மக்களவை தேர்தலை முன்னிட்டு DMK சார்பில் விருப்ப மனு விநியோகம்!!

மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் இன்று தொடங்குகிறது!

Last Updated : Feb 25, 2019, 08:52 AM IST
மக்களவை தேர்தலை முன்னிட்டு DMK சார்பில் விருப்ப மனு விநியோகம்!! title=

மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் இன்று தொடங்குகிறது!

சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்களைப் பெற்று பூர்த்தி செய்து மார்ச் ஒன்று முதல் ஏழாம் தேதி மாலை 6 மணிக்குள் வழங்கலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்திருந்தார். இதேபோல் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோரும் விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் அதற்கான விண்ணப்பதை பூர்த்தி செய்து அடுத்த மாதம் 1-ம் தேதி காலை 10 மணி முதல் 7-ம் தேதி மாலை 6 மணிக்குள் கட்சி தலைமை அலுவலகத்தில் அளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் விண்ணப்பம் செய்வோருக்கு அவர்கள் செலுத்திய விண்ணப்பக் கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

Trending News