வெள்ள அபாய எச்சரிக்கை! 35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரி இன்று மாலை திறப்பு

இன்று மாலை பூண்டி ஏரி திறக்கபட உள்ளதால், கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 27, 2020, 02:57 PM IST
  • 35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர்மட்டம், தற்போது 33 அடி ஆக உயர்ந்துள்ளது.
  • இன்று மாலை 5 மணிக்கு பூண்டி ஏரியில் இருந்து 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
  • 1944 ஆம் ஆண்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் கொசத்தலையர் நதியோரத்தில் பூண்டி ஏரி கட்டப்பட்டது.
வெள்ள அபாய எச்சரிக்கை! 35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரி இன்று மாலை திறப்பு title=

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர்மட்டம், தற்போது 33 அடி ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஏரிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், நீர்மட்டம் மேலும் உயரும்  என்பதால், இன்று மாலை 5 மணிக்கு பூண்டி ஏரியில் இருந்து 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனையடுத்து கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் இருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் உள்ள சென்னை (Chennai) மாநகரத்திற்கான முக்கிய நீர் ஆதாரமாக பூண்டி ஏரி (Poondi Lake) உள்ளது. 1944 ஆம் ஆண்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் கொசத்தலையர் நதியோரத்தில் 2573 டி.எம்.சி. திறன் கொண்ட நீரை சேமித்து வைப்பதற்கும் பூண்டி ஏரி (பின்னர் சத்தியமூர்த்தி சாகர் என பெயரிடப்பட்டது) கட்டப்பட்டது.

ALSO READ |  புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி வரும்: வானிலை மையம்!!

நிவர் புயல் தீவிரம் குறைந்துள்ள நிலையில், மேலும் ஒரு புதிய புயல் உருவாகும் எனவும், அதனால் அதிக அளவில் மழை பெய்யும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு (Chenai IMD) மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி வரும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது (Rain) என சென்னை வானிலை ஆய்வு மையம் (Regional Meteorological Centre) தெரிவித்துள்ளது. 

அதேபோல நிவர் சூறாவளி (Nivar Cyclone) புயல் காரணமாக, தமிழ்நாட்டில் குறைந்தது 3 பேர் உயிரிழந்தனர். 1,000 க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. வியாழக்கிழமை பெய்த கனமழையைத் தொடர்ந்து சில தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.  நிவர் புயலில் இருந்து நிவாரணம் எப்போது கிடைக்கும் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கும் சமயத்தில், அடுத்த வாரத்தில் மற்றுமொரு புயல் வரலாம் என்ற வானிலை மையத்தின் செய்தி மக்களின் கவலைகளை அதிகரித்துள்ளது. 

ALSO READ |  29 ஆம் தேதி மீண்டும் தமிழகத்தை தாக்க உள்ள மற்றொரு புயல்: எச்சரிக்கும் IMD

நவம்பர் 24 முதல் வில்லுபுரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பேருந்து போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடங்கின. மாநிலத்தில் விமான சேவை, மெட்ரோ ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News