கிட்டத்தட்ட ஒரு சதுரங்க ஆட்டத்தைப் போல அதிமுகவில் அடுத்தடுத்த திருப்பங்களுடன் காய்கள் நகர்த்தப்படுகின்றன. ஓ.பன்னீர்செல்வத்தின் தரப்பிலும், எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளும், அறிக்கைகளும், நீக்கங்களும், பேட்டிகளும் அப்படித்தான் இருக்கின்றன.
மேலும் படிக்க | ராஜபக்சேவின் நிலைமைதான் எடப்பாடி பழனிசாமிக்கும் - ஆருடம் கூறும் தினகரன்
இதனிடையே, இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்றபின் முதல்முறையாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டைக்கு வருகை தந்துள்ளார். அவரை கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் இரா.குமரகுரு தலைமையிலான அதிமுகவினர் மேளதாளங்களுடன் வரவேற்றனர். இந்த விழாவில் தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
‘ஒற்றைத் தலைமை என்பது தொண்டர்களின் குரல். உங்கள் பேராதரவோடு எனக்கு வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சில பேர் நம்முடைய இயக்கத்தில் இருந்து கொண்டு அதிமுகவை அழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். சில பேர் செய்த சதியினால்தான் கடந்த காலத்தில் நம்மால் ஆட்சியைப் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைக்கு, யார் யாரெல்லாம் அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு தடையாக இருந்தார்களோ, அந்தத் தடைக் கற்கள் எல்லாம் உடைத்து எரிக்கப்பட்டது.
தமிழகத்தை ஆட்சி செய்துவரும் மு.க.ஸ்டாலின் அவர்கள் கழகத்தை முடக்க பார்க்கிறார். இன்றைக்கு நமது துரோகிகளோடு சேர்ந்து கொண்டு எம்ஜிஆர் மாளிகையை சீல் வைத்திருக்கிறார்கள். தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருவது திமுகவின் அவல சட்ட ஒழுங்கு சீர்கெட்ட ஆட்சி. நமது எதிரிகளான திமுகவுடன் கைகோர்த்து கழகத்திற்கு துரோகம் செய்த ஓ.பன்னீர்செல்வம், திமுகவின் பீ டீமாக செயல்படுகிறார். எம்.ஜி.ஆரால் துவங்கப்பட்ட அதிமுகவை சில துரோகிகள் அழிக்க நினைத்தால் அவர்கள் அழிந்துவிடுவார்கள்.
இலங்கையில் குடும்ப ஆட்சி நடத்திய ராஜபக்சே குடும்பத்தினர், எப்படி அந்த நாட்டு மக்களின் எதிர்ப்பால் நாட்டை விட்டே ஓடியுள்ளார்களோ, அதேபோல் விரைவில் இந்த திமுகவினரும் செல்வார்கள். தொண்டர்களால் ஆன கட்சி அதிமுக. தொண்டர்களால்தான் நான் இடைக்கால பொது செயலாளர் ஆனேன். இதுவரை எனக்காக காத்திருந்த அனைத்து தொண்டர்களுக்கும் நன்றி’
என்று தெரிவித்தார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ