஒற்றுமைக்கான தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுங்கள் என்று சொன்னால் அதை பிரிவினைவாதம் என்று புதிய அர்த்தத்தை தமிழக அரசால் தான் கற்பிக்க முடியும். வேங்கை வயல் பிரச்சனையை நீங்கள் தீர்த்தீர்களா, ஆண்ட பரம்பரை என்று உங்கள் அமைச்சர் ஒருவரே ஜாதக பாகுபாடுகளோடு பேசுகிறார். அதை கண்டித்துவீர்களா, வேறுபாடையும், பிரிவினைகளையும் ஏற்படுத்துவது தி.மு.க அரசு தான் அதை கண்டிக்காதது முதலமைச்சரின் தவறு.

ஆளுநர் தேசிய கீதத்திற்காக ஒரு கோரிக்கை வைத்தார், அதை நிராகரித்து விட்டு இன்று அவருக்கு எதிராகவே ஆர்ப்பாட்டம். தமிழகத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருக்கிற பெண்களுக்கு எதிராக குற்றம் நடந்து கொண்டு இருப்பதை மறைப்பதற்காக இன்று ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள். அதனால் தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டை நான் வன்மையாக கண்டிக்கிறேன் இதற்கு தமிழக அரசு நிச்சயம் பதில் சொல்லியாக வேண்டும். கடந்த 10 நாட்களில் ஆயிரக் கணக்கான தலைவர்களும் தொண்டர்களும் கைதாகினர். தமிழக தெருக்களில் கட்சித் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது, ஆனால் ஆளும் கட்சிக்கு அனுமதியா என்ற கேள்வி கேள்வி எழுகிறது. நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்யப் போகிறோம் என்று கூறினால் ஐந்து நாட்களுக்கு முன்னரே அனுமதி பெற வேண்டும் என்று கூறுகிறீர்கள்.

நேற்று அனுமதி பெற்று இன்று ஆர்பாட்டம் நடத்துகிறார்கள். தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் குரல்வளை தற்போது நசுக்கப்படுகிறது, தமிழகத்தில் ஜனநாயகம் இல்லை என்ற குற்றச்சாட்டை நான் முன் வைக்கிறேன் என தெரிவித்தார். தமிழ்நாட்டில் யார் அந்த சார் என்று கேட்கும் போது, தமிழகத்தில் யார் அந்த பாட்டி என்றும் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். பொங்கல் தொகுப்பில் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை, அதனால் அந்தப் பாட்டி முதலமைச்சரின் மீது ஏதோ ஒரு கோபத்தில் பேசியிருக்கிறார். அதை அரசியல் சாராத ஒரு தம்பி படம் எடுக்கிறார். அவரை கைது செய்கிறீர்கள் என்றால், கருத்து சுதந்திரத்தை நீங்கள் எவ்வளவு நசுக்குகிறீர்கள். தற்போது அந்த எதிர்ப்பை தெரிவித்த பாட்டி யார்? என்று தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.

எதிர்க்கட்சிகள் யார் அந்த சார்? என்று கேட்கிறார்கள். ஆளுங்கட்சி யார் அந்த பாட்டி என்று கேட்கிறார்கள். இங்கு கருத்து சுதந்திரம் முற்றிலுமாக நசுக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணே ஒருவர் பேசியதாக கூறுகிறார், ஆனால் நீங்கள் ஏன் உண்மையை மறைத்து ஓடி ஒளிகிறீர்கள். முதலமைச்சர் வரம்பு மீறி ஆளுநரை பற்றி ஒரு ட்வீட் போடுகிறார். ஆனால் அண்ணா பல்கலையில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று ஏன் இதுவரையும் வாய் திறக்கவில்லை. ஆளுநருக்கு தமிழகத்தில் தன்னுடைய கருத்தை சட்டமன்றத்தில் கூறுவதற்கு உரிமை இருக்கிறதா இல்லையா ? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். நான் பாண்டிச்சேரியில் ஆளுநராக இருந்த பொழுது கூட தேசிய கீதம் பாடப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் அதன் பின்பு தான் உரையை ஆரம்பிப்போம் என தெரிவித்தார்.

மேலும் படிக்க - இந்தியாவிலும் பீதியை கிளப்பும் HMPV வைரஸ்... செய்ய வேண்டியதும்... செய்யக் கூடாததும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News